author

வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி

This entry is part 10 of 13 in the series 25 அக்டோபர் 2020

எஸ்ஸார்சி விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ஒரு அற்புதமான கவிதைத்தொகுப்பு. தமிழக அளவில் பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது இந்நூல். நல்ல கதாசிரியர் வளவதுரையன். பல சிறுகதைத்தொகுப்புக்களை வாசகர்களுக்குத் தந்தவர். புதினங்கள் சிலவும் சிறப்பாகப்படைத்துள்ளார். எழுத்தாளர் பாவண்ணனுக்கு மிக நெருக்கமானவர். வளவனூரார்.. வளவனூர் மண்ணை மறக்காமல் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு எழுத்துலகில் வெற்றி நடை போடுகிறார். பெருமிதமாகவே இது என்றும் எல்லோருக்கும் இருக்கிறது கடலூர் மண் அற்புதமான மக்களைப்பெற்றுப் பலபெருமை கொண்டுள்ளது தமிழ் .இலக்கியச்செல்வர்கள் அங்கு இன்றும் ஏராளமானவர்களே.  நடு நாட்டு […]

மயக்கமா இல்லை தயக்கமா

This entry is part 3 of 8 in the series 3 மார்ச் 2019

– எஸ்ஸார்சி பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு விடுதலையை 1947ஆகஸ்டு 15 லே தந்தார்கள்.அல்லது நமது நாட்டு விடுதலையை நாமேபோராடிப் பெற்றோம் ஆனால் இந்திய .காவல் துறைமற்றும் சிறை நிர்வாக ச்சட்டங்களில் மாத்திரம்  சொல்லிக்கொள்ளும்படியாக எந்தவித மாற்றமும் இன்னமும் கொண்டுவரப்படவில்லை. அதுஏன்? .மாறி மாறி நாட்டை  இந்த தேசத்தை ஆள்பவர்களுக்கு இதுபற்றிய அக்கரை வரவேண்டிய நியாயம் எங்கே இருக்கிறது?மாநிலங்களிலே இடது சாரிகள்அல்லது பிறர் அவ்வப்போதுஎங்கேனும் வந்துபோனாலும் இது பற்றி அலட்டிக்கொள்வதால் அவர்களுக்கு ச்சுய லாபம் ஒன்றும் விளைந்துவிடாது. மாற்றம் கோரி […]

ஒண்ணும் தப்பில்ல

This entry is part 3 of 9 in the series 24 பெப்ருவரி 2019

-எஸ்ஸார்சி ஒரு எக்செல் சூபர் என் வசம். அதனை வைத்துக்கொண்டு முடிந்த வரைக்கும் இந்தப் பெருங்களத்தூர் ஊரைச்சுற்றிச் சுற்றி வருகிறேன். ஒரு பழைய வண்டி. செகண்ட் ஹேண்டும் இல்லை தேடு ஹேண்டுதான்.அப்படித்தான் என்னால் வாங்கவும் முடிந்தது. நாற்பதாயிரம் கிலோமீட்டர் ஓடிமுடித்தவண்டியை நாலாயிரம் கிலோமீட்டரே ஒடியிருப்பதாக ச்சொன்னார்கள். பேசத்தெரிந்தவர்களின் உலகம்தானே இது.சாமர்த்தியமாகத்தான் என் தலையில் அதனை க்கட்டிவிட்டார்கள்.என் ஆபிசுக்கு முன்னால் நிற்கும் இரும்பு கேட்டில் ஒரு பக்கமாக் சாய்ந்து நின்றுகொண்டு வேண்டா வெறுப்பாக எனக்கு ஒவ்வொருமுறை வ்வணக்கம் சொல்லும் […]

கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்

This entry is part 1 of 7 in the series 17 பெப்ருவரி 2019

எஸ்ஸார்சி எழுத்தாளர்கள் கையெழுத்துப்பிரதியாக எந்தப்படைப்பை வைத்திருந்தாலும் அதனைப்புத்தகமாகக்கொண்டுவருதல் என்பது இப்போதெல்லாம் குதிரைக்கொம்பாகிவிட்டது.எந்த புத்தக வெளியீட்டாளரும் படைப்பைக் கையெழுத்துப்பிரதியாக வைத்திருக்கும் ஒரு எழுத்தாளரைச் சட்டை செய்வது கிடையாது .’’ஹேண் ரைட்டிங்கை எல்லாம் படிக்கறதுக்கு ஆளுங்க எங்க இருக்காங்க. D T P பண்ணி வச்சி இருக்கிங்களா? என்பதேபதிப்பாளரின் கேள்வி.கையெழுத்தில் எழுதி எங்கே நமக்குக் கடிதம் வருகிறது.கடிதம் எழுதுதல் என்றால் என்ன என்றுதான் நமது பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் கேட்கிறார்கள் .ஈ மெயில் வந்தது பின்னர் எஸ் எம் எஸ், முக […]

அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.

This entry is part 3 of 8 in the series 10 பெப்ருவரி 2019

எஸ்ஸார்சி முன்பு ஒருகாலத்தில் டூ- ஜி அலைக்கற்றை பேரம் என்னும் பூதம் இந்தியாவைஆட்டிப்படைத்தது.. பிடறி பிடித்து உலுக்கியது.. அந்த பகாசுர பேரத்தில் என்ன எல்லோமோ இங்கு நடந்துவிட்டதாய் மக்கள் திணறிப்போயிருந்தார்கள்.ஒரு மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் தேர்தலையே அது திக்குமுக்குஆடவைத்தது. அழுக்குச்சட்டையே போடும் சாதாரண மனிதர்கள் கேட்டதுமே மலைத்துப்போய் நிற்கும் ஒரு எண்ணிற்கு எத்தனை பூச்சியம் உங்களுக்குத்தெரியுமா ? என்பதைத் தேர்தல்பிரச்சார மேடைதோறும் அரசியல்வாதிகள் முழங்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்தினார்கள். அந்த மாயமானை உலகுக்கு அறிவித்த இந்தியாவின் […]

பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி

This entry is part 4 of 10 in the series 20 ஜனவரி 2019

    பாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம் போன்றவை.தெளிந்த நடை அவருக்கு இயல்பாகவே எழுத்தில் உருக்கொள்கிறது.படித்த வரியை மீண்டும் ஒரு முறை படித்து மட்டுமே பொருள் கொள்வது என்கிற பேச்சுக்கு இங்கே இடமில்லை.கதையின் கரு நம்மோடு ஒட்டிகொண்டு விடுகின்றது. ஒரு வாசகன் கண்கள் பனிக்காமல் அவர் எழுத்துக்களை படித்துவிடமுடியாது. பாவண்ணனின் அந்தப் படைப்பு மனம் அது தானாக எழுதிக்கொண்டு போவதை வாசகன் படிக்கும்போது உண்ரமுடியும்.பாசாங்குத்தனம் அறியா எழுத்துக்கள் அவை. சாதாரண ஒரு எளிய மனிதனின் உள்ள நெகிழ்வை […]

வன்மம்

This entry is part 1 of 8 in the series 6 ஜனவரி 2019

‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’-அவ்வையார் ‘ஒரே வர்ணம்தான் அதுக்குன்னு நாம உட்டுட முடியாது’ மருமங்குடி கிராமத்து அண்ணனும் தம்பியும் பேசிக்கொண்டார்கள். பழைய அம்பாசிடர் காரின் டிக்கியில் தம்பியின் பெண். அவள் வெட்டுக்கொட்டகைக்குஏற்றப்படும் பன்றிக்குட்டியாய்கட்டிக்கிடக்கிறாள்.தம்பிபெற்ற ஒரே மகள். காவிரிக்கரை மீதுள்ள பெருநகரத் தனியார்க்கல்லூரியில் படித்துவந்தவள்.தம்பியின் எதிர்வீட்டுப்பையன் அவனும் அதே கல்லூரியில் படித்துவந்தான். இருவருக்கும் இடையே காதல், அந்தத் தீயை யார் மூட்டிவிட்டது.எதற்காக அதனைவளர்த்துவிட்டிருக்கிறார்கள்.அக்காதல் பயணம் நஞ்செனத் தொடர்ந்தது. ‘வாயில துணி வச்சி அடச்சி அவ […]

பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்

This entry is part 1 of 15 in the series 27 மே 2018

எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்’பருவம்’ என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன் மொழிபெயர்ப்பாளன் .மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய் அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை அவர் கன்னடத்திலிருந்து தமிழுக்குக்கொண்டு தந்தவர். ஊரும் சேரியும்,கவர்மென்ட் பிராம்ணன்,பலிபீடம்,நாகமண்டலம், பசித்தவர்கள்,அக்னியும் மழையும்,ஓம்நமோ,பருவம் இன்னும் இப்படி எத்தனையோ. பைரப்பாவின் ‘பருவம்’ பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் சிலிர்த்துக்கொண்டு வெளிப்பட்டு வாசகனை ச்சிந்தனைச்சாகரத்தில் அமிழ்த்திப்பார்க்கிறது.அறிவினை விரிவு செய்,அகண்டமாக்கு,விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை, […]

அய்யிரூட்டம்மா

This entry is part 11 of 13 in the series 20 மே 2018

‘இது என்ன மேலகொளத்து நடு தண்ணியில ஒரு மனுஷன் காலு மாதிரி ஏதோ ஒண்ணு மொதக்கிகிட்டு தெரியுது’ குளத்தின் வடகரையில் போவோரும் வருவோரும் காலை முதலே பேசிக்கொண்டார்கள். சதுர வடிவிலான பெரியகுளம் அதன் மற்றைய மூன்று பக்கத்துக் கரைகளிலும் ஆள் நட மாட்டம் இருக்காது. ஆடுகள் மாடுகள் எனப் புல் மேயும்.. பன்றிகள் சிலவும் குடும்பத்தோடு கிழங்கு நோண்டும்.மாலை கையெழுத்து மறையும் நேரம் என்றால் பெண்கள் ஓரிருவர், ஓரிருவர் அதற்காக என வந்து விட்டுப்போவார்கள். அன்று காலை […]

காய்த்த மரம்

This entry is part 18 of 19 in the series 8 ஏப்ரல் 2018

-எஸ்ஸார்சி அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்கு ப்பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. என் நண்பர் விபாச. அவரது கட்டுரை நூலுக்கு விருது என்று அரசு அறிவிப்பு வந்திருக்கிறது. விபாச என் சஹிருதயர். அப்படித்தான் அவர் என்னை அழைப்பது வழக்கம். தனது இலக்கியப்படைப்புக்களை ஓய்வென்பது கொஞ்சமும்இல்லாமல் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருந்தார். பெரும்பாலும் சிற்றிதழ்களில்தான் அவை கம்பீரமாக உலா வந்தன. . தஞ்சாவூரில் இருந்து வெளிவரும் இலக்கியச் […]