==ருத்ரா யார் அங்கே நடப்பது? முதுகுப்புறம் மட்டுமே தெரிகிறது. நானும் பின்னால் நடக்கிறேன். அவர் யாரென்று தெரியவில்லை. அந்த முகத்தைப் பார்த்து ஹலோ என்று சொல்லிவிடவேண்டுமே. அறிமுகம் ஆனவர் என்றால் “அடடே” என்பார். “நீங்களா” என்பார். அப்புறம் என்ன? சங்கிலி கோர்த்துக்கொண்டே போகவேண்டியது தான்? இன்று அதி காலை நான்கு மணிக்குத்தான் படித்தேன். ராண்டல் சுந்தரம் தியரி பற்றி.. அது பற்றி அவரிடம் பேச வேண்டும். எலக்ட்ரான் புள்ளியும் இல்லாமல் கோடாயும் இல்லாமல் சவ்வு மாதிரியான ஒரு […]
=ருத்ரா கையாலாகாதவன் கவிதை எழுதினான். மின்னல் கீரைக் குழம்பு வைத்து சாப்பிட்டேன் என்று. நிலவை நறுக்கி உப்புக்கண்டம் போட்டேன் என்று. கடலிடமே கடலை போட்டேன் அது காலடியில் குழைந்து நெகிழ்ந்தது என்று. என் எழுத்தாணிக்குள் கோடி கோடி எழுத்துக்கள்.. கம்பன் இரவல் கேட்டான் கொடுத்து விட்டேன் என்று. இன்னும் அடுக்கினான். அது அடுக்குமா? தெரியவில்லை. “25 மாடி அப்பார்ட்மென்ட் கட்ட நத்தைக் கூட்டுக்குள் லே அவுட் போட்டேன். உங்களுக்குத் தெரியுமா? என் காதலி காலி செய்து தூக்கிப்போட்ட […]
ஐங்குறு நூறு தமிழின் தொன்மை மிக்க புதுக்கவிதைகள் போன்றவையே.சொல் ஆக்கம் அதன் பொருள் அதில் பொதிந்த கற்பனைச்செறிவு எல்லாம் படித்து படித்து பெரு மகிழ்வு அடைய தக்கவை.இதில் நெய்தல் திணை சார்ந்து நூறு செய்யுட்கள் ஆக்கியவர் அம்மூவனார்.அவர் பெயரில் ஒளிந்திருக்கும் பொருளும் வழக்கும் தமிழின் “செம்மை மற்றும் தொன்மை” சாற்றும் தன்மையுடையன. மூ என்றால் மூன்று என்ற பொருள் யாவரும் அறிந்ததே.ஆனால் மூ என்று தனியெழுத்தே தமிழின் தொன்மை சுட்டுகிறது.அழகிய சிறந்த அறிவார்ந்த மூத்த குடிப்புலவன் என்று […]
ருத்ரா “தாய்மை” ஏதோ ஒரு கடனை தீர்த்துக்கொள்ளவா இந்த தலைப்பு? இலக்கணங்களின் இலக்கணத்துக்கு ஏது இலக்கணக்குறிப்பு? அம்மா என்று சும்மா தான் கூப்பிட்டேன். செங்கல் பட்டு அருகே இருந்து பங்காரு அடிகள் சிரித்தார். பாண்டிச்சேரி மண்ணின் அடிவயிற்றிலிருந்து வேர் ஊடி விட்ட அரவிந்தப்புன்னகை வெள்ளையாய்ப்பார்த்து வெள்ளமாய் பாய்ந்தது. அமிர்தமாய் ஒரு அம்மாவின் குரல் நெஞ்சை வருடியது. வாஞ்சையாய். எனக்கு அம்மா எதிரொலி எங்கிருந்தோவெல்லாம் கேட்டது. அன்பின் ஒலிக்கு முகம் தேவையில்லை. வறுமையும் பிணியும் சமுதாய வக்கிரங்களும் பெண்மையை […]
புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி =================================================ருத்ரா மயிலே மயிலே இறகு போடு என்று கேட்க அவன் அங்கே போகவில்லை.குயிலே குயிலே உன் கொஞ்சும் குரல் காட்டு என்று தான் அந்த காட்டுக்குச் சென்றான் அவன்.அந்த “பல குரல்” மங்கையோ அவனை படுத்தியபாடு இருக்கிறதே! அம்மம்ம! இதோ படியுங்கள். புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி ==================================================ருத்ரா கொடு சினை வேங்கை நுண்தாது தூஉய் மடிஅவிழ் கல்முனை கதிர் கொடு விழிப்ப இரவின் நெடுங்குறி […]
ருத்ரா ஒன்று நைந்த சிறகை ஆட்டி அழகு பார்த்துக்கொண்டது. இன்னொன்று அலகை ஆற அமர கூர் தீட்டி தினவை தீர்த்துக்கொண்டது. ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அப்படி பார்த்ததே போதும் என்று தாகம் தீர்த்துக்கொண்டது. ஒன்று சிற்றலகு பிளந்து உள்ளே செந்தளிர் போல் நா அசைய இனிய ஒலியை ஜாங்கிரி ஜாங்கிரியாய் பிழிந்து காடு கரையெல்லாம் இனிப்பு.. இன்னொன்று வண்ண வண்ணக்கொண்டையை சிலுப்பி எதிரே ஏதோ ஒரு மரம் இருப்பதாய் கொத்தி கொத்தி துளையிட்டது வெறும் காற்றுப்படலத்தை. […]
நதியையும் புனித தாய் என்றாய் நாட்டை தாய் என்றாய் ஆனால் தாயை மொழியை அன்னை என்றாய் நீ ஒரு பெண் என்று பார்த்ததே இல்லை. தாய்.. அவள் சிரிப்பும் கண்ணீரும் உனக்கு அரச்சனைப்பூக்கள் தான். அவள் பிரமாண்டமாய் நிற்கிறாள் ஒரு பெண்ணாக..! ஆனால் உன் மனைவி எனும் பெண்ணுக்கு நீ அர்ச்சனை செய்ததையெல்லாம் அள்ளிக்கூட்டினால் இந்த ஆகாயமே சல்லடையாய் கிழிந்து தொங்கும். பெண் எனும் கோவில் உன் தாய் ஆனபோது நீ ஆத்திகன் ஆனாய். மனைவி […]
கொஞ்சம் என்ன நெறயவே காணோம். பைண்டு பண்ணுன புத்தகத்த தெறந்தா முதல் அட்டையும் கடைசி அட்டையும் மட்டும் தான் பத்திரமா இருக்கு! அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த “பண்டோரா” பெட்டியை திறந்து கொண்டே திறந்துகொண்டே இருக்கிறார்கள். திறக்கும் போதே மூடிக்கொண்டே திறந்து கிடப்பது போல் காட்டும் அற்புதப்பெட்டி இது. வறுமைக்கு கோடு போட்டவர்கள்….. எல்லாருக்கும் எல்லாமும் இதோ என்று கனவுகளை பிசைந்து தின்னச்சொன்னவர்கள்…… ஐந்தாண்டு திட்டங்களின் ரங்கோலி வரைந்தவர்கள்….. ராமராஜ்யம் எனும் அதிசயம் உள்ளே அடைந்து […]
வருடம் பிறந்து விட்டது என்று புது டைரியை பிரித்து வைத்து என்ன எழுதலாம் என்று பேனாவை உருட்டிக்கொண்டிருந்தேன். அந்த பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது. பத்தாயிரம் ஒட்டகங்கள் ஊர்வலம் போகலாம். அவ்வளவுக்கு பாழ் மணல் வெளி. சூரியன் தன் வெயிலை எல்லாம் சிவப்பாய் மஞ்சளாய் வெள்ளையாய் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான். எதை எழுத? உச்சு கொட்டினால் உமர் கய்யாம் வருகின்றான். செல்ஃபோன் ஒலி எச்சில்களில் கூட ந.முத்துக்குமார் இனிமை வழிய இளமை பிழிந்தார். பிள்ளையார் சுழியாய் “உ”வையும் கோடுகளையும் […]
இந்த “ஒரு வரிக் கவிதையை” தலைப்பாய் சூட்டியிருக்கிறது “தி இந்து தமிழ்” தனது தலையங்கத்தில்! பிரெஞ்சு மண் ஒரு புரட்சியை ருசி பார்த்திருக்கிறது. வறட்சி தீப்பிடித்த சிந்தனை இப்படிவெறி பிடித்ததை இன்று தான் பார்க்கிறது. அது என்ன வெறும் விறைத்த “ஈஃப்பில் கோபுரமா?” ஃப்ரான்ஸ் நாட்டு பாரீஸில் மக்கள் நட்டு வைத்த சுதந்திரத்தின் முதுகெலும்பு அது! முதுகெலும்பற்ற துப்பாக்கிப்புழுக்கள் துப்பிய எச்சிலால் “லிபெர்டி ஈக்குவலிடி ஃப்ரெட்டனிடி” என்ற “ஜீன் ஜேக்குவஸ் ரூஸோ”வின் உயிர் மிகுந்த சொற்களையா அழிக்க […]