லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட கவிதைகளையும் கவிஞரின் பல கோட்டோவியங்களையும் உள்ளடக்கிய முழுத் தொகுப்பிலிருந்து 200 கவிதைகளும் கவிஞரின் அற்புதக் கோட்டோவியங்களும் கொண்ட முதல் மின் நூல் – அமேஸான் – கிண்டில் பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நூலிலிருந்து…… சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் தமிழ் இலக்கிய நூல்களில், குறிப்பாக இலக்கியத்திற்கான மாற்றிதழ்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழின் […]
_லதா ராமகிருஷ்ணன் சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே. கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகள் இவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு தொகுப்பாக கணையாழி பதிப்பகத்தால் வெளியிடப் பட்டது. இப்போது தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ள கவிஞர் இளம்பிறையின் 75 தேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் LINGERING […]
(50 குறுங்கவிதைகள் – (ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு) இப்போது அமேஸான் –கிண்டில் மின் நூல் வடிவிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு AMAZON PAPAERBACK வடிவிலும் வெளிவந்திருக்கிறது! விரைவில் ANAAMIKAA ALPHABETS வெளியீடாக இருமொழித் தொகுப்பாக வழக்கமான நூல்வடிவி லும் கிடைக்கும்) Kindle Price (US$): $1.89 Kindle Price (INR): Rs. 138.00 includes free international wireless delivery via Amazon Whispernet ANTS’ BRIGADE: Poems by Booma Eswaramoorthy(A Renowned Tamil Poet rendered in […]
தரமான கவிஞர் சிறுகதையாசிரியர், திறனாய்வாளர். ஆர்வம் குறையாத வாசிப்பாளர். அவர் அமரராகி ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இறந்த பின் அவருடைய 20 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவையும் மூலக்கவிதைகளுமாக ஒரு சிறிய தொகுப்பு வெளியிட்டேன். அநாமிகா ஆல்ஃபபெட்டின் சிறிய துவக்கம் அந்த நூலில் தான் ஆரம்பமாயிற்று. தணல்கொடிப் பூக்கள், மரமல்லிகைகள் என மூன்று நான்கு கவிதைத் தொகுப்புகள், அநாமதேயக் கரைகள் என்ற சிறுகதைத் தொகுதி, ஆண்டாள் திருப்பாவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய உயர்பாவை என்ற […]
எழுத்தாளர் அசோகமித்திரனின் கதையொன்றில் ஒரு இளைஞன் கடையொன்றில் நுழைந்து அங்குள்ள அரும்பொருட்களைப் பார்த்துக்கொண்டே போவான். ஒன்றிரண்டு பொருட்களின் விலையைக் கேட்பான். ‘நீ வாங்கிக் கிழிக்கப்போகிறாய்’ என்ற எகத்தாளச் சிரிப்போடு கடை சிப்பந்தி அலட்சியமாக பதிலளிப்பான். ’இந்த மாதிரி இளக்காரச் சிரிப்புகளையெல்லம் ‘சப்’பென்று அறைந்து நீக்கினாலே போதும் – உலகின் பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என்று எண்ணிக்கொண்டே அந்த இளைஞன் வெளியேறுவான். இது மிகவும் உண்மை என்பதை உறுதிசெய்யவே சில பேரறிவுசாலிகள் நம்மிடையே இருக்கிறார்கள். அதே இகழ்ச்சிச் சிரிப்போடு […]
பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவி்யேற்கப் போகும் திரு.மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாய் மேற்கண்ட புகைப்படத்தை நானே தயாரித்து என் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளேன். அதைக் குறித்து ஒட்டியும் வெட்டியும் சில கருத்துகள் வந்தவண்ணமுள்ளன. அது நல்லதுதான். எந்த மதத்தினரையும் புண்படுத்துவது யாருடைய நோக்கமாகவும் இருக்கலாகாது. எந்தவொரு மதத்தின் நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றவர்களை அடக்கியாள முயலும்போது அதை எதிர்ப்பதும், கேள்வி கேட்பதும் அறிவுசால் விஷயமே. அதைக்கூட நிதானமாக, சம்பந்தப்பட்ட எல்லோரையும் உள்ளடக்கிய அளவில், நாகரீகமாகச் செய்ய […]
அதெப்படியோ தெரியவில்லை அத்தனை நேரமும் உங்கள் கருத்துகளோடு உடன்பட்டிருந்தபோதெல்லாம் அறிவாளியாக அறியப்பட்ட நான் ஒரு விஷயத்தில் மாறுபட்டுப் பேசியதும் குறுகிய மனதுக்காரியாக, கூமுட்டையாக பாலையும் நீரையும் பிரித்தறியத் தெரியாத பேதையாக பிச்சியாக, நச்சுமன நாசகாரியாக ஏவல் பில்லி சூனியக்காரியாக சீவலுக்கும் பாக்குக்கும் காவலுக்கும் கடுங்காவலுக்கும் வித்தியாசம் தெரியாத புத்திகெட்ட கேனச் சிறுக்கியாக மச்சு பிச்சு மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்படவேண்டியவளாக கள்ளங்கபடப் பொய்ப்பித்தலாட்டப் போலியாக வேலி தாண்டிய வெள்ளாடாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நாசகாரியாக பள்ளந்தோண்டிப் புதைக்கப்படவேண்டியவளாக வெள்ளத்தில் […]
(*விக்கிபீடியாவிலிருந்து) தமிழில் லதா ராமகிருஷ்ணன் ஆபிரகாம் லிங்க்கன் – செருப்புத் தைப்பவரின் மகனாகப் பிறந்து அமெரிக்காவின் ஜனாதிபதியானவர்– அமெரிக்காவின் 16ஆவது அதிபராக 1861 முதல் 1865 வரை இருந்தவர். சக மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பதை எதிர்த்தவர். சட்டம் இயற்றி அந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர். அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்க்கனின் தந்தை செருப்புத் தைப்பவர். செருப்புத் தைப்பவரின் மகன் நாட்டின் அதிபராகிவிட்டானே என்று வழிவழியாக வளவாழ்வு வாழும் பரம்பரையில் வந்தவர்கள் பலர் முகஞ்சுளித்தார்கள். உயர்குடிப் பிறப்பினரான தங்களுக்கே […]
சமீபத்தில் இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் மனதில் தவிர்க்க முடியாமல் மனதில் கிளர்ந் தெழுந்த சில கேள்விகள் கீழே. இவற்றைப் பொதுவெளியில் வைத்தால் கையாலாகாதவர்களின், பொறாமை, பொச்சரிப்பாக வெகு எளிதாகப் பகுக்கப்படும் என்று நன்றாகவே தெரிந்தும் வாளாவிருக்க முடியவில்லை. என்ன செய்ய? எழுத்தாளருக்கு மரியாதை செய்வதாய் பறையறி விக்கப்படும் விழாக்கள் கூட்டங்களிலெல்லாம் திரைப்படத்துறையினர் வந்தால் எழுத்தாளர்கள் ஓடிப்போய் அவர்களை அத்தனை விநயமாக வரவேற்பது கூட நம் வழிவழியான […]
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள். மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம், என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது! கொள்ளை லாபம்தான்! வெள்ளையும் சொள்ளையுமாய் கடையில் அமர்ந்தபடி வழிபோவோர் வருவோரையெல்லாம் ஆழாக்கில் அளந்துபார்த்தல் அப்படியொரு சுவாரசியமான பொழுதுபோக்கு. ஒரு இறப்பைக்கூட துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். இறந்தவரின் மனைவி, மக்களுக்காக இரு சொட்டு முதலைக்கண்ணீர் வடித்து […]