“என்னப்பா, வேலு என்ன முடிவு செய்திருக்கே.. 300 ரூவா பணம், பிரியாணி பொட்டலம், தண்ணி பாக்கெட்டு, ஒரு குவார்ட்டர்.. ஆறு மணிநேரம் ஜே போடோணும் அவ்ளோதான். என்ன வர்றயா .. இல்லையா?” “அண்ணே.. எனக்கு இதெல்லாம் பயக்கமில்லண்ணே… வேற எதனாச்சும் வேலை இருந்தா சொல்லுண்ணே.. “ “ஏன்..துரை அரசாங்க உத்தியோகந்தான் பாப்பீகளோ… ?” “இல்லண்ணே.. மூட்டை தூக்கற வேலையா இருந்தாலும் தேவல.. குழந்தைக்கு உடம்பு சரியில்ல. ஆசுபத்திரிக்கு கூட்டிப்போகக் கூட காசு இல்லண்ணே. கொஞ்ச்ம் மனசு வையிண்ணே..” […]
’வேதனை’ பற்றி பகரும்படி வினவினாளே பேதையொருத்தி! உம் புரிதல்கள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள அந்த ஓட்டின் உடைவே உம் வேதனை. அக்கனியின் கல்லும் உடையும் பொருட்டு, அதன் இருதயம், கனலோனின் கிரணமதைத் தாங்குதல்போலே, நீவிரும் உம் வேதனையை அறியத்தான் வேண்டும். உம் வாழ்க்கையதின் அன்றாட அற்புதக கணங்களினூடே, உம் இருதயமதை உம்மால் கிடத்த முடியுமானால், உம்முடைய மகிழ்ச்சியைக் காட்டிலும் உம்முடைய வேதனைகள் குறைந்த அதிசயோத்தியாகக் காட்சியளிக்காது; உம்முடைய வயல்வெளிகளின்மீது கடந்து போகும் அந்தப் பருவக்காலங்களை ஒப்புக்கொள்ளுமாப்போலே, எஞ்ஞான்றும் […]
”என்னா துணிச்சல் அந்த பொம்பிளைக்கு.. ராத்திரி 10 மணிக்கு டெம்ப்போ வண்டீல ஏறிக்கிட்டு எவனோடயோ வரா… இவள்ளாம் ஒரு பொம்பிளையா…” “அண்ணே… அந்தம்மா வண்டியில நூலு பைய ஏத்திக்கிட்டு அலைஞ்சு, திரிஞ்சு வருது பாவம்….அதப்போயி…” “என்னடா பேசுத..நீ.. நம்ம சாதி சனம் என்ன பேசும்.. தனியா ஒரு பொம்பிளை இப்புடி சுத்திப்புட்டு வந்தா..” “அண்ணே..போதும்னே…நிப்பாட்டுங்க…. அந்த அக்கா வந்துடப்போவுது பாவம்.. காதுல கேட்டா விசனப்படும்” “ என்னடா.. சொம்மா ஃபீலிங்க் […]
உம்முடைய அறிவெனும் உதயமதில், முன்னமே அரை உறக்க நிலையில் இருப்பதையன்றி வேறொன்றும் உமக்கு எவரும் வெளியிடப்போவதில்லை. ஆலய நிழலில் நடைபயிலும் அந்த ஆசிரியர், தம் மாணாக்கர்களுக்கு, ஓரளவிற்கு தம் நம்பிக்கை மற்றும் அன்பினாலும் வழங்குவாரேயன்றி, தம் ஆத்ம ஞானத்தினாலன்று. உண்மையிலேயே அவர் மதிநுட்பமுடையவராயின், அவர்தம் ஆத்ம ஞானமெனும் வீட்டில் நீவிர் நுழைவதற்கு ஆணையிடமாட்டார். ஆயின், உம்மை உம் சுயமனமதின் நுழைவாயிலினுள் வழிநடத்துவார். அவர் வானியல் அறிஞராயின், விண்வெளி குறித்த தம்முடைய புரிதலை உம்மிடம் பகிரலாம். ஆயினும் அவர்தம் […]
தேவையில்லாத எதிர்பார்ப்புகளே ஒருவரை வாழ்க்கையின் அடிமையாக்குகிறது.. இரவு படித்து முடித்து வைத்த புத்தகத்தின் சில வரிகள் பளிச்சென்று நினைவிற்கு வந்தது தூங்கி முழித்தவுடன்…. அழகாக குளித்து முடித்து நார்மலான காலை வழிபாடு முடித்து மதிய உணவிற்கு இரண்டு சப்பாத்தியும் கொஞ்சம் சன்னாவும் ஒரு சிறிய ஆப்பிளும் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு காலையில் கார்ன் ஃபிளேக்ஸ் ஒரு பவுல் அதிவேகமாக விழுங்கிவிட்டு உடை மாற்றி லேசான ஒப்பனையுடன், ஏதோ ஒரு டாப்ஸ் ஒரு ஜீன்ஸ் என்று மாட்டிக் […]
பவள சங்கரி ஓய்வு பெற்ற ஒரு சி.பி.ஐ. உயர் அதிகாரியின் மலரும் நினைவுகள் ஆசிரியர் : கே.ஏ. ராஜகோபாலன் ஆங்கில மொழியின் தமிழாக்கம் : ராணிமைந்தன் பக்கம் :320 முதற்பதிப்பு – பிப்ரவரி 2000 நடுவண் புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigation) பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகச் செயல்படுகிற, நாட்டுப் பாதுகாப்பு குறித்த முக்கிய விசயங்களை ஆய்வு செய்யும் இந்திய அரசாங்கத்தின் உயர்நிலை புலனாய்வுத் துறைதான் சி.பி.ஐ என்கிற இந்தத் […]
”ஏங்க.. அம்மா பாருங்க இன்னும் படுக்காம ஏதோ எழுதிட்டே இருக்காங்க. உடம்பு கெட்டுடப் போகுது. டாக்டர் தூக்க மாத்திரை கொடுத்திருக்கார். நேரத்திலேயே படுக்கச் சொன்னாரே.. நீங்கதான் சொல்லக் கூடாதா…” “விடும்மா.. வனிதா… அவங்க முருகா சரணம் எழுதுவாங்கன்னு உனக்குத்தான் தெரியுமே. தூக்கம் வந்தா அவங்களே படுக்கப் போயிடுவாங்க” இருவர் மனதிலும் ஏதோ பாரம் அழுத்த பேச்சு தடைப்பட்டு, சிந்தனை வலுப்பெற்றது. அப்பாவிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ததற்கு முழுதாக நண்பர்களிடம் வாங்கிய ஐந்து இலட்சம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. […]
மிகப் பிரம்மாண்டமான அரங்கம். கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சபையின் நாயகன் 27 வயது இளைஞன். கருத்த நெடிய உருவம். ஒல்லியான தேகம். எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு சாதாரணமான பேண்ட், சட்டை, கண்களில் ஒளி மின்ன, பரபரப்பான பார்வை, சபையில் அலைந்து யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது அவ்வப்போது. அரசு உயர் அதிகாரிகளும், சில விஞ்ஞானிகளும், வெளிநாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்று சபை களைகட்டத் தொடங்கியிருந்தது. மகனுக்கு எதற்காக […]
மூன்றாவது நாளாக இன்றும் அதே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்ல முடியவில்லை குயிலிக்கு. யாராக இருக்கும் இந்த மனிதர்… பார்க்க பெரிய இடத்துப் பிள்ளை போல இருக்குதே என்று யோசித்துக் கொண்டே அருகில் சென்று, மூக்கினருகில் கையை வைத்துப் பார்த்தாள். நல்ல வேளையாக மூச்சு இருக்கிறது என்று மகிழ்ச்சியடைந்தாலும், நெற்றியின் இடது புறம் இரத்தம் வந்து காய்ந்து கிடந்தது. சுய நினைவின்றி கிடப்பது தெரிந்தது. யாரையாவது துணைக்குக் கூப்பிடலாம் […]
சாம்பிராணிப் புகையின் மணம், மேக மூட்டமாய் வீடு முழுவதும் நிறைத்திருக்க, வெங்கடேசுவர சுப்ரபாதம் இதமாய் ஒலிக்க, விடியலில் எழுந்து குளித்து, மஞ்சள் பூசி, குங்குமமிட்ட மங்கலகரமான முகத்துடன், நுனியில் முடிந்த கூந்தலில் கொஞ்சமாக முல்லைப் பூவும் சூடி, விளக்கேற்றி, பூஜை முடித்து, மணக்க, மணக்க பில்டர் காபியுடன் மகனை எழுப்ப வந்தாள் மங்களம். கணவர் பூஜை அறையில் இருக்கிறார். பூஜை முடிய எப்படியும் இன்னும் 20 நிமிடமாவது ஆகும். மகன் குளிக்காமல் காபி சாப்பிடுவதற்கு திட்டி […]