தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நிர்மலா எல்லா வார, மாதப் பத்திரிகைகளை வாங்கி வரச் செய்வாள். அதுதான் அவளுடைய பொழுதுபோக்கு. மதுரையிலிருந்து வெளிவரும் ஒரு மாதப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தவள் ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டாள். அதில் பரமஹம்சாவின் போட்டோ இருந்தது. பரமஹம்சா வருடத்திற்கு ஒருமுறையோ இரு முறையோ வருவான். வரும் பொழுதெல்லாம் அவளுக்கு தைரியமளிக்கும் வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் போவான். சந்திரனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வான். தம்பதிகளுக்கு […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “அம்மா! யாரோ வந்திருக்காங்க.” சொன்னான் சிம்மாசலம். படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா. நேரம் இரவு ஒன்பது மணி அடிக்கவிருந்தது. “இப்பொழுதா? அய்யா இல்லை என்று சொல்லு.” “சொன்னேன் அம்மா. உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார்” என்றான். நிர்மலா சலிப்புடன் எழுந்து வெளியே வந்தாள். சோபாவில் உட்கார்ந்திருந்த அவனை எங்கேயோ பார்த்த நினைவு. “நான்தான் பரமஹம்சா. என்னைத் தெயரியவில்லையா?” கேட்டான் அவன் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அடையாரில் மிக நவீனமான் பங்களா அது. சுற்றிலும் பெரிய காம்பவுண்ட் சுவர்கள். உள்ளே இரு பக்கமும் பசுமையான புல்வெளி. ஒரு பக்கம் டென்னிஸ் கோர்ட், இன்னொரு பக்கம் ரோஜாத் தோட்டம். காம்பவுண்டு சுவர்களைச் சுற்றிலும் ஒட்டினாற்போல் வளர்ந்திருந்த அசோகமரங்கள். அணுவணுவாய் செல்வச் செழுப்பை எடுத்துக் காட்டிக்கொண்டு, பார்த்ததுமே பணக்காரர்களின் வீடு என்று எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அந்தச் செல்வத்தைக் காப்பாற்றுவதற்காக என்பது போல் வாசலில் […]
அக்னிப்பிரவேசம் -7 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “சார், உங்களுக்குக் கடிதம்” என்று ப்யூன் மேஜை மீது போட்டுவிட்டுப் போய்விட்டான். பைலுக்கு நடுவில் நாளேடை வைத்துக்கொண்டு சீரியஸாய் படித்துக் கொண்டிருந்த பாஸ்கரனுக்கு அந்த உரையைப் பார்த்ததுமே கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று புரிந்துவிட்டது. பரபரப்புடன் பிரித்தான். ஒரு மாதத்திற்கு முன்னால் ஏதோ பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, தனக்கு பிடித்தமான பூவின் பெயரையும், ஐந்து ரூபாயையும் அனுப்பி இருந்தான். அந்த […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பாவனாவுக்கு சுந்தரி எழுதுவது, பாவனா! எப்போதும் க்ஷேம சமாசாரங்களை விசாரித்துவிட்டு கடிதத்தைத் தொடங்கி, நலமாய் இருக்கிறேன் என்று நாலு வரிகளுடன் முடித்து விடுவதாக கோபித்துக் கொண்டு கடிதம் எழுதியிருந்தாய். என்னைப் போன்றவர்களுக்காக அரசாங்கம் கார்ட் விலையை ஏற்றவில்லை. ஆனாலும் அந்த சொற்ப தொகைக்காக, பத்து தடவைக் கேட்டு வாங்க வேண்டிய நிலையில் உள்ள நான் அடிக்கடி கடிதம் எப்படி எழுதுவேன்? சம்பளம் தேவை இல்லாமல் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பாவனா இன்டர் மூன்றாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். ஏற்கனவே எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் என்பதால் யாருக்கும் வருத்தம் ஏற்படவில்லை. தொடர்ந்து மேல்படிப்புப் படிக்கும் ஆர்வம் கொஞ்சம் இல்லாமல் போய்விட்டது. வீட்டுப் பொறுப்பு முழுவதும் அவள் தலையில் விழுந்தது. விஸ்வம் வரன் தேடவேண்டும் என்று முடிவு செய்தான். பாவனாவின் அழகிற்கு வரன் கிடைப்பது கஷ்டம் இல்லை என்று நினைத்துவிட்டான். ஆனால் பள்ளிக்கூடம், வீடு, இருக்கும் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com வகுப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோறும் பிகினிக் சென்றார்கள். ஏறக்குறைய இருபத்தைந்து மாணவிகளுடன் கம்பார்ட்மென்ட் கலகலப்பாய் இருந்தது. வயதானவர்கள் முதல் நேற்று மீசை முளைத்த விடலைகள் வரையில் அந்தப் பெட்டிதான் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. மாணவிகளும் சுதந்திரமாய் குறும்பு சேட்டைகள் செய்துகொண்டும், வம்பு பேசிக்கொண்டும், கண்ணில் பட்ட ஆண்பிள்ளைகளுக்கு பட்டப்பெயரை சூட்டிக் கொண்டும் ரகளை செய்து கொண்டிருந்தார்கள். பாவனாவின் பார்வை இரண்டு வரிசைகளைத் தாண்டி ஜன்னல் ஓரமாய் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com உலகமே ஆனந்த மயம் என்று எண்ணிக கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அன்று மாலையே இடி விழுந்தது. அஃப்கோர்ஸ்! ரொம்ப சின்ன இடிதான். “சுந்தரி இருக்கிறாளா? என் பெயர் மூர்த்தி, சுந்தரியின் அண்ணன்” என்றான் அவன். “வாங்க.. உட்காருங்க. சித்தியைக் கூப்பிடுகிறேன்” என்று உள்ளே ஓடினாள் பாவனா. “அண்ணாவா? எதுக்காக வந்தான் இப்போது?” யோசனையுடன் வெளியே வந்தாள் சுந்தரி. கூடத்திற்கு வந்தவள் “நீ போ காலேஜுக்கு. […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com விஸ்வத்தை கிராமப் பள்ளிக்கூடத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணி விட்டதால் குடும்பம் சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. சிறிய ஓட்டுவீடுதான் என்றாலும் துப்புரவாய் இருந்தது. சுற்றிலும் நாலாபக்கமும் காலி இடம் இருந்தது. முன் பக்கம் முழுவதும் பூச்செடிகள். அருந்ததி கடந்த ஒரு வருடமாய் ரொம்ப பலவீனமாய் போய்க் கொண்டிருந்ததால் டாக்டரிடம் காட்டினார்கள். கேன்சர் என்று சந்தேகப்பட்டு உடனே கருப்பையை நீக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பதினைந்து நாட்களுக்கு முன்பு […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நவம்பர் 12, வியாழக்கிழமை, ராயப்பேட்டையில் ஒரு மகப்பேறு ஆசுபத்திரி. நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த அறையைத் தவிர ஆஸ்பத்திரி முழுவதும் நிசப்தமாய் இருந்தது. அந்த அறையில் மட்டும் என்றுமே நிசப்தத்தைக் காணமுடியாது. பிறப்பு இறப்புக்கு நடுவே போராட்டம் அங்கே நிரந்தரமாய் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஒரு ஜீவனின் உயிரை சோதித்தபடி மற்றொரு ஜீவன் பிறக்கும் இடம் அதுதான். பெண்ணாகப் பிறந்தவள் எந்த சங்கோஜமும் இல்லாமல் […]