காட்சி 7 காலம் காலை களம் உள்ளே இடம் பிராட்வே போலீஸ் ஸ்டேஷன் ட்யூட்டியில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் (போலீஸ் 1) உரக்க கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தபடி இருக்கிறார். கூடவே இன்னொரு கான்ஸ்டபிள் – போலீஸ் 2) போலீஸ் 2: (போலீஸ் 1-இடம்) வண்ணாரப்பேட்டையிலே விழுந்து இருபது பேர் அவுட்டாம்.. கை கால் போய் நூத்தம்பது பேர்..பேப்பர்லே போட வேணாம்னுட்டாராம் கலெக்டர் தொரை போலீஸ் 1: காக்க காக்க பயமின்றி காக்க.. (போலீஸ் 2-வைப் […]
காட்சி 4 காட்சி 4 காலம் காலை களம் உள் வீடு. சுவர்க் கடியாரம் அடிக்கிறது. நாயகியின் அண்ணன் ரத்னவேலு (வயது 60) கூடத்தில் நுழைந்து நிற்கிறான். கையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிபன் பாக்ஸ். நாயகி உள்ளிருந்து வருகிறாள் ரத்னவேலுவைப் பார்த்து அவள் முகத்தில் அதிர்ச்சி, மகிழ்ச்சி. நாயகி: என்ன அண்ணே, திடுதிப்புனு வந்திருக்கீங்க? அம்மா, நீங்க எலோரும் சௌக்கியம் தானே? ரத்னவேலு: ஏதோ இருக்கோம்மா.. பாரு.. கூத்துலே கோமாளி மாதிரி திடீர்னு வந்து சிக்கறேன்.. என்னாலே […]
காட்சி 1 காலம் காலை களம் வெளியே மேடை இருளில். பின்னணியில் திரை ஒளிர்கிறது. முதல் உலக யுத்தக் காட்சிகள். போர்க்காலச் சென்னை (1914) காட்சிகள் நகர்கின்றன. வர்ணனையாளர் குரல் : மனித குல வரலாற்றில் உலக நாடுகள் இரண்டு தொகுதிகளாக அணிவகுத்துப் போர் புரிந்த முதலாவது உலக யுத்த காலத்தில் இந்தியா நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. அப்போது பாரதம், பிரிட்டீஷ் காலனியாதிக்கத்தில் இருந்த அடிமை நாடு . இங்கிருந்தும் ஆயிரக் கணக்கான ஏழை எளியவர்கள் யுத்தத்துக்குப் போனார்கள். […]
இரா.முருகன் நெட்டிலிங்க மரம் தெரியுமா? உசரமாக, பனை மரத்தை விட உசரமாக, ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும். ஒண்ணு ரெண்டு இல்லை. வரிசையாக எட்டு நெட்டிலிங்க மரம். பள்ளிக்கூடத்தில் உள்ளே நுழைந்ததுமே அவைதான் வாவா என்று வரவேற்கிற பாவனையில் அணிவகுப்பு மரியாதை செய்தபடி நெட்டக் குத்தலாக கண்ணில் படும். இதெல்லாம் பூப்பூத்து காய்க்குமா? டிராயிங் மாஸ்டரைக் கேட்டேன். அவரை ஏன் கேட்கணும்னு தெரியலை. ஆனால் வேறே யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். காய்க்குமே. சாப்பிடலாமா? அவர் யோசித்தார். […]
தகவல் குறிப்பு திண்ணையில் பிரசுரமான ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வடிவம் கண்டு வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது. வாசக நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். (invite enclosed) அரசூர் வம்சம் மற்றும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் என்ற என் இரு நாவல்களைப் பிரசுரம் செய்த திண்ணைக்கு பிரத்யோகமாக நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது பல காரணங்களால் இடைவெளி விட்டு நாவலை வளர்த்துப் போய், எழுதி அனுப்பிய அத்தியாயத்தில் திருத்தம் போடச் சொல்லி […]
1939 ஃபெப்ருவரி 6 வெகுதான்ய தை 24 திங்கள்கிழமை துர்க்கா, மூட்டையக் கட்டு. பிரயாணம் போற வேளை. வேதையன் துர்க்கா பட்டனிடம் சொல்லும்போதே மெய் தளர்ந்து தாங்க முடியாத அசதி. குத்திருமல் வேறே. என்ன ஔஷதம் கழிச்சும், தயிரை விட்டொழித்து எடத்வா கேசவன் மூஸ் வைத்தியர் கொடுத்த ஆயுர்வேதப் பொடியை தேனில் குழைச்சு தினசரி நாலு வேளை விழுங்கியும் ஒழிஞ்சு போகாமல் கூடவே வந்து உசிரெடுக்கிறது. இருமித் துப்பினதில் ரத்தம் இருந்ததாக மனது […]
1939 ஜனவரி 31 வெகுதான்ய தை 18 செவ்வாய்க்கிழமை கோஷி வக்கீலை விட ரொட்டிக்கடைக் காரன் கோஷி சுறுசுறுப்பான மனுஷர். கடைக்காரன் கொஞ்சமும் கேரள வாசனை இல்லாத, எருமைப் பால் காப்பி சாப்பிடுகிற, தமிழ் டாக்கி நட்சத்திரங்களை அதுவும் வடிவான ராஜகுமாரியையும், லக்ஸ் பத்மாவையும் மாராப்பு பற்றி கவலைப்படாமல் பக்கவாட்டில் நிற்கச் சொல்லிப் பிடித்த படங்களை ரொட்டிக்கடை சுவரில் மாட்டி, தீப தூபம் காட்டாத குறையாக கும்பிட்டு குழைந்து சந்தோஷப்படுகிறவன். லக்ஸ் பத்மா வந்தால் […]
1939 ஜனவரி 29 வெகுதான்ய தை 16 ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழை ரயிலடியே அதிசயித்து நிற்க நடேசன் ரயிலேறினார். யாராக்கும் புள்ளிக்காரன், ராஷ்ட்ரியக் காரனோ, மதராஸியிலே வல்ல சம்மேளனம் ஏதும் ஒத்து சேரும் பரிபாடியோ? அம்பலப்புழ நீலன் வக்கீலோட குமஸ்தன். வக்கீல் குமஸ்தன்மாரே, வரூ, நமக்கும் உக்ரனாயிட்டு ஒரு ஹர்த்தால் நடத்தலாம் என்று அஜெண்டா குறிச்சு ஆளனுப்பி வரவழைத்திருப்பார்கள். பாண்டிப் பிரதேச ஜனங்களுக்கு இதெல்லாம் சுபாவத்தில் இல்லாத விஷயம். இங்கே இருந்து அங்கே ஒண்ணும் ரெண்டுமாகப் போய்ச் சேர்ந்த […]
இரா.முருகன் 1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு. துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான். அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]
1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு. துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான். அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]