This entry is part 1 of 20 in the series 23 மே 2021
1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில் யாருக்கு?எனக்கா உனக்கா அவருக்கா இவருக்கா …கற்களாலானவை வீடுகள் என்றே கணக்கில் கொண்டால்உயிரற்றவைகளிடம் அன்புவைக்கும் அவஸ்தை மிச்சம்உயிரின் உயிர் எங்கு நிலைகொண்டிருக்கிறதுமனதிலா?ஒரு வீட்டிலும் என் மனதை விட்டுவைத்து வந்ததில்லை.என் வீடு நான் தான்என்றால் நானும் தானும் ஒன்றேயா ஒன்று போலா வெவ்வேறாபாராளப்பிறந்தவர்க்கெல்லாம் இருப்பதுஒரேயொரு பார் தானாஇன்றெனக்குக் கேட்பதுநேற்றுவரை இல்லாத இருமலாஇருந்தும் எனக்குக் கேட்காததா?வரளும் நெஞ்சங்களெல்லாம் இருமிக்கொண்டிருக்கின்றனவா?சரியாகியிருக்கும் சிலசவப்பெட்டிகளுக்குள்ளும்எரிந்த சாம்பலிலும்திருவாயற்றமொழியாகியிருக்கும் சில…எல்லோருக்கும் சமயங்களில் நன்றி சொல்லத் தோன்றுவது போலவேஇந்த வீட்டுக்கும் சொல்லத் தோன்றுகிறதுகண்ணீரேதும் திரளாதபோதும்.கொரோனா காலகட்டத்தை […]
நல்ல கெட்டவரும் கெட்ட நல்லவரும் நாமும் இருமலையுச்சிகளில் இரும்புக்கம்பங்கள் ஆழ ஊன்றி இடைப்பிளவில் இன்னொருவனுடைய அன்புக்குரியவளின் நீண்டடர்ந்த கூந்தலிழைகளை இரண்டாகப் பிடித்திழுத்து கழுத்து முறியுமோ என்ற கவலையின்றி கட்டித்தொங்கவிட்டிருந்தவன் திரும்பத்திரும்ப அந்தப் பெண்ணிடம் தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்ததைக் காரணம் காட்டி அவனை கயவனிலிருந்து அற்புதக்காதலனாக்கிவிட்டபின் கைக்குக் கிடைத்த அவள் காதலனை நல்லவன் என்றே சொல்லிக்கொண்டிருந்தால் பின் வில்லனுக்கு எங்கே போவது? தோற்றதாலேயே ஒருவனைத் தூயவனாக்கித் தோள்மீது தூக்கிக்கொண்டாடுபவர்களுக்கு வெற்றியாளன் எப்போதுமே வெட்கங்கெட்டவன்; அக்கிரமக்காரன்; அராஜகவாதி. பாதிப்பாதியாய் இருந்தாலும் […]
இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள் கொரோனா காலம் என்றில்லை எப்பொழுதுமே நல்லதல்ல கண்ட இடத்தில் எச்சில் துப்பும் வழக்கம். விழுங்குவதே உத்தமம் உமிழ்நீரையும் உறுதுயரையும். பழகத்தான் வேண்டும். பரிதாபம் பொல்லாப்பு கட்டுக்கதைகள் காலெட்டிப்போட்டு நம்மைப் பின் தொடராதிருக்க வழியதுவொன்றேயெனக் குழம்பித் தெளியும் கவி யழும் கண்ணீர்த்துளிகள் வழிந்து வழிந்து தம்மை வடிவமைத்துக் கொள்கின்றன இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகளாய். அந்தரத்தில் ஒவ்வொரு படியாய் தட்டுத்தடுமாறித் தடுக்கி விழுந்து தரையில் உள்ளங்கையழுந்தி நிமிர்ந்து எழுந்து போகும் கவி தன் வரிகளில் உறுதியான […]