author

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10

This entry is part 9 of 23 in the series 14 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நான் புறப்படறேண்ணா என்றாள் யாழினி ஏன் என்ற கேள்வி அனைவர் முகத்திலும் தெரிந்தது. யாழினிக்கு அந்த கடிதத்தைப் படித்த பின்பு வினோதனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது. அந்தகடிதம் தன்னை இலக்கு வைத்து எழுதியதைப் போன்ற உணர்வு. யாழினி கவனமாய் அந்த நாட்குறிப்பை எடுத்துவைத்துக்கொண்டாள். அடுத்து படிக்க வேண்டும். படிப்பதற்கும் இங்கிருந்து வெளியேறியாக வேண்டும். ஏதோ ஒரு இலக்கு வைத்துத்தான் அனைத்தும் நடந்தேறுகிறதோ. யாரோ ஒருவரின்வாழ்வின் தொடர்ச்சியாக யாழினியின் பயணம். மாறுப்பட்ட கோணமாய் […]

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9

This entry is part 11 of 24 in the series 7 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -9 யாழினி தேவிகாவின் அறையினுள் நுழைந்து, வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டே வந்தாள். புத்தகங்களின் மத்தியில் இடைச்சொருகலாய் சொருகப்பட்டிருந்தது அந்த நாட்குறிப்பு. அது அவள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அதன் மீது பதப்படுத்தப்பட்ட வெண் சாமந்தி மலர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் நிறம் மாறாமல் புதியதாய் அன்று மலரந்த மலரைப் போலவே இருந்தது. மெல்ல அந்த மலரை வருடினாள் யாழினி! அதனுள் இருந்து மெல்லிய இசையோடு நீஜெயிக்கப் பிறந்தவள் என்ற வாசகம் அழுத்தமாய் வந்தது. […]

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8

This entry is part 11 of 21 in the series 31 மே 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி காலையில் விழித்த யாழினிக்கு அதிசயம் காத்திருந்தது. இரவு பயம் காட்டிய அந்த பேய் பங்களா தெய்வீக கன்னிகையாய் நிமிர்ந்து நின்றிருந்தது. கீதா மணக்கமணக்க காஃபி யோடு வந்து யாழினியை எழுப்பினாள். காஃபியோடு வெளியே வந்த யாழினிக்கு மற்றும் மொரு ஆச்சர்யம், இரவு சுருண்டு கிடந்த வயோதிக மூதாட்டி கோட் மிடியுடன் கழுத்தில் முத்துமாலை அணிந்து நாற்காலியில் மிடுக்குடன் அமர்ந்து எதிர்சாரியில் தெரிந்த வயல்களில் பறந்துக்கொண்டிருந்த கொக்குகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லை இல்லை வேடிக்கைப் பார்ப்பதை […]

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7

This entry is part 17 of 19 in the series 24 மே 2015

நீண்ட மண் பாதையைக் கடந்து அந்த இருண்ட பிரதேசத்தில் நிமிர்ந்து நின்றிருந்த அந்த வெள்ளை நிறக் கட்டிடத்தின் கேட் முன் நின்றது கார். காவலாளியைக்காணவில்லை. டேவிட்டே இறங்கி கேட்டைத் திறந்தான். இத்தனை தனிமையான இடத்தில் ஒரு காவலாளியையும் வைத்துக்கொள்ளவில்லை என்றால், இங்கு ஏதும்தப்பு நடப்பதாக தோன்றிய எண்ணத்தை அழிச்சாட்டியம் செய்து அழித்தாள் யாழினி. மீண்டும் காரில் ஏறிக் காரை உள் நிறுத்தி, பின் இறங்கி வந்து கேட்டை பூட்டிவிட்டு வந்து காரில் ஏறினான். ஒரு வாட்ச் மேன் […]

நான் யாழினி, ஐ.ஏ.எஸ் – அத்தியாயம் 6

This entry is part 22 of 25 in the series 17 மே 2015

மார்கழி குளிர்! காகம் கரைந்து எழுப்பியது விடியலை. யாழினி மெல்ல கண்விழித்தாள். பெற்றோரின் பிரிவு ஒருவாறு பழகிப்போயிருந்தது யாழினிக்கு. சாணத்தைக் கரைத்துவாசலில் தெளிக்க, சட்டென்று குமட்டிக் கொண்டு வந்தது. ஓடிப்போய் வாழை கன்றில் வாந்தி எடுத்தாள் யாழினி. மெல்ல தலைச் சுற்றுவது போன்ற உணர்வு. வாசற்படியிலேயே வந்து அமர்ந்துவிட்டாள்.   என்னவாயிற்று எனக்கு, பெற்றோர் இறந்த துக்கத்தில் மாதவிடாய் பற்றிய அக்கறையே இல்லாமல் இருந்துவிட்டோமே அப்படி என்றால், கர்ப்பமாய் இருக்கிறேனா என்ன?ஒரு முறை சேர்ந்தால் குழந்தைப் பிறக்குமா? […]

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5

This entry is part 17 of 26 in the series 10 மே 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் 5 அந்த வீடு நிசப்தமாய் இருந்தது. காரியம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ராகவ் வந்திருந்தான். அவன் அக்காவும் உடன் மாமாவும் வந்திருந்தார்கள். ஊதுவத்தி மணம் இன்னும் அந்த வீட்டை விட்டு சாவு மணம் அகலாதிருந்தது. ஏங்க யாழினி இங்க இருந்தா அழுதே செத்துடுவா உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடறீங்களா? என்றாள் சகாதேவனின் தாய் அதெல்லாம் எதுக்கு இங்கயே இருக்கட்டும், ராகவ் அப்பப்ப வந்து பார்த்து எதாச்சும் செலவுக்கு தந்துட்டு போவான். ஜாதகம் […]

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4

This entry is part 19 of 25 in the series 3 மே 2015

  மங்கலான தெருவிளக்கின் வெளிச்சத்தில் குறுகிய அந்த தெருவில் நடந்தாள் யாழினி. அவள் வீட்டின் முன் தெருமக்கள் குழுமியிருக்க, அங்காங்கே சிலர் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.   வயிற்றை பிசைந்து குடல் தொண்டையில் ஏறுவதைப் போன்று அடைத்தது யாழினிக்கு.   அருகில் வந்த சகாதேவன் இப்பதான் வரியா யாழினி என்றான்   “ம் என்னாச்சு, அம்மா அப்பா எங்க சகா,” என்றாள் யாழினி. சகா தேவன் எதிர்வீட்டில் வசிப்பவன் சம வயதுடையவன், தூரத்து உறவில் […]

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3

This entry is part 17 of 26 in the series 26 ஏப்ரல் 2015

  கோபமா என்றான் ராகவ் ?   யாழினி பிள்ளையார் கோவிலின் சுவரில் சாய்ந்தபடி மறைவாக நின்றிருந்தாள்.   எதற்கு ?   உன்னிடம் முதலில் தெரிவிக்க வேண்டிய காதலை உங்கப்பாக்கிட்ட சொன்னதுக்கு   ச்சே இல்லை என்றாள்   என்னை பிடிச்சிருக்கா என்றபடி அவளின் கையைப் பற்றினான் ராகவ்   அச்சோ கோயில் இது.  கையை விடுங்க ராகவ் என்றாள் யாழினி   கட்டிக்கப் போறவன் தான யாழ் நான் கையைப் பிடிக்கக் கூடாதா?   […]

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2

This entry is part 15 of 19 in the series 19 ஏப்ரல் 2015

சிறு தூக்குச் சட்டியில் களியும், களிக்கேற்ற கீரை கடைசைலையும் எடுத்துக் கொண்டு நடந்தாள் யாழினி. மெரூன் நிற தாவணியும், வெள்ளைப் பொட்டுகளும் சந்தனக் கோடுகளும் நிறைந்த பாவாடையும் அணிந்திருந்தாள். அலங்காரம் ஏதும் அற்று சாதாரணமாய் கூந்தலைத் தூக்கிக் கொண்டை போட்டிருந்தாள்.   பச்சைப் பசேல் என்று புல் பரத்தி இருந்த வரப்பில் நடப்பது அலாதியான சுகம். அதிலும் மழை நனைத்து சிறு சிறு பொட்டுக்களாய் தேங்கி நிற்கும் நீர்த் துளிகள். பாதங்களின் உட் புறத்தை நனைத்து சிலிர்க்கச் […]

நான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1

This entry is part 5 of 28 in the series 12 ஏப்ரல் 2015

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்]   ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -1 மென் சாமரம் வீசும் தென்றல் காற்றின் கைங்கரியத்தால் அசைந்த சேலையை இறுகப் பற்றிய படிநடந்தாள் யாழினி. யாழினி அழகானவள். சராசரிக்கும் சற்றே உயரம்  குறைவு. நீண்ட கருங்கூந்தல். பேசும் விழிகள். மௌனத்தை அடையாள ​ ​ மாக்கிய அதரங்கள். சேலைக் கட்டில் ஒரு தனித்துவ நேர்த்தி! மழை வரக்கூடும் என்று அறிவித்தது கருமேகம் சூழ்ந்த வானம்! சில்லென்று தழுவி காற்று சற்றே பாதத்தை […]