தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “உன் மனதில் என்ன இருக்கிறது என்று என்னால் ஊகித்துக் கொள்ள முடிகிறது சாஹிதி. உனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அப்படித்தானே?” என்றான் பரமஹம்சா. அவள் பேசவில்லை. கடந்த சில நாட்களாய் அவன் இதே வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தான். திரும்பத் திரும்ப “உனக்கு விருப்பம் இல்லை போல் தோன்றுகிறது. அப்படித்தானே” என்று கேட்டுக்கொண்டே இருந்தான். உண்மையில் அது அவன் மனதில் இருக்கும் எண்ணம் போலவே […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com தன் தாயின் இரண்டாவது கணவனுடைய இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த பிறகு சாஹிதி தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டு விட்டாள். தாங்க முடியாத அவமானம் என்ற புயலில் சிக்குண்டு அலைந்தது அவள் மனம். எவ்வளவுதான் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும், ராஜலக்ஷ்மியின் வார்த்தைகளே செவியில் சுழன்று வந்து கொண்டிருந்தன. மம்மிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வேதனைப் படுவாள்? […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com வாழ்க்கையில் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வயதில் உற்சாகத்துடன் ஒரு காரியத்தைச் செய்ய முற்படுவார்கள். அதைத் திருமணம் என்பார்கள். எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் மனிதனுக்கு திருமணம் பண்ணிக்கொள்ளும் அருகதை மட்டும் உண்டு. அது தெய்வம் தந்த எளிமையான வரம். ஆனால் பந்தத்தை நிலை நிறுத்திக் கொள்வது மட்டும் ரொம்ப கஷ்டம். பந்தம் நீடிக்கலாம். ஆனால் அது… எல்லோரும் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்றோ, ஒழுக்க நெறிமுறைகளுக்கு […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குப் போனதுமே “வா.. போய் தங்கையை வீட்டிற்கு அழைத்து வருவோம். சாப்பிட வரச் சொல்லி நீதான் கூப்பிடநணும்” என்று எப்படிப் பேச வேண்டும் என்பதைச் சொல்லித் தந்து திரும்பத் திரும்ப எச்சரித்தான். இரண்டு வீடுகள் தாண்டியிருந்தது வசந்தியின் வீடு. இரண்டே இரண்டு குறுகிய அறைகள். சாமான்கள் எல்லாம் தாறுமாறாய் சிதறிக் கிடந்தன. சுத்தமே இல்லை. ‘வசதிகள் போதாமல் கஷ்டப்படுவார்கள் என்று அழைத்து வரவில்லை’ […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பாவனாவுக்கு இன்னும் புது மணப் பெண்ணுக்குரிய வெட்கம் போகவில்லை. பாஸ்கர் ராமமூர்த்தி அவளை அன்பாகத்தான் நடத்தி வந்தான். அன்று ஏனோ கணவன் பரபரப்புடன் இருந்ததை கவனித்தாள். காலையிலேயே அவன் புறப்பட்டுப் போய்விட்டான். அவன் போனது நிர்மலாவின் வீட்டிற்கு. மாமனாரின் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த பிறகு அவன் இவ்வளவு நாளாய் காத்திருந்தது நல்ல நாளுக்காக. தன் மனைவியின் மூலமாய் வந்துக் குவியப் போகும் லட்சக்கணக்கான சொத்துக்காக […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றிரவு நிர்மலாவை அருகில் அழுத்து அணைத்துக் கொண்டு பரமஹசா சொன்னான். “உன்னைப் பார்த்தால் பதினெட்டு வயதில் மகள் இருக்கிறாள் என்றால் யாருமே நம்பமாட்டார்கள். இருபத்தைந்து வருஷமாய் இந்த அழகை எல்லாம் எனக்காகவே பாதுகாத்து வைத்திருக்கிறாய் என்று நினைக்கும் போதெல்லாம் என் தேகமெல்லாம் சிலிர்த்துப் போகிறது. இன்னும் சொல்லணும் என்றால் உன்னுடன் கழித்த நேரம்தான் எனக்காக நான் வாழ்கிற நேரமாய் தோன்றுகிறது.” பரமஹம்சாவின் வாயிலிருந்து இப்படிப் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பிரமஹம்சா எப்போதும் போலவே வந்து போய்க் கொண்டிருந்தான். ரகசியமாய் குடும்பம் நடத்திக் கொண்டுதான் இருந்தான். முன்னைக் காட்டிலும் சாஹிதியிடம் அன்பாய் பழகினான். ஓரிருமுறை எல்லோருமாய் சேந்து வெளியே சாப்பிட்டார்கள். சினிமாவுக்குப் போனார்கள். சாஹிதிக்கு எது வேண்டும் என்றாலும் சுயமாய் அழைத்துக் கொண்டு போய் வாங்கித் தந்தான். ஒருமுறை புத்தகக்கடையில் அவனுடைய நண்பன் தென்பட்டான். “என் மகள் சாஹிதி” என்று அறிமுகம் […]
தெலுங்கில் : சிம்ஹபிரசாத் தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் “ஊர்மிளாவின் உறக்கம்” பாட்டை என்னுடைய பாட்டி ரொம்ப இனிமையாய்ப் பாடுவாள். யார் வீட்டுக்காவது கொலுவுக்குப் போனால் அவர்கள் கேட்க வேண்டியதுதான் தாமதம், உடனே பாடத் தொடங்கிவிடுவாள். அம்மாவுக்கும் அந்தப் பாட்டு தெரியும். ஆனால் முழுவதும் தெரியாது. நான்கைந்து சரணங்களைப் பாடுவதோடு நிறுத்திக் கொள்வாள். எனக்கு பாடவே தெரியாது. ஆனால் அந்தப் பாட்டை சின்ன வயதில் ரொம்ப விருப்பமாய், சிரத்தையாய் கேட்பேன். ராஜாராமுடன் என் திருமணம் நடந்தது ரொம்ப […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இன்டர் பரீட்சைகளை நன்றாக எழுதினாள் சாஹிதி. முதல் வகுப்புக் கண்டிப்பாய் வரும். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வுகள் உண்டு. அதற்காக விடுமுறையில் கோச்சிங் கிளாசில் சேர வேண்டும். நிர்மலாவை அந்த விஷயமாக கேட்டாள். ‘அங்கிள் வரட்டும் சாஹிதி. அவரைக் கேட்டுவிட்டு சேர்ந்துகொள்” என்றாள் நிர்மலா. “நுழைவுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கும்மா. உடனே சேர வேண்டும். அங்கிள் இன்னும் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதி ரொம்பக் கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருந்தாள். வீட்டுச் சூழ்நிலையில் கூட நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. பரமஹம்சா அடிக்கடி வந்து கொண்டிருந்தான். நிர்மலாவிடம் வியாபார விவரங்களைச் சொல்லுவான். சாஹிதிக்கு வேண்டியதைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். ஆலோசனை வழங்குவான். சாஹிதிக்கு அவன் வருகை எப்பொழுதும் சந்தோஷத்தைத் தந்து கொண்டிருந்தது. அவன் இருந்தால் எல்லோருமாய்ச் சேர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். தந்தை உயிரோடு இருந்த வரையில் அப்படிப்பட்ட அனுபவமே […]