லதா ராமகிருஷ்ணன் நட்பினருக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்புக்காக சின்னச்சின்ன பொருட்களை விற்றும், நல்ல நல்ல பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்தும் வாழும் பார்வையற்றோர் பலர் இன்று கையறுநிலையில் இருப்பது குறித்தும் மிகவும் மனம் வருந்தி எழுதியிருந்தார். அந்த சமயத்தில் நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் கையிருப்பு 26,000 ரூபாய் மட்டுமே. எங்கள் நிறுவனத் தலைவர் அமரர் டாக்டர் ஜி.ஜெயராமன் […]
லதா ராமகிருஷ்ணன் சென்னையின் வானிலை எப்போதுமே HOT, HOTTER, HOTTEST என்று சொல்வார்கள். அதுவும் மார்ச் ஆரம்பத்திலிருந்து ஜூன் முடிய வெய்யிலின் தாக்கம் ஏறிக்கொண்டே போகும். இந்த நாட்களில்மனிதர்களிடையே நிறைய சண்டை-சச்சரவுகள், கைகலப்புகள் எழுவது வழக்கம். அரசுப் பேருந்துகளில் பயணமாகும்போது இதைப் பார்த்தி ருக்கிறேன். பங்கெடுத்திருக்கிறேன்; அனுபவித்திருக்கிறேன். உலகப்புகழ் பெற்ற ஓவியர் VAN GAUG இன் வாழ்க்கை யைப் பேசும் புனைவான THE LUST FOR LIFE நூலில் பஸிஃபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தாஹிதி […]
_ லதா ராமகிருஷ்ணன் //மைக்கேல் லெவிட் (*விக்கிப்பீடியாவில் இருந்து. மைக்கேல் லெவிட் (Michael Levitt, பிறப்பு: 9 மே 1947) என்பவர் அமெரிக்க–பிரித்தானிய–இசுரேலிய[2] உயிரியற்பியலாளர் ஆவார். இவர் 1987 முதல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[3][4] கணிப்பிய உயிரியலில் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் மைக்கேல் லெவிட் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், மற்றும் மார்ட்டின் கார்ப்பிளசு, ஏரியா வார்செல் ஆகியோருக்கும் “சிக்கலான வேதி […]
நான் இயக்கிய “சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறது.யாவரும் படம் பார்த்து விருப்பக்குறியீடும் சப்ஸ்கிரைப்பும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இச்சிறுபடத்திற்கு நீங்கள் தரும் உற்சாகம் மேலும் படங்கள் எடுக்க ஊக்கமளிக்கும்.உங்கள் ஆதரவு தாருங்கள்.நன்றி/ சிகப்பு சுடி வேணும்ப்பா படக்குழு. / கவிஞர் அய்யப்ப மாதவன் வணக்கம் அய்யப்ப மாதவன், உங்களுடைய எத் தனை வருட கனவு இது! […]
கடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்தியை தமிழ் ஆங்கில நாளிதழ்களில் படிக்க நேர்கிறது. மிகவும் அவலமாக உணர்கிறது மனம். இன்று சென்னை மதுரவாயில் பகுதியில் ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் வசிக்கும் குடும்பத் தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி இரவு பனிரெண்டு மணிக்கும் மேல் சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளிப் புறத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்றபோது அந்தக் குடியிருப்பில் வசிக்கும் 29 வயதுக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் மேற்கொண்ட […]
ஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச் சொல்லும்போதே அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது. இன்னொரு மேம்பட்ட உலகிற்குள் அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. அந்தப் புதினத்தின் இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை அவர் குறிப்பிடும் விதம் பிஞ்சுக் குழந்தையை அதிசயமாய்ப் பார்த்து அத்தனை பத்திரமாய் ஏந்துவதைப் போலிருக்கிறது. கதையில் வரும் காடு குறித்து அவர் பேசும்போது அதில் வாழும் சிங்கராஜாவும் ஊறும் நத்தையுமாகிவிடுகிறார்! அந்த நதிக்கரையில் பொழியும் மழையை அப்படி நனைந்து நனைந்து விவரிக்கிறார்! அந்தக் கதையை எழுதியவரின் பெயரை மந்திர […]
சுனாமி வந்து பல்லாயிரக்கணக்கானொர் இறந்தநிகழ்வுக்குப்பின் சுனாமி என்ற வார்த்தையை நகைச்சுவையாகப் பயன்படுத்திய அறிவுசாலிகள் நிறைய பேர். அவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது ‘கொரோனா’. ஆனால், இதோ, பார்வைக் குறைபாடுடைய இந்த பள்ளி மாணவர்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வுப் பாடலை இயற்றி பாடிதங்களாலான ஆக்கபுர்வமான சமூகநலப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்!
பிரார்த்தனை இதோ இந்கே சில நிமிடங்கள் தொடர்ச்சியாக நான் கைதட்டுவது இதுவரை நான் பொருட்படுத்தாதிருந்திருக்கக்கூடிய பாராட்ட மறந்திருக்கக்கூடிய எல்லோருக்குமானதாகட்டும். ஒரு கிருமியால் என்னுயிர் பறிபோய்விடுமோ என்ற பயத்தால் மட்டுமே நான் இதைச் செய்கிறேன் என்று ஆகிவிடலாகாது. இந்தக் கைத்தட்டல் நேற்றும் இன்றும் நாளையும் மக்கள்பணியாற்றும் எல்லோருக்குமானதாகட்டும். என்னிரு கைகளை யந்திரத்தனமாகச் சேர்த்துக் கரவொலியெழுப்பாமல் மனதின் கைகளைக் கொண்டு நான் தட்டுவேனாக. உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் படைத்தவர்களுக்கு உரித்தாகட்டும் இந்தக் கைத்தட்டல் நான் வாழுங் காலத்தின் அற்புதத் தமிழ்க்கவிஞர்களுக்கு […]
இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் பார்த்துப் புலமுவதைவிட அதைப் போக்க நம்மாலானதைச் செய்வது, ஒரு சிறு அகல்விளக்கையேனும் ஏற்றிவைப்பது மேல். சமூகத்தின் இருள் என்பது அறியாமை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற அதன் சீர்கேடுகள். இவை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பரவியிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சமுதாயம் அடர் இருளில் மூழ்கியிருக்கும். சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவர்கள், சக மனிதர்களை நேசிப்பவர்கள் தனிமனிதர்களாகவோ, ஒத்த கருத்துள்ள மனிதர்களின் ஒரு குழுமமாகவோ இந்த இருளைக் களையும் செயலில் இறங்குகிறார்கள். சமூகத்தைப் பீடித்திருக்கும் பல்வேறு இருள்களில் அறியாமை, […]
லதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11 – பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும் ’பெரிய கடவுள் காக்கவேண்டும்’ என்ற வரியையும், ’தரணியிலே பெருமை வேண்டும்’ என்பதையும் நாம் வழக்கமான அர்த்தத்தில் புரிந்துகொண்டால் பின் எந்தக் கவிதையையும் நம்மால் உள்வாங்கவே இயலாது. ஒரு கவிதை ஒற்றை அர்த்தத்தைக் கொண்டதாய் அனைவருக்கும் புரியும் அளவில் எழுதப்பட்டதா லேயே அது கவிதையாகிவிடுவதாகச் சொல்லமுடியாது. அதேபோல்தான் புரியாக் கவிதையும். […]