உள்ளுக்குள் வானரசு கொஞ்சம் பொறுங்கள் வெற்றிக் கோப்பையை பறிகொடுத்து எதிரியை சம்பாதித்துக் கொண்டேன் கவனமாய் இருங்கள் பல தவறுகளை செய்தாலும் தண்டனை ஒன்று தான் விழிப்புடன் இருங்கள் எதிர்ப்படுபவர்கள் அனைவரும் மனிதரில்லை அன்பாக இருங்கள் தன்னுடைய படைப்புகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் தயாராய் இருங்கள் எங்கிருந்தேனும் அம்பு எய்யப்படலாம் பணிவாக இருங்கள் கடவுள் எந்த ரூபத்திலும் உங்களை வந்து சந்திக்கலாம் கனிவுடன் இருங்கள் இறைவன் வேறொன்றையும் உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை பக்தியுடன் இருங்கள் இறைவன் உங்களுக்கு […]
வசந்தத்தின் மகிழ்ச்சியான அழைப்பை ஏற்காது நான் வாயிலில் நிற்கிறேன் சிநேகிதிகளின் கணவன்களுடன் எப்படி பழக வேண்டும் என கற்றுக் கொண்டிருக்கிறேன் எந்தப் பிரச்சனையில் தலையிடுவது எந்த சிக்கல்களில் விலகி இருப்பது என்று நானே முடிவு செய்கிறேன் குழந்தைகளின் படிப்பைப் பற்றி விசாரிக்கும் போது மனதில் மண்புழு நெளிகிறது வரலெட்சுமி விரதத்தில் அவள் உச்சித் திலகம் இட்டுக்கொண்ட போது மனம் ஏனோ தீப்பற்றி எரிகிறது மனைவியிடம் சொல்ல முடியாத ரகசியங்கள் இன்னும் இருக்கின்றன தரக்குறைவான எண்ணங்கள் […]
விலகுங்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன் வந்து கொண்டிருக்கிறான் அவனுக்கு எது பொய் எது மெய்யென்று தெரியாது ரகசியங்களை சுமந்து கொண்டு திரிபவர்கள் அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை அர்த்தமிழந்த வாழ்க்கையின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறான் மின்மினி வெளிச்சமாவது தேவை அவன் உறங்குவதற்கு விடியாத இரவுகள் அவன் வரப்பிரசாதம் வாழ்க்கைப் பந்தயத்தில் கடைசியாகக் கூட அவன் வருவதில்லை மேகங்களற்ற வானத்தின் அழகை அவன் பருகுவதில்லை வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது நடுவழியில் அவன் பெயரைக் கூட […]
மீட்பரின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறேன் மெசியா தான் இவர் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் அவருக்கு பயந்து ஓய்வு நாளில் ஒன்றும் செய்வதில்லை நியாத்தீர்ப்பில் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கும் அவரை இந்த விதை அழியப் போகிறது என்று முன்பே அவர் சொன்னது எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை உங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வந்ததாக அவர் கூறியது மலையில் பட்டு எதிரொலித்தது கடவுளைக் காண வேண்டுமா எனக் கூறி என்னை கடலில் அமிழ்த்திய போது தான் எனக்கு […]
புழக்கமில்லாத வீட்டில் சிட்டுக்குருவி புதுக்குடித்தனம். ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்க எறும்புகளாய் ஜனங்கள். நிலவுத்தட்டில் பரிமாறப்பட்ட உணவு நான் நீ என்ற போட்டியால் நாய்க்குப் போனது. புல் தயங்குகிறது விடியலில் பனித்துளிக்கு விடைகொடுக்க. நீர் ஊறுவதற்கு முன்பே நரபலி கேட்கிறது ஆழ்துளைக் கிணறு. சாளரம் வழியே சவஊர்வலக் காட்சி எத்தனைப் பூக்கள் சிதைந்து அழியும் செருப்புக்கால்களால். அடுக்களையில் வியர்வை வழிய சமையல் செய்தவள் சாப்பிடுவதென்னவோ மிச்சத்தைத் […]
பிரபஞ்சத்தில் எவருமில்லை உன்னையும் என்னையும் தவிர உன் காலடித்தடங்கள் பூமியில் பதிவதே இல்லையே ஏன்? உன்னை சுற்றியதற்கு கோயில் பிரகாரத்தை சுற்றி இருந்தால் கூட வரம் கிடைத்திருக்கும் பண்பலையில் ஒலிபரப்பாகும் சோக கீதங்கள் உன் கல் நெஞ்சைக் கரைக்காதா? மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்தார் இதயம் லப்டப் என்று துடிக்காமல் உனது பெயரைச் சொல்லி துடித்தது மதுக்கிண்ணங்கள் தான் போதை தரும் என எண்ணியிருந்தேன் உன் இரு கண்களைக் காண்பதற்கு முன் நீ திரும்பிப் பார்த்தால் எரிமலை […]
ஜென் கனவு கலைத்துப் போடப்பட்ட பொருட்களின் மத்தியில் வெளிநபர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட மதுக்கிண்ணங்கள். இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் தாழிடப்படாத கதவை திறப்பதற்கு அலங்கோலமாக உள்ள வரவேற்பறைதான் எத்தனை அழகு. அலுவலக பணி நிமித்தம் முகமன் கூறி கைகுலுக்கும் போது புன்னகைப் பிரதி ஒன்றை வெளிப்படுத்த நேர்கிறது. எவராலும் கண்டுபிடிக்க முடியாத மறைவிடம் தேடினேன் எங்கேயும் பின்தொடர்ந்து வந்துவிடுகிறது நிழல். அவள் நனைவதால் கரைந்துவிடுவதில்லை தான் இருந்தாலும் அவளின்றி குடையில் […]
ஜென் பாதை அந்திப் பொழுது பறவைகள் கூடடையும் விடியும் வரை சுவர்க்கோழி சப்தம் முன்பனி கம்பளி ஆடைக்குள் நானும், நிலாவும் தண்ணீருக்கு வெளியே தத்தளிக்கும் மீன் சில நாழிகைக்குள் குழம்பில் மிதக்கும் கருக்கல் இருளைக் கிழிக்கும் பரிதியின் கிரணம் சிதறிய நீர்த்துளிகள் ஒவ்வொன்றிலும் பரிதியின் பிம்பம் கொட்டும் மழை வெள்ள நீரில் மிதக்கும் பிணம் மேகத்தை பின்தொடர்ந்தேன் சிறிது தொலைவைக் கடந்ததும் மேகம் கரைந்தது வானம் எஞ்சியது […]
அர்த்தநாரி அவர் பின்னாலேயே நாய் ஓடியது அகஸ்மாத்தாக கல்லெறிய குனிந்தார் நாய் தன் வாலால் புட்டத்தை மறைத்துக் கொண்டது தோட்டத்திலுள்ள பூவின் வனப்பு அவரை சுண்டி இழுத்தது பறவையினங்கள் விதைப்பதுமில்லை,அறுப்பதுமில்லை காலனின் சூத்திரம் இவருக்கு இன்னும் கைவரவில்லை வானம் கறுப்பு ஆடை தரிக்க பொழியும் மழை மண்ணை குளிர்விக்க மரணத்திற்கு பிறகு நற்சான்றிதழ் அளிப்பவர் யார் பாற்கடலில் கடைந்தெடுத்த அமிர்தத்தை மாறுவேடமணிந்து உண்டவர் யார் வெற்றுத் தாளுக்கும் ஓவியத்துக்கும் வித்தியாசம் தெரியாதா கண்களுக்கு ஆதியைக் […]
அந்த வீட்டைக் கடந்து போக முடியவில்லை மாமரத்தைப் பற்றி விசாரிக்க யேணும் படியேறி விடுகிறேன் மைனாக்களுக்கும் அணில்களுக்கும் அடைக்கலம் தந்த விருட்சம் வேரோடு விழுந்து கிடக்கிறது கொல்லையில் மாமரம் இருக்குல்ல அந்த வீடுதான் என்று வீட்டுக்கு விலாசம் தந்த மரம் தச்சன் கைகளுக்கா போவது ரேஷன் அட்டையில் பெயரில்லை மற்றபடி அம்மரம் அந்த வீட்டின் உறுப்பினர் தான் பச்சை இலைகள் ஓரிரு நாளில் சருகாகிவிடும் காய்ந்த குச்சிகள் அடுப்பெரிக்க உபயோகப்படும் மரம் வீட்டின் உத்தரமாகிவிடும் […]