ஜி.ஜே. தமிழ்ச்செல்வி வடிக்கப் படுகின்றன நவீன சிற்பங்கள் கடற்கரையில், பிரம்மனின் படைப்பு இலக்கணத்தை வெற்றி கண்டதாக ! பிஞ்சு விரல்களின் மண் பூச்சுக்களில் வர்ணம் தீட்டிக் கொள்ள முற்படும் மனங்கள் அத்தனையும்! சுற்றுப்புறம் ஸ்தம்பிக்கக் கூடும் அழகியலாய் வடிக்கப்படும் கற்பனைக் கவிதை களுக்காக ! ஒரு மலையைக் கட்டியெழுப்ப மழலை விரல்களுக் குத்தான் ஆகாய பெலன் ! கட்டிய பின் பொங்கிவரும் குறுஞ் சிரிப்பில் தோய்ந்து போகிறதே என் இதயம். ஏதேனும் ஒரு மழலையின் இதயம் பரிதவிக்கக் கூடும் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி. பாதை இல்லா மேடு பள்ளத்தில் பயணம் செய்யும் பார்வை மின்சார மில்லா விளக்கின் மையிருட்டுத் துணையோடு ! கருமை போர்த்திய நிழலுருவங்கள் பார்வையில் பென்சில் ஓவியங்களாக. கீற்றாய் துணைக்கு வந்த மஞ்சள் ஒளி நிலவின் கொடையாய் கொஞ்சம் கஞ்சத் தனத்துடன். தனித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்ட போது குளிர் காற்றும், கொசுவும் முணுமுணுக்கும் துணைக்கு நாங்கள் என்று. தனித்தில்லாத நான் தனிமை தனிமை தனிமை என்று நித்தம் பிதற்றுகிறது அர்த்தங்க ளற்று. உணர்வுகள் வேறு படுகிறது சந்திக்கும் உயிரினங்களின் மன ஈர்ப்பிற்கு […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நீ எழுதவென எழுதாமல் வைத்திருந்த என் மனக் காகிதத்தில் எழுந்த உணர்வுகளின் நிறத்திற்கு ஒரு வண்ணம் பூசுவாய் என்றிருந்தேன். என் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி அன்பியலை படைத்துச் சென்றாய் அழைக்காமலே ! அழகானதொரு தருணத்தில் காமம் இல்லாது காதலைப் பிறப்பித்துப் போதை ஊட்டினாய் ! காதலுக் கான காமத்தைப் புதுப்பித்துக் கொண்டாய் ஆழ் மன உலகில் கால் தடம் பதியாமலே ! நாள் தோறும் கதிரவனுக்காக மலரும் தாமரை போல உனக்காகவே மலர்கிறது இவளின் […]
மாற்றங்கள் செய்ய எண்ணி மறந்து போன நாழிகையும் மாற்றத் திற்குள் துவண்டு அடையாள மற்று ப் போனதையும் மீண்டும் புதுப்பிக்க எண்ணி தோல்வி கண்ட தருணம் ஒன்றில் அவளைச் சந்தித்தேன் பால்யம் கடந்த பின்னும் வாலி ப மங்கையாய் சலிக்கா து முழங்காலில் ஊர்ந்திட எப்படி முடிந்தது அவளால் ? உள்ளத்துக் குமறல்களை உலகுக்கு மறைத்து சிரிப்பொலி பரப்ப எப்படி முடிந்தது அவளால் ? பின் நின்றுப் பார்க்கும் கண்களையும் விச்சுக் கொட்டும் உதடுகளையும் சலிக்காமல் […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி துரிதமாகப் புறப்பட்டது என் எண்ணக் குதிரை சிறகடித்து வானில் காதல் நிறங்களோடு உன்னைச் சுமந்தபடி உன்னிடத்தில். நீண்ட கருவானில் அலங்கரிக்கப் பட்ட நட்சத்திரங்கள் சாட்சி. நினைத்த மாத்திரத்தில் உன் பிம்பத்தை வடித்து விடுகிறது மனம் ! எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்தக் காதலின் தொடர்ப்பயணம் ? இங்கெல்லாம் இது சுரப்பியின் லீலையாக சுதி குறைக்கப் பட்டது. இந்த மனிதர் களுக்குத் தெரிய வில்லை காதல் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு என்ன இது மாற்றமோ ? நெஞ்சுக் குழி வேகுதே ! தொண்டைக் குழி நோகுதே ! கன்னங்களில் நீர் சொரிய கண்கள் ரெண்டும் சாகுதே ! ஏன் தானோ…? சுகமான பேச்சில் சுகராகம் பாடி இதமாக வருடிச் சென்றவனே இதழோரம் இன்று வெறுப்பமிலம் உமிழ்ந்து அணு அணுவாகக் கொன்று நீ செல்வது ஏன் ? தொடாமல் அணைத்து, தொட்டுவிடத் தவித்து, கட்டில் சுகம் விடுத்து, கண்டதையும் ரசித்து, கருத்துகள் பகிர்ந்து, எழுத்துகள் உதிர்ந்து, இரவுகள் கடந்து, விடியலும் தொடர்ந்து, சுகித்திட்ட சுகங்களும் போனது […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு உனக்காகத்தூதுவரும்மூளையில் உதித்து உயிரின்அணுஉலகில் உயிர்க்கும்காதல்புறா நேசத்தின்கனவுளைஅதனிடத்தில் தந்தனுப்ப தத்திவரும்துரிதமாக, என்மனஅந்தரங்கங்களை உன்னொடுபகிர்ந்து உறவாட…! ஆவலாய்நெருங்கிவர வார்த்தைகளில் கடுப்பெனும்உணர்வைப் பந்திவைக்க தள்ளியேநிற்கிறது இங்கும்அங்குமாகப்பார்த்தபடி உள்ளத்துநினைவுகளை படிக்கமுடியும்என்றால் மனக்காயங்கள்இன்றிக் கடந்துபோகலாம் இருவருமாகவாழ்க்கைவழியில் . விழிகளின்அழைப்பை ஏற்கவா?மறுக்கவா? பார்வைகளின்ஸ்பரிசம் நட்பா?காதலா? தூதாகவந்தகாதல் உணர்வுக்குள் விலகலின்பதில்மனுவந்து ஓடிப்போஎன்று விரட்டிவிடுமாபெண்உணர்வுகளை? வினாக்களின்தொடர்ப்பயணத்தில் விடைகாணமுயலும் கணங்களெல்லாம் உன்முகம்காணும் வாய்ப்பின்திருப்தியில் கடந்துபோகிறேன், அனுபவச்சாரல்வழியே காதலற்றமனங்கள் எத்தனையோ எனைத்தீண்டிச்சென்றகாதலுக்கு நன்றிபகிர்ந்தநொடி!
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழி பாதையின் குறுக்காக சர சர வெனக் கடந்த போது, வேகச் சீற்றத்துடன் தலை குத்தி வழிந்த போது, சாரல் மறைத்த பார்வையில் சாலை தெரியாக் குருடியாய் பயணித்த நொடி எங்கிருந்தோ வந்து இதயத்தைக் கீறிச் சென்றது உன் நினைவுகளின் உயிர் ! குடை தாங்கி நீளும் உன் கரங்கள் தரும் பாதுகாப்பின் உயிரலைகள் காற்றில் கரைந்துக் கொண்டிருக்கிறது நினைவுப் படுகையில். நனைந்து […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு நீண்ட தூர பயணம் தான் இதற்கு முன்பும், இதற்கு பின்பும் ஒருவரு மில்லை. தனித்து விடப்பட்டும் தனியன் என்று ஒப்பும் மனமில்லை ! சொந்தம் கொண்டாடும் சொந்தங்களே சொந்தமில்லை. பிடி மண்ணில் ஆசைபட்டு நிற்குமா மனம் ? பொம்மையை இறுகப் பற்றி மழலைக் குணம் ஒவ்வொரு மனிதத்திடமும். காதலன் காதலியையும் காதலி காதலனையும் பொருளாகப் பாவிக்கும் உயர்ந்த குணம் பெற்றோர் பிள்ளைகளையும் உரிமை பாராட்டட்டும். கொத்தடிமைகள் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு காற்றெழுதும் உந்தன் ஞாபகத்தை யார் தடை செய்குவார் ? தோற்றம் தரும் இந்த காதலையும் யார் பிணை செய்குவார் ? […]