கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத பாவகைகளே இல்லை. ஒவ்வொரு வடிவத்துக்கும் தன் சொற்களால் புது ரத்தத்தைச் செலுத்தினார் அவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஓர் அம்புபோலப் பாய்ந்தது. வேகம், வெப்பம், நேசம், நெருக்கம், […]
எழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. சி.சு.செல்லப்பா தொகுத்திருந்த புதுக்குரல்கள் என்னும் தொகுப்பின் வழியாக புதுக்கவிதை எழுதும் பல கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பற்றித் தெரிந்துவைத்திருந்தேன். அந்தத் தொகுப்பைத்தான் புதுக்கவிதைக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கிய தொகுப்பு என்று சொல்வார்கள். அந்தக் கவிதைகளைப் படிப்பதும் அவற்றைப்பற்றி யோசிப்பதுமாக பல நாட்கள் கழிந்ததுண்டு. ஒருநாள் முடிவெட்டிக்கொள்வதற்காக ராஜா திரையரங்கத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு […]
புத்தாயிரத்தாண்டு தொடங்கிய சமயத்தில்தான் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை நான் முனைப்போடு எழுதத் தொடங்கினேன். எழுதப்பட்ட ஒரு படைப்பு எதார்த்த வாழ்க்கையின் முழு பிரதிபலிப்பல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு வாழ்க்கையின் ஏதோ ஒரு கணம் அல்லது கணத்தின் நிழல் அந்தப் படைப்பின்மீது படிந்திருக்கிறது என்பதும் உண்மை. படைப்பாக்க அழகியலும் படைப்பாளியின் பார்வையும் சேர்ந்து அக்கணங்களைப் பொற்கணங்களாக்குகின்றன. அவற்றை முன்வைத்து கட்டுரைகளை எழுதவேண்டும் என்று தோன்றியது. ஒரு சிறுகதையின் அழகியலைப் புரிந்துகொள்ளவும் அதன் […]
நீர்க்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து அறிதலின் தீ என்னும் தலைப்பில் லாவண்யா சுந்தரராஜனின் மூன்றாவது தொகுதி வெளிவந்திருக்கிறது. நான் கவனித்த வகையில் தொடர்ச்சியாக சீராகவும் சிறப்பாகவும் எழுதி வரும் கவிஞர்களில் ஒருவர் லாவண்யா சுந்தரராஜன். முந்தைய தொகுதிகளில் காணப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் புதிய திசையில் புதிய வடிவத்தோடு பயணம் செய்பவையாக காணப்படுகின்றன இக்கவிதைகள். கவிதை முயற்சியில் லாவண்யாவுக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டையே இது சுட்டிக்காட்டுகிறது. […]
பாவண்ணன் ஒரு புறக்காட்சியில் மானுட வாழ்வின் சாரத்துக்கு இசைவான அம்சத்தைக் கண்டடைவதை ஒரு பேரனுபவம் என்றே சொல்லவேண்டும். கவிதைக்குள் அந்த அனுபவத்தைப் பொருத்தமான சொற்களால் கட்டியெழுப்பும்போது, அது மகத்தான அனுபவமாக உருமாறிவிடும். பிறகு, கச்சிதமாகச் செதுக்கியெடுக்கப்பட்ட ஒரு கோவில் சிற்பம்போல மொழிக்குள் அந்த அனுபவம் நிலைத்திருக்கத் தொடங்கிவிடும். எழுத்துப் பயணத்தில் இந்தத் தேடலின் விசையால் உந்தப்படாத கவிஞர்களே இல்லை. அந்தரங்கம் தொகுதியின் வழியாக தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் செல்வராஜ் ஜெகதீசன். சிவப்பு பச்சை மஞ்சள் […]
சமீபத்தில் நாளிதழில் ஒரு செய்தியைப் படித்தேன். எழுத்தாளர் விவேக் ஷான்பாக் தலைமையேற்ற ஒரு குழு எழுத்தாளர்களைப்பற்றிய ஆவணப்படங்களை எடுப்பதற்கான கருத்துருக்களை ஓர் அமைப்பின் சார்பில் பரிசீலனை செய்து, அவற்றை அனுப்பியவர்களை நேர்காணல் செய்து, இறுதிச்சுற்றில் தகுதி பெற்ற நான்கு பேர் கொண்ட பட்டியலை அறிவித்திருந்தது. இந்த அமைப்பைப்போலவே அரசு சார்ந்ததும் சாராததுமான பல அமைப்புகள் கன்னடத்தில் ஆவணப்பட ஆக்கத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. படங்கள் முடிவடைந்ததும் பொதுமக்களுக்காக அவை திரையிடப்படுகின்றன. நான் பத்து படங்களுக்கும் […]
கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை. தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு தன்னளவில் பொருத்தமானதாகவும் வசீகரமானதாகவும் ஒவ்வொரு கவிதையும் அமைந்துவிடுகின்றது. மொழியின் தளத்திலும் உணர்வின் தளத்திலும் இந்த வசீகரம் ஒருபோதும் கூடிவிடாமலும் குறைந்துவிடாமலும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று இயைந்து ஒளிர்கின்றன. இதுவே கதிர்பாரதியின் கவிதைகளின் தென்படும் முக்கியமான சிறப்பம்சம். மற்ற கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் […]
பாவண்ணன் கடந்த வாரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல் அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, அப்பாவோடு ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒருநாள் அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். வெகுதொலைவு நடந்த களைப்பில் ஒரு பூங்காவுக்கு எதிரில் நின்றிருக்கிறார். அங்கே ஏற்கனவே ஏராளமான மாணவர்கள் கூட்டம்கூட்டமாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திர வேட்கையுடன் கல்லூரியை விட்டு வெளியேறியவர்கள். ஒரு கூட்டம் நிகழ்த்துவதற்காக அங்கே சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியைப்பற்றிய எந்தத் […]
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகாலத் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான எல்லீஸ் டங்கன் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அவர் சில ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறார் என்னும் தகவல் கிடைத்தது. அவற்றில் தமிழ்நாட்டுக் கிராமங்களைப்பற்றிய சித்திரத்தை வழங்கும்வகையில் இருபது நிமிட அளவில் ஓடக்கூடிய ஒரு படமும் ஒன்று. உடனடியாக அந்தப் படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். ஒரு வயல்வெளிக்காட்சியிலிருந்து தொடங்குகிறது அந்தப் படம். அருமையான பின்னணி இசையுடன் ஒவ்வொரு காட்சியும் உயிர்த்துடிப்புடன் அழகாக இருக்கிறது. அதிகாலையில் உழவர்கள் ஏர்பூட்டி வயல்களில் […]
பாவண்ணன் தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த எழுத்தாளர் தவசி எழுதிய ’அப்பாவின் தண்டனைகள்’ என்னும் நாவலைத்தான் முதலில் படித்தேன். அந்த நாவல் வழங்கிய அனுபவம் நெஞ்சில் இருக்கும்போதே, ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு இதழில் வெளிவந்த ‘பூனைகள் நகரம்’ என்னும் ஜப்பானியச் சிறுகதையை அடுத்து படித்தேன். (மூலம்: ஹாருகி முரகாமி) அசோகமித்திரன் கட்டியெழுப்பும் சீரான தந்தை-மகன் உறவு சார்ந்த படைப்புகளை தராசின் ஒரு […]