முகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம் இடைவெளி தேவையாம் பறவையின் சிறகுகளாய் நாம் இனி அவர்கள் பார்ப்பது உடல் உஷ்ணம் காதல் உஷ்ணம் பார்த்திருந்தால் தெறித்திருக்கும் வெப்பமானி தூறலும் வானவில்லும் தனித்தனி அல்லவே ஒன்றும் ஒன்றும் இரண்டு சிலருக்கு பதினொன்று சிலருக்கு பெருக்கல் நமக்கு நாவலாகக் கிடைத்தாய் அட்டைப் படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் எப்போது பிரிப்பது எப்போது படிப்பது வண்ணங்களும் தூரிகைகளும் தயார் இனிமேல்தான் உன்னைக் கண்டெடுக்க வேண்டும் இரவுக்காக காத்திருக்கிறேன் ஓர் ஆந்தையாக […]
எஸ் பி பி மூன்றெழுத்தா? முத்தமிழா? ஆயிரம் நிலாக்களை அழைத்து வந்தாய் அத்தனைக்கும் எப்படி அமாவாசை? பொத்தி வச்ச மல்லிகை மொட்டு கருகியது நியாயமோ? என் மின்னல் எங்கே? தேடுகிறது இடி என் வானவில் எங்கே? தேடுகிறது தூவானம் ஒரு தாலாட்டு நின்றது உலகெங்கும் அழுகின்றன குழந்தைகள் குயில்களுக்கு குரல் தந்துவிட்டு துயில் கொண்டது நியாயமோ? ஒரு கடல் எப்படி கண்ணாடிக்குள்? உன் நாவில் மட்டும் எப்படி நவரசங்களின் நடனம்? நிசப்தமாய் நந்தவனம் காதல் பறவைகள் ஊமையாகிவிட்டனவா? […]
விதையிலிருந்து பிறந்தோம் உமிகளைத் தொலைத்துவிட்டோம் நம் மரப்பாச்சி பொம்மைகளைக் கறையான் தின்றுவிட்டது மழலையைத் தொலைத்துவிட்டோம் புத்த்க மூட்டைகளில் நம் மயிலிறகைத் தொலைத்துவிட்டோம் ‘ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ராசா…….’ நாம் சொன்ன கதைகளின் ராசாராணிகள் எங்கோ அனாதைகளாய் அலைகிறார்கள் பாரம்பரியம் தொலைத்துவிட்டோம் மண் தொட்டிகளில் வாழைக்கன்றுகள் நிலங்களைத் தொலைத்துவிட்டோம் மின்மயச் சந்தையில் உழைப்பைக் கேட்பாரில்லை வியர்வையைத் தொலைத்துவிட்டோம் செடிகளுக்கெல்லாம் செயற்கைச் சினைகள் இயற்கையைத் தொலைத்துவிட்டோம். சர்க்கரையை விட சர்க்கரை மாத்திரைகள் அமோக விற்பனை நோயிடம் உடலைத் […]
சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் தாக்கியிருக்கிறது சிலரை நிர்வாணமாக்க முயன்று என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது என் நாட்காட்டியின் இன்றைய தாளையே கிழித்திருக்கிறது என் எழுத்தையே அமிலமாய் எரித்திருக்கிறது அவிழ்க்க வேண்டிய முடிச்சுக்களை இறுக்கி யிருக்கிறது விடை சொல்லாமல் வினாவாகவே நின்றிருக்கிறது முளைவிதைக்கு வெந்நீராகி யிருக்கிறது நெய்து முடித்த பட்டுச்சேலையில் தீப்பொறியாய் விழுந்திருக்கிறது ஊமைக் காயங்களால் பலரை ஊனப்படுத்தி யிருக்கிறது சுகமான பயணத்தை […]
என் கவிதைகளின் விதையாக ஒரு சொல் சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு சாம்பலாகாமல் திரும்பியது ஒரு சொல் என் தூக்கம் தின்று உயிரை மென்று உதிர்ந்த நட்சத்திரமாய் வந்து உட்கார்ந்தது ஒரு சொல் நிலவின் கரைகளைக் கழுவிவிட்டு வந்தது ஒரு சொல் கடலின் ஆழத்தோடு கதைபேசி மீண்டது ஒரு சொல் மேகத்துண்டாக வானவில்லோடு வந்தது ஒரு சொல் ஆவியாகி மீண்டு மழையாக இறங்கி ‘நலம்’ கேட்டது ஒரு சொல் வானத்தின் முகட்டில் இளைப்பாறி வந்தது. ஒரு சொல் கானல்நீரைத் தொடர்ந்து […]
விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் இன்று இப்படித்தா னென்று ஆசைப்படுவோம் ஆகும் பொருளாதாரங்கள் புடைத்து நிமிரும் நாள் பாச வீணைகள் பந்தம் இசைக்கும் நாள் சூழும் பகையாவும் சொடுக்கில் விலகும் நாள் தனிமை முகில்களை விமானத் தோழிகள் தழுவும் நாள் புண்ணகை யாவும் புன்னகை ஆகும் நாள் வானமகள் வாழ்த்திசைக்க வான்குடைகள் ஆடும் நாள் ஏனென்ற கேள்விக்குறியின் இடுப்பு நிமிரும் நாள் அழுகின்ற கண்ணீரெல்லாம் ஆனந்தம் ஆகும் நாள் இந்த நாள் இப்படித்த்தானென்று அலைகள் படைகள் […]
முகத்துக்கு நேரே முகம் பார்க்கும் கண்ணாடி இது என்ன இடமாறு தோற்றப் பிழை சுயம் உள்ளே பிம்பம் வெளியே சிறகு முளைத்தது பிம்பத்துக்கு பொம்மையானது சுயம் பிம்பங்கள் சேர்ந்து தேசம் கண்டது அது ‘சூம்’ என்றானது சூமின் கைதியாய் சுயம் ஆனது பாலைவனமானது சுயம் கானல்நீரானது விடுதலை கண்ணாடி பார்த்தது சுயம் அங்கே பிம்பம் காணவில்லை ‘ஏய் நீ எங்கே போனாய்’ ‘லண்டனில் பேசிக் கொண்டிருக்கிறேன்’ ‘நான் என்ன செய்வது’ ‘தூங்கு’ அமீதாம்மாள்
அட மழை அவசர வேலை ‘க்ராப்’ ஐ அழைத்தேன் வந்தார். சென்றேன் சேருமிடம் சேர்ந்தேன் சேர்ந்ததும்தான் புரிந்தது காசுப்பையும் மறந்தேன் கைப்பேசியும் மறந்தேன் காசு தருவ தெப்படி? காகிதம் ஒன்றில் கைப்பேசி எண் எழுதி ஓட்டுநர் தந்தார் பின் சொன்னார் ‘பேநௌ’ வில் அனுப்பு பிரச்சினை இல்லை’ அய்யய்யோ!! அந்தக் காகிதத்தை எங்கே வைத்தேன்? அமீதாம்மாள்
மரத்தின் வாழ்க்கை மகத்தானது ஊன்றிய இடமே உலகம் உலகம் அங்கு ஒடுங்கும் கொடியையும் தாங்கும் இடியையும் தாங்கும் மண்ணும் மழையும் காற்றும் கதிரவனும் கைகட்டி நிற்கும் அளந்து பெறாது அளந்து தராது கேட்டுப் பெறாது கேட்டுத் தராது விடியலை இருளை தளிரால் வாழ்த்தும் சருகால் வணங்கும் பறவைகள் பூச்சிகள் தான் பெற்ற பிள்ளைகள் கனிகள் தந்து குலத்தினைக் காக்கும் நிழல் தரும் மழை தரும் மனிதனுக்காக உயிரையே தரும் மரம் மனிதனுக்குச் சொல்கிறது ‘என்னைப் போல் இடப்பெயர்ச்சி […]
வைரஸ் தீ… விட்டில் மக்கள்…. இது காட்டுத் தீ அல்ல வீட்டுத் தீ என்ன செய்வது? விறகாகி எரிவதா? விலகி அணைப்பதா? சாம்பலாவதா? சரித்திரமாவதா? அடுத்த தலைமுறைக்கு நாம் விதையா? சிதையா? இதோ…. நாடு கேட்கிறது பொருள் கேட்கவில்லை ‘புரிந்துகொள்’ என்கிறது விலை கேட்கவில்லை ‘விலகி இரு’ என்கிறது கட்டியதைக் காப்பாற்ற ‘வீட்டிலிரு’ என்கிறது எல்லார் கையிலும் குவளைப் பால் குடம் நிரப்புவோம் ஒரு கிண்ணம் விஷமானால் குடம் பாலும் கொடு விஷம் என்ன செய்யப்போகிறோம்? முடிவெடுக்கும் […]