author

தொடுவானம் 175. நண்பர்கள் கூடினால் ….

This entry is part 6 of 13 in the series 25 ஜூன் 2017

ஜோகூர் பேருந்து நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விரைவு பேருந்தில் ஏறினேன். அது முக்கால் மணி நேர பிரயாணத்தில் சிங்கப்பூர் குயீன்ஸ் ஸ்ட்ரீட் சென்றடைந்தது. அங்கு கோவிந்தசாமி காத்திருந்தான். அவன் முன்புபோலவே ஒல்லியாக இருந்தான். தோற்றத்தில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. அவன் ஹெண்டர்சன் மலையில் நகரசபை குடியிருப்பில் ப்ளோக் பதின்மூன்றில்  இருந்ததுபோலவே இருந்தான்.அப்போது நான் ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் அரங்கேற்றியபோது அவனுக்கு முதலில் டாக்டர் வேடம் தந்தேன். பின்பு அவனுடைய உருவம் பொருத்தமில்லை என்பதால் அதை மாற்றி […]

தொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை

This entry is part 2 of 14 in the series 18 ஜூன் 2017

பெண்ணைப் பார்க்க என்னை மலேசியா வரச்சொல்லி ஏர் இந்தியா விமான பிரயானச் சீட்டு அனுப்பியிருந்தார்கள். அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனக்கு விருப்பமான நாளில் பிரயாணம் செய்யலாம்.அதற்கு முன் சென்னை சென்று ஏர் இந்தியா அலுவலகத்தில் தேதியை நிச்சயம் செய்யவேண்டும். எனக்கு மலேசியா  சிங்கப்பூர் சென்றுவர ஆசைதான். அங்கு நண்பர்களைக் கண்டு வரலாம். லதாவையும் பார்க்கலாம். அவள் எந்த நிலையில் உள்ளாள் என்பது தெரியவில்லை. அப்பா சொல்வதுபோல் லாபீஸ் சென்று அந்தப்  பெண்ணையும் பார்த்து வரலாம். நான் சரியென்று […]

தொடுவானம் 173. அப்பாவின் அவசர அழைப்பு

This entry is part 1 of 11 in the series 11 ஜூன் 2017

போத்தனூரின் புது இல்லம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னந் தனியாக அமைதியான இயற்கைச் சூழலில் கோயம்புத்தூர் குளிர் தென்றலில் நாட்கள் இனிமையாகக் கழிந்தன. வேலை முடிந்து மீதி நேரத்தில் அந்த புதுக் குடிலில் தஞ்சம் கொண்டேன். மேசை மீது நான் படிக்கும் நாவல்களையும் கண் மருத்துவ நூல்களையும் வரிசையாக அடுக்கிவைத்தேன். படிக்கவும் எழுதவும் அதுபோன்ற ஓர் இடம் கிடைப்பது அபூர்வம். மனதில் இனம்காணாத ஒருவகையான நிம்மதி. எழுத அமர்ந்துவிட்டால் கற்பனை சிறகடித்துப் பறக்கும். இனி எனக்கு எந்த […]

தொடுவானம் 172. புது இல்லம்

This entry is part 6 of 11 in the series 4 ஜூன் 2017

கண் மருத்துவ வெளி நோயாளிப் பிரிவில் மூன்று மருத்துவர்கள் நோயாளிகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். அங்கேயே எனக்கு ஓர் இருக்கையும் மேசையும்  தரப்பட்டது. இனிமேல் அங்கு அமர்ந்துதான் நான் கண் சிகிச்சை செய்வேன். வேலை நேரம் காலை ஒன்பது முதல் மலை ஐந்து வரை.மதியம் ஒரு மணி நேரம் உணவு அருந்த வெளியில் சென்று வரலாம். நான் முதல் நாளே நோயாளிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். அனைத்துமே கண் தொடர்புடைய நோய்கள்தான். கூடுமானவரை நானே சமாளித்தேன். தெரியாதவற்றை அருகில் இருந்த மருத்துவர்களிடம் […]

தொடுவானம் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை …

This entry is part 8 of 19 in the series 28 மே 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை … அப்பா என்னுடன் கை குலுக்கினார். தங்கைகளை அணைத்துக்கொண்டார். அம்மாவைப் பார்த்து சிரித்தார். அண்ணி குழந்தை சில்வியாவை அவரிடம் அனுப்பினார். அவள் தயங்கியபடி அவரிடம் நடந்து சென்றாள் . பேத்தியை அவர் பாசத்துடன் தூக்கிக்கொண்டார். மோசஸ் சித்தப்பாவிடமும் செல்லக்கண்ணு மாமாவிடமும் அமர்ந்து பேசினார். கூடியிருந்த உறவினர்களிடமும் ஊராரிடமும் நலன் விசாரித்தார். அவர் அணிந்திருந்த ” கெள பாய் ” தொப்பியைக் கழற்றி திண்ணையில் வைத்தார். தலை […]

தொடுவானம் 170. அப்பா வந்துவிட்டார்.

This entry is part 2 of 15 in the series 21 மே 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 170. அப்பா வந்துவிட்டார். நான் பயிற்சி மருத்துவம் முடித்துவிட்டேன். இனி நான் ஒரு மருத்துவன். என்னுடைய பெயருக்குப் பின்னால் எம்.பி.பி.எஸ். என்று போட்டுக்கொள்ளலாம். என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அதோடு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் காத்திருந்தது. அப்பா சிங்கப்பூரிலிருந்து நிரந்தரமாக ஊர் திரும்புகிறார்! நான் படித்து முடித்து பயிற்சி மருத்துவமும் முடிக்கும்வரை அவர் பணியில் இருந்துள்ளார். சரியாக நான் முடித்தபின்பு அவரும் ஓய்வு பெற்றுவிட்டார். உண்மையில் இது ஓர் ஆச்சரியம்தான்! இனிமேல் அவர் […]

தொடுவானம் 169. சமூக மருத்துவப் பயிற்சி

This entry is part 9 of 11 in the series 14 மே 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 169. சமூக மருத்துவப் பயிற்சி சமூக மருத்துவப் பயிற்சி மூன்று மாதங்கள் தரப்பட்டது. இதை டாக்டர் வீ. பெஞ்சமின் தலைமையில் இயங்கிய சமூக மருத்துவப் பிரிவில் பெற்றேன். இந்த மூன்று மாதங்களும் மூன்று வெவ்வேறு இடங்களில் கழித்தோம். முதலாவதாக ஒரு மாதம் ஆந்திரா எல்லையில் உள்ள நகரி புத்தூர் சென்றேன். அங்கு தென்னிந்திய திருச்சபையின் கிராம மருத்துமனையில் பணி புரிந்தேன். அதன் தலைமை மருத்துவர் டாக்டர் புருஷோத்தமன்.அவர் அறுவை மருத்துவ நிபுணர். அவருடைய […]

தொடுவானம் 168.பறந்து சென்ற பைங்கிளி

This entry is part 6 of 14 in the series 7 மே 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 168.பறந்து சென்ற பைங்கிளி அவன் பெயர் புருஷோத்தமன். அவன் அவள் மீது மிகுந்த காதல் கொண்டுள்ளான் என்பது அவனின் பேச்சில் வெளிப்பட்டது. அதனால்தான் அவளை இழந்துவிட விரும்பாமல் உடன் லண்டனிலிருந்து ஓடோடி பறந்து வந்துள்ளான். முறைப்படிப் பார்த்தால் மேரி அவனுக்குதான் சொந்தம். சமுதாய வழக்கப்படி நிச்சயம் செய்துள்ளனர். அப்போது அவனைப் பார்த்து சம்மதம் தெரிவித்திருப்பாள். இப்போதோ அவள் என்னிடம் பழகியதால் அவனை வேண்டாம் என்கிறாள். இது இயல்பானதுதான். இந்த நிலை பல பெண்களுக்கு […]

தொடுவானம் 167 வாழ்வை வெறுத்தவள்

இது என்ன புது குழப்பம்? Treat என்னும் விருந்து வைக்கப்போய் அது tragedy என்னும் சோகத்தில் அல்லவா கொண்டுபோய் விட்டுவிட்ட்து? எனக்கு முன்பே இருந்த அனுபவங்கள் போதாதென்று இது வேறு புது அனுபவமா? பரவாயில்லை. இதுவும் எப்படிச் செல்லும் என்றுதான் பார்ப்போமே என்று துணிவு கொண்டேன். பின்னாளில் சுய சரிதை எழுதும்போது இதையும் சேர்த்துக்கொண்டால் அது மேலும் சுவையாக இருக்கும். முன்பே வேறொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள் மேரி. அவனும் அவளுக்காக காத்துள்ளான். இடையில் அது தெரியாமல் பிரவேசித்துள்ளேன். இதை […]

தொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி

This entry is part 6 of 11 in the series 16 ஏப்ரல் 2017

          பிரசவ அறையில் பயிற்சி மனோகரமாக மாறியது. பட்டு மேனியும் பருவ பரவசமும் மலர்ந்த புன்னகையும் கொண்ட மேரியின் துணையுடன் பிஞ்சு குழந்தைகளை வெளியில் கொண்டுவந்து உலகைக் காட்டும் பணி இன்பமாக மாறியது. இனி பிரசவம் எப்படியெல்லாம் பாப்போம் என்பதை விவரிப்பேன்.           பிரசவ வலி வந்ததும்தான் பெண்களை வார்டிலிருந்து பிரசவக் கூடத்துக்குக்  கொண்டு வருவோம். வலி வந்ததுமே பெரும்பாலும் பிரசவம் ஆகிவிடும். கட்டிலில் படுத்துள்ள பெண்களின் பிறப்பு உறுப்பில் விரலை விட்டு கருப்பையின் வாய் எவ்வளவு […]