author

மருத்துவக் கட்டுரை தொண்டைப் புண்

This entry is part 4 of 12 in the series 10 ஜனவரி 2016

             தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும். சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டுபண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில்  பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம்.           தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும். ஆனால் பெரியவரிடமும் இது பரவலாகக் காணப்படும். […]

தொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.

This entry is part 13 of 18 in the series 3 ஜனவரி 2016

” அனேட்டோமி ” என்னும் உடற்கூறு மனித உடலின் அனைத்து பாகங்களையும் அறுத்துப் பார்த்து, தொட்டுத் தடவி பயிலும் ஒர் அற்புதமான பாடமாகும். ( இப்போதெல்லாம் இதற்கு போதுமான உடல்கள் கிடைக்காத காரணத்தால் பிளாஸ்டிக் பொம்மைகளையும் உறுப்புகளையும் வைத்துக்கூட பயில்கின்றனர். ) இந்த பாடம் துவக்க காலங்களில் மேல்நாடுகளில் புழக்கத்தில் வந்தபோதுகூட இறந்தவர்களின் உடல்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இது எப்படி வழக்கில் வந்தது என்பதும் சுவையானதுதான். முறையான பல மருத்துவ ஆராய்ச்சிகளைப்போன்று உடற்கூறும் மேல்நாடுகளில்தான் உருவானது. […]

தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு

This entry is part 5 of 18 in the series 27 டிசம்பர் 2015

நீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் கழித்தது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. தனிமையிலேயே  வாழ்ந்து பழகிப்போன நான் உற்றார் உறவினருடன் உல்லாசமாக இருந்தேன். வயல்வெளி. தோட்டம், வைக்கோல்  போர், ஆடுமாடுகள், கிராம  மக்கள், குளம், ஆறு, குடிசைகள், கோவில் மத்தியில் பொழுது போனது இதமானது. நேரம் வாய்த்தால் கூண்டு வண்டியில் பால்பிள்ளையுடன் குமராட்சி சென்று வருவேன்,  அப்போது நான்கூட வண்டி ஓட்டுவேன். காளைகள் இரண்டும் பழகிவிட்டதால் என் சொல்லுக்கு கட்டப்பட்டன! அங்கு மீன் இறால் காய்கறிகள வாங்கி வருவோம். […]

வாய்ப் புண்கள்

This entry is part 6 of 23 in the series 20 டிசம்பர் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் வாய்ப் புண்கள் வாய்க்குள் உள் கன்னங்களிலும், பற்கள் ஈறுகளிலும் , உதடுகளின் உள்புறமும் சிறு வட்டவடிவில் தோன்றுபவை. இவை அதிகம் வலி தரும்.இவை மஞ்சள், சாம்பல், வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களிலும் தோற்றம் தரலாம். அதைச் சுற்றிலும் சிவந்து வீங்கி அழற்சி உண்டாவதால் வலி ஏற்படுகிறது.இதனால் சாப்பிடும்போதும், நீர் பருகும்போதும் வலி உண்டானாலும், அது தற்காலிகமானதே .சிறிது நாட்களில் (சுமார் இரண்டு வாரங்களில் ) அது தானாகவே ஆறிவிடுவதுண்டு. ஆனால் அதற்கு மேலும் […]

தொடுவானம் 99. கங்கைகொண்ட சோழபுரம்

This entry is part 22 of 23 in the series 20 டிசம்பர் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் 99. கங்கைகொண்ட சோழபுரம் அண்ணனும் அண்ணியும் குழந்தை சில்வியாயும் ஊருக்கு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது – கோகிலத்தைத் தவிர. அவளுக்கு அடிக்கடி வீட்டுக்கு வரமுடியாதே என்ற கவலை. அப்படியே அம்மாவுக்கு உதவுவதுபோல் வந்தாலும் என்னிடம் முன்புபோல் தாராளமாகப் பேசமுடியாது. ஊரில் அண்ணனுக்கு நல்ல மதிப்பு இருந்தது. அவர்தான் சுற்று வட்டாரத்தில் முதன்முதலாக கல்லூரி சென்று பட்டம் பெற்றவர். கல்விக்கு எப்போதுமே தனிச் சிறப்புதானே. வள்ளுவர்கூட கல்விக்கு ஓர் அதிகாரம் ஒதுக்கி அதன் […]

தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்

This entry is part 4 of 14 in the series 13 டிசம்பர் 2015

சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் உறவினரிடம் எனக்கு புது சட்டைகளும் சிலுவார் துணிகளும் அனுப்புபிவைப்பார் அப்பா. நான் அணிந்தது எல்லாமே சிங்கப்பூர் துணிமணிகள்தான். கோபுர சின்னம் சீன பனியன்கள், காலுறைகள், கைக்குட்டைகள் போன்றவையும் அவற்றில் அடங்கும்.  ( அனேகமாக நான் மருத்துவம் படித்து முடிக்கும்வரை இந்த நிலை நீடித்தது. )  அவருடைய நண்பர்கள் சிலர் வேறு ஊர்களுக்குத்  திரும்பினால்கூட அவர்களிடமும் துணிமணிகள் கொடுத்தனுப்புவார்.அவற்றை வாங்கிக்கொள்ள நான் திருவெண்காடு, பெரம்பலூர், திருச்சி போன்ற ஊர்களுச்குச் சென்று வந்துள்ளேன்..அவர்களின் வீடுகளில் எனக்கு […]

இடுப்பு வலி

This entry is part 2 of 14 in the series 13 டிசம்பர் 2015

உடலின் எடையைத் தாங்கி நடக்க உட்கார படுக்க உதவுவது நம்முடைய இடுப்பு. இது ஐந்து முதுகுத் தண்டு எலும்புகளால் அமைந்தது. இதை 1,2,3,4,5, இடுப்புத் தண்டு எலும்புகள் ( Lumbar Vertebra ) என்று அழைப்பதுண்டு. இவற்றின் நடுவில் வட்டமான தட்டையான இரப்பர் போன்ற தன்மைகொண்ட வடங்கள் ( intervertebral Disk )உள்ளன. இவை அதிர்ச்சியை உள்வாங்கும் பணியைச் செய்கின்றன. அதாவது ” ஷாக் அப்சார்பர் ” ( Shock Absorber ) போன்றவை. இந்த முதுகுத் […]

தொடுவானம் 97. பிறந்த மண்

This entry is part 8 of 17 in the series 6 டிசம்பர் 2015

  தரங்கம்பாடியில் தங்கியிருந்தபோது அண்ணியும் நானும் வேளாங்கண்ணி கோயில் சென்றுவந்தோம். அண்ணி மாதா மீது நம்பிக்கை கொண்டவர். நாங்கள் மெழுகுவர்த்தியும் மாலையும் வாங்கிச் சென்றோம். எனக்கு தேர்வில் வெற்றி கிட்டவேண்டும் என்று என்று அண்ணி வேண்டிக்கொண்டாராம். இதெல்லாம் ஒருவிதமான நம்பிக்கைதான். தேர்வில் தேறுவது நம் கையில் உள்ளது. ஒழுங்காகப் படித்தால் தேறலாம். படிக்காமல் சாமிக்கு காணிக்கைப் படைத்தால் போதுமானது என்று படிக்காமல் தேர்வுக்குச் சென்றால் தோல்வி நிச்சயம்தான்!           கோயிலிலிருந்து கடல்கரை வரை உள்ள வீதியின்  இரு […]

தொடுவானம் 96. தஞ்சைப் பெரிய கோயில்

This entry is part 1 of 15 in the series 29 நவம்பர் 2015

         . அத்தை மகள் என்மீது அளவற்ற பாசமழை பொழிந்தாள். அவளுடைய பிஞ்சு மனதில் அத்தகைய ஆசையை அத்தைதான் வளர்த்துவிட்டிருந்தார். அது தவறு என்று நான் கூறமாட்டேன். உறவு விட்டுப்போகக்கூடாது என்று தொன்றுதொட்டு நம் சமுதாயத்தில் நிலவிவரும் ஒருவித கோட்பாடு இது. அத்தைக்கு தன்னுடைய அண்ணன் மகன் மருமகனாகவேண்டும் என்ற ஆசை. அதுபோன்றுதான் அம்மாவுக்கும் தன்னுடைய அண்ணன் மகள் உமாராணி மருமகளாக வரவேண்டும் என்று ஆவல்! இடையில் அப்பாவின் மனதில் என்ன உள்ளது என்பது யாருக்கும் […]

மருத்துவக் கட்டுரை- மார்பக தசைநார்க் கட்டி ( பைப்ரோஅடினோமா ) ( Fibroadenoma )

This entry is part 11 of 15 in the series 29 நவம்பர் 2015

                                                                                             பெண்களுக்கு மார்பில் கட்டி உண்டானால் அது புற்று நோயாக இருக்குமோ என்ற பயம் வருவது இயல்பானது. அது நல்லதுதான். மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நம் பெண்களிடையே வளர்ந்துள்ளது நல்ல அறிகுறிதான். ஆனால் எல்லா மார்பகக் கட்டிகளும் புற்று நோயாக இருக்காது. புற்று நோய் இல்லாத சாதாரணக் கட்டிகளும் மார்பகத்தில் தோன்றலாம். அவற்றில் ஒன்றுதான் பைப்ரோஅடினோமா என்னும் தசைநார்க் கட்டி. மார்பில் தோன்றியுள்ள கட்டி எந்த வகையானது என்பதைத்  துவக்கத்திலேயே பரிசோதனை செய்து […]