‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தருவான்’ என்ற நம்பிக்கையில்தான் கைமாற்றியது. எடுத்துக்கொண்டுபோனவன் வாய்கூசாமல் கூறுகிறான் -தன் வாரிசு என்று. “உன் குழந்தையெனில் என் கையில் எப்படி வந்தது? நீ தானே விலைக்கு விற்றாய்?’ என்று ஊரின் நடுவில் நின்று பொய்யை உரக்கக் கூவி அன்பில்லாத அரக்கனாய் அடையாளங்காட்ட முனைகிறான் அந்த அன்புத் தந்தையை. ஆறுகோடிகளை நேரில் கண்டபோதுகூட விரிந்ததில்லை அந்தத் தகப்பனின் விழிகள். சுற்றிலுமுள்ள கண்டங்களிலெல்லாம் குத்துமதிப்பாக தலா இரண்டு அல்லது இரண்டைந்து கூட […]
ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி எனக்கென்ன கவலை யென்றிருந்தான் எத்தனாதி யெத்தனொருவன்_ என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி. மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம் கிளிக்கு ஒரு லாப்-டாப்பை மட்டும் கொடுக்க_ கூகிள்-சர்ச்சில் தேடி தன் குடலுக்கு பாதிப்பில்லாமல் கிழித்து ரகசியத்தை வெளியே எடுத்த கிளி _ அதை குகைக்கு அருகாமையில் ஓடிகொண்டிருந்த நதியின் பளிங்குநீரில் காட்ட_ ஆறு அதன் பிரதிபலிப்பைத் தன்னோடு […]
ஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும். ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள். புதிர்விளையாட்டு. காயம்பட்ட ஒருவரை ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும் பாடையில் தூக்கி சுடுகாட்டிற்குக் கொண்டுசெல்வதற்கும் இடையே குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது உண்டுதானே. முகமூடி அதிவேகத்தில் விரையும் ரயிலின் அருகில் நின்று ஸெல்ஃபி எடுத்துக்கொண்டால் ஆபத்து. அன்பே உருவாயொரு களங்கமில்லாக் குழந்தையாய் என்றேனும் சிரிக்கக் […]
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். புத்துசாலிதான்….. குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம். குருவியென்று எதுவுமே இல்லையென்றால்….. படங்களைக் காட்டினால் ‘க்ராஃபிக்ஸ்’ என்றார். ஓவியங்களைக் காட்டினால் வரைந்தவரின் ’கிரியேட்டிவிட்டி’ என்றார். குருவிகள் சாகாவரம் பெற்று சிறகடித்துக்கொண்டிருக்கும் கவிதைகளை வாசித்துக்காட்டினால் ’கவியின் மெய் பொய்தானே’ என்று கண்ணடித்தார். நானே பார்த்திருக்கிறேன் என்றேன். […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரேயொரு அடி_ செத்துவீழ்ந்தது கொசு; சிலிர்த்தகன்றது பசு. சரிந்துவிழுந்து படுத்த படுக்கையானார் தெரிந்தவரின் சகோதரி. சிரிப்பாய்ச் சிரித்துவிட்டது கவியின் பொய். ’அய்’ ஆனது ‘ய்’ செல்லம் பெருகியது வெள்ளமாய். உணரமுடிந்தது உயிர்த்துடிப்பை. உள்வாங்கும்படியாகியது நச்சுக்காற்றை. உற்றுப்பார்க்க முடிந்தது நேற்றை ஒளிந்திருப்பது சிறுமியா காலமா என் மறுபக்கமா? தொடர்ந்து வரக்கூடியது மாடா? லேய்டா ? க்கோடா? ஒரேயடியாய்க் கடந்துபோனதொரு நொடி. உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டது பிள்ளை. உயரேயிருந்த நிலா மறைந்தது மேகத்துணுக்கில். கணக்கில்லாத எல்லைகளில் ஒன்றின் […]
’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று அதிநவீனமா யொரு வரி எழுதியவர் ‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின் தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால் கவிதையாகிடுமாவென அடுத்தகவியை இடித்துக்காட்டி ‘நிலம் விட்டு நிலம் சென்றாலும் நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு. பின்குறிப்பாய், ‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால் ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’ எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் […]
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஊரெல்லாம் ஒலிபெருக்கிகள் விதவிதமாய் உள்ளங்கைகளிலெல்லாம் தாயக்கட்டைகள் உருட்டத்தோதாய்… வெட்டாட்டம் கனஜோராய் நடைபெறும் விடையறியாக் கேள்விகளோடு…. சுமையதிகமாக உணரும் கேள்வியே தாங்கிக்கல்லுமாகும்! சிறிதே வாகாய்ப் பிரித்துப்போட்டால் போதும் ஸோஃபாவாகி அமரச் சொல்லும்! சரிந்தமர்ந்தால் தரையில் முதுகுபதித்து இளைப்பாற முடியும்! கேள்வியின் மேல்வளைவு குடையோ கிரீடமோ….? மேற்பகுதி சறுக்குமரமாகும் வண்ணம் ஒரு கேள்வியைக் குப்புறப் போட்டு அதன் புள்ளிமீதமர்ந்து ஒரு பிரத்யேக பைனாகுலரில் பார்த்தால் பதிலின் […]
ஒருவிதத்தில் அதுவுமோர் அருவவெளிதான்…. அந்த விரிபரப்பெங்கும் அங்கிங்கெனாதபடி அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன ஆட்கொல்லிப் புகைப்படக்கருவிகள், அனுமதியின்றியே ஸெல்ஃபியெடுக்கும் கைபேசிகள், வாயைக் கிழித்துப் பிளப்பதாய் நீட்டப்படும் ஒலிவாங்கிகள்….. போர்க்கால நடவடிக்கையாய், பேசு பேசு பேசு….’ என்று அவசரப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன அத்தனை காலமும் பொதுவெளியில் பரஸ்பரம் கடித்துக்குதறிக்கொண்டிருந்தவர்கள் – ஆறாக்காய ரணமாய் அவமதித்துக்கொண்டிருந்தவர்கள் ஆயத்த ஆடையாய் நேச அரிதாரம் பூசி ‘போஸ்’ கொடுப்பதைப் பார்க்க பிரமிப்பாயிருக்கிறது. ஒரு நொடியில் வெறுப்பை விருப்பாக்கிக்கொள்ள முடிந்தவர்கள் பித்துக்குளி போலா? புத்தனுக்கும் மேலா? பெரும் வித்தக வேடதாரிகளா….? ஆடலரங்கை […]
ஊர்ப்பெண்களின் பிறப்பை, ஒழுக்கத்தையெல்லாம் கேள்விக்குறியாக்குவதே பாரிய தீர்வுபோலும் பிரச்சனைகளுக்கெல்லாம். பேர்பேராய் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். மாதொருபாகனை One Part Woman என்றா லது மிகப்பெரிய பெண்விடுதலை முழக்கமல்லோ. ராவணனே பரவாயில்லை யென்று ஜானகி நினைத்ததாக முற்பிறவியில் அசோகவன மரமாயிருந்து சீதையின் மனதிற்குள் கிளைநீட்டி ஒட்டுக்கேட்டதாய் புட்டுப்புட்டு வைத்தவர்கள் இன்று ‘கால இயந்திர’த்தில் பின்னேகி கோதையின் படுக்கையறைக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண் – இதிலும்தான். அவரவர் வாழ்க்கையில் ஊரை அனுசரிப்பதாய் ஆயிரம் வேலிகளுக்குள் வாகாய் வாழ்ந்திருப்பவர்கள் அடுத்தவீட்டு […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்…. தெரியவில்லை. எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி தொலைவிலுள்ள தன் குடும்பத்தை இருட்டில் தேடித் துழாவும் கண்களோடு அமர்ந்திருக்கும் காவலாளிக்கு இரவென்பதொரு இருமடங்கு பகலாய்…. போரற்ற பாருக்காய் ஏங்கிக்கொண்டே அவரவர் நாட்டின் எல்லைப்புறஙளில் ஆயுதந்தாங்கிக் கண்காணித்துக்கொண்டிருக்கும் படைவீரர்களுக்கு இரவென்பதும் இன்னொரு கண்ணிவெடியாய்…. ஒருவேளை சோறில்லாமல் தெருவோரம் படுத்துறங்கும் பிச்சைக்காரருக்கு இரவென்பது […]