இரா முருகன் மருத்துவர் நீலன் தர்மனார் தினசரி வாழ்க்கை ராஜநர்த்தகியின் வனப்புள்ள குதம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்திருக்கக் கடந்து போன தை மாதம் தைப்பொங்கலுக்கு அடுத்த வாவு நாளில் அவரைத் தேடி ஒரு யவனன் வந்தான். நல்ல உயரமும் தீர்க்கமான நாசியும் விநோத உடுப்பும் மின்னல் போல் காலில் பளிச்சிடும் காலணிகளுமாக வந்தவன் கோட்டை மதில் அருகே நின்று கொச்சைத் தமிழில் உரக்கக் கேட்டது – மருத்துவன் உண்டோ இங்கே மருத்துவன் உண்டோ. எங்கெல்லாம் சத்தம் எழுப்பப் […]
நாவல் தினை அத்தியாயம் பதினான்கு CE 300 பொது யுகம் 300 வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள். இலுப்பெண்ணெய் தாராளமாக ஊற்றிப் பெரிய பருத்திப் பஞ்சுத் திரிகள் எண்ணெய் நனைத்துக் கொளுத்திய சுடர்கள் தெருவெங்கும் வீட்டு மாடப்புரைகளில் இருந்து ஒளி வீச இன்னும் சிறிது நேரத்தில் இரவு நிலம் போர்த்தும். குயிலிக்கு வியப்பாக இருந்தது. […]
விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின. எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும். இரண்டு தளங்கள் செங்கல் கூரை மூடியும் வானம் பார்த்த மச்சுமாக வீட்டுடமையாளரின் செழிப்பைச் சொல்வதாக அந்த இல்லம் திகழ்ந்தது. கீழ்த்தளத்தில் சஞ்சீவி மலையைச் சுமந்து கம்பீரமாகப் பறக்கும் அனுமனின் வண்ணப்படம் சுவரை நிறைத்திருந்தது. அந்த […]
அவர்கள் வீட்டு வாசலில் நின்று நோக்க வாசல்படிகள் ஏழு இருக்க பிரம்மாண்டமான சிவப்புக் கல்லாலமைந்த கட்டிடமாக வனப்பு மிகக்கொண்டிருந்த இல்ல முகப்பில் நாக.சோனை என்று கொத்தி வைத்தது கண்டார்கள் குயிலியும் வானம்பாடியும். குயிலி வாசலில் ஒரு வினாடி நிற்க, வானம்பாடி போகலாம் வா என அவசரப்படுத்தினாள். அந்த நிமிடம் வாசல் கதவு திறந்து வெளியே வந்தவள் கையசைத்தாள் – வாருங்கள் பெண்களே, உங்களுக்கு மேகலையின் வரவேற்பு. தேறல் மாந்திப் போங்கள் என்னோடிருந்து. உடல் நலம் பேணுதல் முக்கியம். […]
மீண்டும் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்தது மலைப் பிரதேசம். வழமை போல் மிருகங்கள் பறக்கத் தொடங்கின. ஆற்றங்கரை இருமருங்கும் படித்துறைகளில் உடுத்திருந்த துணி தவிரக் கொண்டு வந்த விழுப்பைத் துவைத்து அலசவும், ஆற்று வண்டல் எடுத்து, அழுக்கும், படிந்திருந்த உடல்வாடையும் போயொழியக் கையிடுக்கிலும், அரைக்கட்டிலும், காலிடுக்கிலும் வெகுவாகப் பூசி, குளிர்ந்த நதி நீரில் மனக் கசடும், எண்ணக் கசடும், உடல் கசடுமெல்லாம் உதிர்ந்து, தூய்மை மீட்டு வரவுமாக எல்லா வயதினரும், ஆண்கள் தனியாகவும், எதிர்ப் படித்துறையில் பெண்களும் […]
ஒன்று கவிதை எழுதுங்கள் அல்லது கலுவத்தில் மருந்து அரையுங்கள். இது மருத்துவன் நீலன் தருமனிடம் மற்ற கவிஞர்களும் மருத்துவர்களும் சொன்னது. சரியாகச் சொன்னால் மருத்துவர் நீலர் தருமரிடம். எனினும் அவர் வெகு காலமாக நீலன் வைத்தியராக உள்ளார். அழைக்க ஏதோ ஒரு பெயர். அதற்குமேல் என்ன வேண்டும்? அவரை அவரது மோசமான கவிதைகளுக்காக மற்ற மருத்துவர்கள் கொண்டாடினார்கள். உள்நாக்கில் அடக்கிக் கரையக் கரைய எச்சில் விழுங்க வேண்டிய மூலிகையைத் தவறுதலாக நாசித் துவாரங்களில் பிழிந்து மூக்கில் […]
அடிவாரத் தரிசு பூமி. எல்லோரும் தினம் புழங்கினாலும் யாருக்கும் நினைவு இல்லை. கருங்கல் ஒற்றைச் சிற்பமாக நிற்கும் மலையின் கீழே ஒரு காலத்தில் சூரிய வெளிச்சம் உள்ளே வராமல் மறைத்த அடர்ந்த பெருமரத் தோப்புகளும் பரந்து பந்தலித்த கொடிகளும், மூலிகைச் செடிகளும் வளர்ந்து செழித்திருந்ததை யாரும் நினைவு கொள்வதில்லை. கேட்டால், அறுதப் பழசுக் கதை என்பார்கள். நடப்பில் இருக்கும் காலத்துக்கு ஆயிரம் வருடம் முற்பட்டது என நம்பிக்கை. மலையின் செழிப்பை எடுத்தோதிக் கொண்டு தினம் […]
குயிலி பார்த்துக் கொண்டிருந்தபோதே, மருது சகோதரர்கள் சீரங்கம் கோவில் மதி இருந்து ஜம்பு தீவு பிரகடனம் செய்வது கலைந்து போனது. ரங்கூனில் ரோடு போட ஜல்லி கலக்கும் யந்திரத்தின் தார் வாடை உக்ரமாகச் சூழ்ந்து அடித்தது. துரைசாமியை, பின்னால் குதிரையேறி வந்து, சவுக்கால் அடித்து, மயிர் பிடுங்கி இங்கிலீஷ் துரை ஒருத்தன் தார் கலக்க விரட்டினான். 1790 மருது சகோதரர்கள் உயிர்த்த காலத்தில் இருந்து முப்பது வருடம் முன்னால் போய் 1820-இல் கண்ணில் பட்ட […]
இரா முருகன் பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது. ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை. ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள் பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறவை இந்த விளக்குகள். குயிலியின் உள்ளங்கையில் டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது. பொருள் வயின் பயணம் என்று எழுதிய […]
இரா முருகன் பொது யுகம் 5000 புறப்படுங்கள். மூன்றாம் நூற்றாண்டு சென்றடைவீர் இருவரும். நீலன் மருத்துவரை நம் காலத்துக்கு அழைத்து வருக. அன்பால் அழைத்து வருக. வருவார். சென்று வருக. பெருந்தேளர் குயிலியையும் வானம்பாடியையும் அனுப்பி வைத்தார். நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் பின்னே போகும் காலப் பயணம். ஒரு வினாடி நேரத்தில் ஒரு வருடம் பின்னால் போகத் தொழில்நுட்ப வசதி இருந்தாலும் அதை முழுக்கச் சார்ந்து பயணப்படாமல் மெல்ல மெல்லப் பயணப்படுவதை இந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள். […]