கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் மாவட்டக்காரர் என்பதில் எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் பெருமை உண்டு. அவர் மதுரைப் பக்கத்துக் கொச்சைத் தழிழில் படைத்த கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப் போர் ஆகியவை அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் இனங்காட்டின என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அவர் ஊரான வடுகபட்டி எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஊராகும். போற்றுதலுக்குரிய இந்நாவல்களை வைரமுத்து படைப்பதற்குப் பல நாள்களுக்கு முன்னால் கவிஞர் அமரர் வாலி அவர்களைப் பற்றிய கட்டுரை […]
சர்ச்சைகுரிய இசை, நாட்டிய விமரிசனக் கட்டுரைகளைத் தமிழ் இதழ்களிலும் ஆங்கில இதழ்களிலும் எழுதிச் சிலருடைய நட்பையும் பலருடைய பகைமையையும் சம்பாதித்துக்கொண்ட அமரர் சுப்புடு அவர்களின் அறிமுகம் 1997 இல் ஏற்பட்டது. அது கூட நேரடியான அறிமுகமன்று. கடிதம் வாயிலாகத்தான். அவரது கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியதற்கு அவர் மிகுந்த அன்புடன் பதில் எழுதியிருந்தார். மிகப் பிரபலமான பெரியவர் பதில் எழுதுவார் என்று எதிர்பார்க்கவில்லை. நன்றி தெரிவித்த பதில் கடிதமாக மட்டுமின்றி, அவரும் சில […]
சகுந்தலாவின் வீட்டு வாசலில் சோமசேகரனின் பைக் வந்து நின்ற போது சரியாக மணி ஐந்தே முக்கால். பைக் ஓசை கேட்டதுமே நிர்மலா ஓடி வந்து கதவைத் திறந்து, மலர்ச்சியுடன், “வாங்க, மாமா!” என்றாள். அவர் சிரித்துக்கொண்டே அவளுடன் உள்ளே சென்று அமர்ந்தார். சகுந்தலா அவருக்காகவே காத்துக்கொண்டிருந்தவள் போல் ஒரு தட்டில் பாதாம் அல்வாவையும், இன்னொன்றில் வாழைக்காய் பஜ்ஜியையும் கொண்டுவந்து வைத்தாள். “நீங்க சாப்பிட்டாச்சா?” என்று கேட்டபடி பாதாம் அல்வாவிலிருந்து கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்த சோமசேகரன், […]
முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய விஷயம். தொடர்ந்து என் கதைகளை வெளியிட்டுக்கொண்டிருந்த ஒரு வார இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பினேன். நான் கவிஞை யல்லேன். எனினும் என்னைக் கவிதை எழுத வைத்த ‘குற்றத்தை’ அவ்விதழ் புரிந்தது! பெண்களின் அங்க அவயங்களைக் கொச்சையான பாணியில் விவரித்து எழுதிவந்த எழுத்தாளர்களை ஆதரிப்பதில் அவ்விதழ் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் ஆசிரியர் மிகவும் நல்லவர். கடவுள் நம்பிக்கை உள்ளவர். நிறைய நல்லனவற்றைச் செய்துள்ளவராம். ஆனால் அவர் நடத்திய வார இதழின் […]
அர்ஜுன் விஷமமாய்ச் சிரித்தான்: ‘அதிர்ச்சியா யிருக்கா? நீயும் அந்த ஹெட்மிஸ்ட்ரெஸ் மேரியம்மாவும் கல்யாண மண்டப வாசல்ல ஆட்டோவிலேர்ந்து இறங்கினப்ப, நான் எதிர்ப் பெட்டிக் கடையில சிகரெட் வாங்கிட்டிருந்தேன். முதல்ல நான் உன்னை சரியா கவனிக்கல்லே. முக்கால் முகத்தை மறைக்கிற மாதிரி முக்காடும் கண்ணடியும் போட்டுக்கிட்டிருந்தே. ஆனா, மேரி யம்மாவைப் பார்த்ததும் உன்னை நல்லா கவனிக்கணும்னு எனக்குத் தோணிடிச்சு. கவனிச்சதும், உன்னோட அழகான உருவம், நடை இதுகள்லேருந்து.. .. ..’ ‘போதும். நிறுத்து.’ அர்ஜுன் இளித்த பின் தொடர்ந்தான்: […]
சில நினைவுகள் நம் முயற்சி ஏதும் இன்றியே மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மறக்க நாம் முயல்வதில்லை என்பது ஒரு புறமிருக்க, நாம் முயன்றாலும் அவை நம் உள்ளத்தை விட்டு அகலுவதில்லை. அதிலும், அவை சிறு வயது நினைவுகளாக இருப்பின் வாழ்க்கையின் கடைசி நாளில் கூட அவை நினைவுக்கு வருவதாய் ஒருவர் சொல்லக் கேள்வி. மிகச் சிறு வயதில் என் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. அப்போது எனக்குப் பதினொரு வயதுதான். […]
தன் தாய் சகுந்தலாவின் குரலில் அத்தகைய கண்டிப்பை அதற்கு முன்னர் எக்காலத்திலும் அறிந்திராத ஷைலஜா திகைப்புடன் அவளை ஏறிட்டாள். ‘என்ன பொய்ம்மா சொல்லச் சொல்றே?’ ‘நீ கல்யாணம் பண்ணிக்கிட்டுக் குடியும் குடித்தனமுமா நிம்மதியா வாழணும்னா, உன் அம்மா ஒரு காபரே ஆட்டக்காரிங்கிறதை நீ மறைச்சுத்தான் ஆகணும். ஆனா, நான் யாருன்றது இந்த மெட்ராஸ் பெரிய மனுஷங்கள்ள முக்கால்வாசிப் பேருக்குத் தெரியும். அதனால அதை உன்னால வெற்றிகரமா மறைக்க முடியாது.’ ‘அப்ப எப்படி.. .. ..’ ‘அதுக்கு ஒரு […]
இந்திய மருத்துவச் சங்கத்தின் (Indian Medical Council) சென்னைக் கிளை 1997 ஆம் ஆண்டில் மருத்துவர் தொடர்புள்ள என் சிறுகதை யொன்றைப் படித்த பின் எனக்கு ஓர் அச்சுறுத்தும் கடிதத்தை அனுப்பிவைத்தது. அதன் செயலர் அதில் அச் சங்கத்தின் சார்பில் கையொப்பமிட்டிருந்தார். நான் ஆனந்தவிகடனில் எழுதியிருந்த ‘கவரிமான் கணவரே!’ எனும் சிறுகதையின் உள்ளடக்கத்தை ஆட்சேபித்துத் தான் அதனை அவர் எனக்கு அனுப்பி யிருந்தார். மருத்துவர்களையும் மருத்துவ உலகையும் இழிவு படுத்தும் முறையில் அக்கதை எழுதப் பட்டிருந்ததாகவும் எனவே […]
ஷைலஜாவின் ஆயாவாக இருந்த நீலவேணி சாதுவானவள். அமைதியானவள். அதிகம் பேசாதவளும்கூட. அவள் கண்களில் தன்பால் அன்பும் இரக்கமும் சுரப்பதையும் ஷைலஜாவை அவள் ஒரு வளர்ப்புத் தாய்க்குரிய பாசத்துடன் நேசிப்பதையும் சகுந்தலா அறிந்திருந்தாள். ஆனால், நீலவேணி தன் வாயைத் திறந்து விநாயக்ராமைப் பற்றி அவதூறாக எதுவுமே பேசி அவள் கேட்டது கிடையாது. எனினும் அவளுக்கு அவனைப் பிடிக்காது என்பது மட்டும் சகுந்தலாவுக்குத் தெரியும். அவள் புரிந்துகொண்டிருந்த வரையில் நீலவேணி நம்பத் தகுந்தவள் என்பதால், சகுந்தலா தனக்கோ அல்லது ஷைலஜாவுக்கோ […]
மைய அரசு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலையில் சேர்ந்த புதிது. அச்சம் என்றால் என்னவென்றே அறிந்திராத பருவம். அநியாயங்களைத் தட்டிக் கேட்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாதென்னும் கோட்பாடு வலியுறுத்தப்பட்டு எங்கள் அப்பாவால் வளர்க்கப்பட்ட முறை. அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டுத் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநரிடம் ஒரு நாள் வாய்மொழிக் கடிதம் வாங்கச் சென்ற போது ஏற்பட்ட அனுபவம். எனக்கு அவர் ஒரு கடிதத்தை வாய்மொழிந்துகொண்டிருந்த போது அவரது மேசை மீதிருந்த தொலைப்பேசி மணியடிக்க அவர் […]