author

சாட்சி யார் ?

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

    சுற்றங்களின் முன் அவமானச் சின்னமாக  நிறுத்தப் படுகிறேன் ! கழுத்தில் இல்லாத தாலி பேச்சுப் பொருளாகிறது அவர்களுக்கு ! நமக்குள் நடந்த  உடன் படிக்கைக்கு சாட்சி யார் ?   இருவரும் அந்த நீலவானம்  எழில் நிலவும் நான்கில் நின்றதோர் சாட்சி உண்டு எங்கும் நிறைந்தோன் மௌனியாகவே நிற்பவனாகிய  கடவுள் காதலர்களுக்கு புரியும்  இம்மூன்றோர் மொழி சுற்றி நிற்கும் தூயவருக்குப்  புரியுமா?   நகைப்பினூடே பரிசீலிக்கப் படுகிறது பெண் கற்பின் மேன்மை ! ஒருவனாக […]

தினம் என் பயணங்கள் – 8

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  இன்று நான் ஒரு புதிய ஆங்கில வார்த்தைக் கற்றுக்கொண்டேன். Fantasy –[மனப்புனைவு] கற்பனை  என்பது தான் அது. இந்த வார்த்தையைக் கூகுள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது. ஆனால் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் எண்ணம் என்னுள் எழுந்ததினால் மட்டுமே இது நிகழ்ந்தது.   அனுதினமும் புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டால் புத்துணர்ச்சியோடு இருப்போம் என்று என் நண்பர் சொல்வார். இதை நான் உணர்ந்ததும் உண்டு நாம் கற்றுக் கொள்ளத் தலைப்படும் போது நம் கவலைகளுக்காக கவலைப்பட நேரம் இருக்காது. […]

தினம் என் பயணங்கள் – 7

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

வெகுநாட்களுக்கு பிறகு இந்த தொடர்மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். சமீபகாலமாக எழுத்து என்வசம் இல்லை. மனம் ஒரு குழப்ப நிலையில் சங்கமித்துவிட, என் தொடர்ப் பயணம் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பது குறித்தான கேள்விகள் என்னை குடையத் தொடங்கிவிட்டன.   என் வெற்றியும் தோல்வியும் நிறுத்துப் பார்க்க நான் பயன்படுத்துவது என்னை சுற்றியுள்ளவர்கள் மூலமாகவே, அந்த சுற்றியுள்ளவர்களின் சுட்டுவிரல்கள் என் பக்கமாகத் திரும்பி நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவள் என்று கூப்பாடு போட்டுக் கத்துவதைப் போன்ற பிரம்மை […]

தினம் என் பயணங்கள் – 6

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்த காட்டும் மலர்களைப் போலநிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும் ! – வைரமுத்து. தினம் என் பயணத்தில் நான் மகிழ்ச்சியாய் கலந்து கொண்ட இரு நிகழ்வுகளைப் பற்றி பதிவிட வேண்டும் என்று முன்பு குறித்திருந்தேன். தீடீர்மாற்றம் போல் நிகழ்ந்த ஒரு நிகழ்வு மகிழ்ச்சியைப் புறந்தள்ளியது. இரு இனம் புரியாத வலி மனதை ஆட்கொண்டு விட மன அழுத்தத்தின்பாற் ஈர்க்கப்பட்டேன். என் பேஸ்புக் கணக்கை யாரோ களவாடிவிட்டார்கள். அப்படிக் களவாட முடியுமா என்பது குறித்து […]

தினம் என் பயணங்கள் – 5

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

சக பதிவரும், என்னை பதிவுலகத்திற்கு கொண்டு வந்தவருமான தமிழ்த்தொட்டில் தமிழ்ராஜா அவர்கள் இயக்கிய குறும் படமான “ரணகளம்” பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு 24.02.2013 தினத்தந்தி செய்தித் தாளின் இலவச இணைப்பான குடும்ப மலரில் வெளியாகி யிருந்ததைப் படிக்க நேர்ந்தது.  இப்படி ஆரம்பித்து ரணகளம் குறும்படம் பற்றிப் பதிவைப் போடுவது என்று தான் எண்ணியிருந்தேன். என்னுடைய செயல் அதை வேறு விதமாக திசை திருப்பி விட்டது. நிவாஸ்குமார் அவர்கள் பேஸ்புக்கில் வெளி யிட்டிருந்த நிலையைப் படித்து விட்டு 24.02.2013 […]

தினம் என் பயணங்கள் – 4

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

  இன்றைய தின என் அலுவலகப் பயணம் ஒரு சிறப்பனுவத்தை என்னுள் துவக்கியது. ஆரஞ்சு வண்ணத்தில் சுடிதார். தூக்கி போடப்பட்ட நதியா கொண்டை, அதன் பக்கவாட்டில் ஒரு ஆரஞ்சு நிற ஒற்றை ரோஜா. நெற்றியில் சின்னதாய் குங்கும நிற ஸ்டிக்கர். கண்ணாடியில் என்னைப் பார்த்து, தமிழ் இன்று நீ அழகாய் இருக்கிறாயே என்றேன். நிழல் தமிழ்ச்செல்வியின் முறுவலிப்பில் முழுதிருப்தி எனக்கு.  கொஞ்சம் விசிலடிக்க தோன்றியது. எப்போதாவது உற்சாக மனோநிலையில் மனதில் தோன்றும் ராகத்தை விசிலடிப்பது உண்டு. என் விசில் […]

தினம் என் பயணங்கள் – 3

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  வாழ்க்கை என்பது ஒரு நூதனப் போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது  துக்கம் வரும் என்று தெரிவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவப் பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடங்களை கற்றுக் கொள்ளலாம். அல்லது துவண்டு போய் வாழ்க்கையை இழந்தும் விடலாம். எதிர்கொள்ளத் துணிவில்லாமல் போகும் போது குழப்பங்கள் இரத்தம் உறிஞ்சும் அட்டையாய் ஒட்டிக் கொள்வது உண்டு. 06.03.2013 புதன்கிழமை அன்று திருவண்ணாமலை செல்வதென்று நான் முடிவெடுத்திருந்தேன். எனது நண்பரான ஷமீர் அகமதுவிற்கு […]

தினம் என் பயணங்கள் – 2

This entry is part 10 of 18 in the series 26 ஜனவரி 2014

  போதிக்கும் போது புரியாத கல்வி  பாதிக்கும் போது புரியும்   முக்கூட்டு ரோடின் திருப்பத்தில் திரும்பி சாலையில் கலந்த போது ஒரு நானோ கார் விர்ர்ர்ர்ரென்று கடந்து சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. எனக்கு இணையாக நடந்து வந்த அந்த பெண்மணி நடையைத் துரிதப்படுத்தி, அந்த காரின் பின் இருக்கையில் தஞ்சம் புகுந்த பின், கார் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தது. அதன் பின்புறக் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதியிருந்தது.   “போதிக்கும் போது புரியாத கல்வி […]

தினம் என் பயணங்கள் – 1

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

. முகவுரை ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் ? வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து. பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரின் சிறப்பை, கலாச்சாரத்தை, மனித இயல்புகளை என் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நெடுநாள் ஆசை எனக்கு இருக்கிறது.   […]

விடியலை நோக்கி…….

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

ஒடுக்கப்பட்ட இனத்திற்கே உண்டான மூர்க்கம், இடுங்கித் துளைக்கும் அவள் கண்களில் வழிந்தது. கரேல் என்று அண்டங்காக்கையின் கருப்பில் அவள் தேகம். சாராசரிக்கும் குள்ளமான, வினயம் பிடித்தவள் என்று பிறர் சாடும் ஒல்லி குச்சி உடம்புக்காரி. சுருண்டு அடர்ந்த கார்கூந்தல், தேங்காய் எண்ணெயின் வாசமே இல்லாமல் பரட்டையாகி யிருந்தது. அவள் முகத்தில் பசியின் அடையாளம் சோர்வாய்ப் படர்ந்திருந்தது.வறண்டிருந்த பூமியின் சுடு மண்ணுக்குள் பாதங்கள் புதைய வெம்மையின் தகிக்கும் தணல் பாதங்களைத் தாக்கியபோதும், பழக்கமோ அல்லது உரம் ஏறிய மனதின் […]