முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com ஞானம் என்பது அறிவு என்பதாகும். கற்றலால் பெறும் அறிவிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஐம்புலன்களையும் அடக்கி இறைவனைக் குறித்த சிந்தனையுடன் தவமியற்றி இறைவனது அருளால் மெய்யறிவு பெறுதலையே ஞானம் பெறுதல் என்று சமய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதனைத் தன்னை உணர்தல் என்றும் வழங்குவர். தவமிருந்தால் மட்டுமே ஞானத்தைப் பெற முடியும். தவத்தின்போது கடுமையான சோதனைகள் பல ஏற்படும். அவற்றில் மனதை […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமானால் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டும். அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்து, அவற்றைத் துறத்தலே துறவாகும். இத்துறவு வாழ்க்கையை தவ வாழ்க்கை என்று குறிப்பிடுவர். சீவகசிந்தாமணியில் துறவு வாழ்க்கை பற்றிய செய்திகள் நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளன. அச்சணந்தி முனிவரின் துறவு, சீவகனின் தாயான விசயை, சுநந்தையின் துறவு, அசோதரன் மனைவி துறவு, சீவகன் அவனது மனைவியர், அவனது […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலையாகி முக்தியடையும் வழியாகிய இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையையே வீடுபேறு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வுயிர் பிறவிப் பிணிகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதற்கு நற்காட்சி, சீலம், தானம் ஆகியவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் வேண்டும். இம்மூன்றையும் சமணசமயம் வீடுபேறு அடைவதற்கான வழிமுறைகளாக எடுத்துரைக்கின்றது. நற்காட்சி நற்காட்சி என்பது அருகப்பெருமானின் தாமரை மலர் போன்ற பொன்னடிகளைப் பணிந்து அவன் இன்னருள் பெறச் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com நாம் செய்யும் செயல்களுக்கேற்ப பிறவிகள் என்பது தொடரும். இது அனைத்து மக்களாலும் நம்பப்படுகின்ற ஒன்றாகும். மேலும் அவரவர் வினைகளுக்கு ஏற்ப அவர்களின் இறப்பிற்குப் பின்னர் நற்கதி அல்லது நரக கதி என்பது கிடைக்கும். நல்லது செய்தால் நல்ல கதியும் தீயது செய்தால் நரக கதியும் கிடைக்கும். இங்கு கதி என்பது உயிர்கள் அடைகின்ற நிலையைக் குறிக்கும். சிந்தாமணியில் நரககதி, […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com இந்தியாவில் தோன்றிய பழைமையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்மைகளை எடுத்துரைக்கும் சமயமாக சமணம் விளங்குகின்றது. வாழ்வியல் உண்மைகளையே வாழ்வியல் தத்துவங்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சமண சமயம் எடுத்துரைக்கும் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை சிந்தாமணிக் காப்பியம் கதைவழியாகவும் கருத்துக்கள் வழியாகவும் தெளிவுற விளக்கிச் செல்கின்றது. சீவகன் சமணத் தத்துவங்களை அறிய விரும்பினான். தன் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மனிதனையும் அவனது வாழ்வையும் வழி நடத்துபவைகளாக நம்பிக்கைகள் விளங்குகின்றன. சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் மக்களிடம் காணப்பட்ட பலவகையான சமய நம்பிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நல்வினை, தீவினை, சொர்க்கம் நரகம், தேவ வாழ்க்கை, மந்திரங்கள், கடவுளுக்கு பொருள்களைக் கொடுத்தல், தெய்வம் மனித உருவில் வருதல் உள்ளிட்ட பல சமய நம்பிக்கைகள் திருத்தக்கதேவரால் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. இருவினை, நரகம் மனிதன் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கேற்ப அவனுக்குப் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது சீவகசிந்தாமணிக் காப்பியமாகும். இக்காப்பியம் கவிச்சிறப்பாலும் கட்டமைப்புக் கூறுகளாலும் சிறந்து விளங்குகின்றது. இதைத் தமிழறிஞர்கள் பலரும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இச்சிந்தாமணிக் காப்பியத்தை நச்சினர்க்கினியரின் உரையோடு பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் ஆவார். சீவகசிந்தாமணியின் சிறப்பினை, “சிந்தாமணியின் அருமை வரவர எனக்கு நக்கு புலப்படலாயிற்று. செந்தமிழ்க் காப்பியங்களுக்கு எல்லாம் அதுவே உரையாணி என்பதைத் தெரிந்து கொண்டேன்” என்று உ.வே.சா. […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்கோட்டை-1. சங்க காலத்தில் உழவே முதன்மையான தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏனைய மக்களைவிட நாகரிகத்தில் மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர், கடையர் கடைசியர் என்னும் சொற்கள் உழவர்கள் குறித்து ஆளப்படும் சொற்களாகும். கடையர் என்பார் வயல்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் என்று கருதலாம், இவர்கள் நிலமற்ற எளிய மக்களாக இருத்தல் வேண்டும். இவர்களின் வாழ்க்கையை பெரும்பாணாற்றுப்படை(206-246), மதுரைக்காஞ்சி(246-270), மலைபடுகடாம்(10-105) முதலிய பாடல்வரிகள் விரிவாக […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்கோட்டை. E.mail: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது.தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தேகொண்டது.தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறலாம். ஒரு மொழியில்முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற பவணந்தியாரின் கூற்று இதனைப் […]
தமிழாய்வுத்துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை-1 E-mail: Malar.sethu@gmail.com மனித வாழ்க்கை பொருளை மையமிட்டதாக அமைந்துள்ளது. பொருள் இல்லையென்றால் வாழ்க்கை என்பது பொருளற்றதாக மாறிவிடுகின்றது. வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவது பொருளே ஆகும். பொருளுள்ளவர்கள் சமுதாயத்தில் வலிமையுள்ளவர்களாக விளங்குகிறார்கள். பொருளற்றவர்கள் வலிமையிழந்து சமுதாயத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுப்பின் அடையாளமிழக்கின்றார்கள். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி, வழிப்படுத்தி மனத்தில் வலுவாக வாழ்வில் நம்பிக்கை கொள்ள வைப்பது பொருளே ஆகும். அரசன் முதல் கீழ்நிலையில் வாழும் கடைக்கோடி […]