author

கனிமொழி. ஜி கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 8 of 12 in the series 15 மார்ச் 2020

        ‘ கோடை நகர்ந்த கதை ‘ தொகுப்பை முன் வைத்து …      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    திருவண்ணாமலையில் பிறந்து கடலூரில் வசித்து வருபவர் கனிமொழி . ஜி .இவரது முதல் தொகுப்பு ‘ மழை நடந்தோடிய நெகிழ்நிலம் ‘ [ 2014 ] . அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து வந்ததுதான் ‘ கோடை நகர்ந்த கதை ‘ ! ” உறவுகளின் பாசாங்குகள் , உணர்வுகளின் தத்தளிப்புகள் , ரகசியமாய்க் கசியும் […]

புத்தகங்கள்

This entry is part 2 of 8 in the series 1 மார்ச் 2020

         ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புத்தகமொன்றைக் கையில் ஏந்துகையில் அந்த எழுத்தாளர் நண்பனாகிறார் புதிய இனிய சூழலில் வாசகர் நிறுத்தப்படுகிறார் புத்தகங்களின் பல சொற்கள் அறிவூட்டும் தாயின் கரங்களாக மாறுகின்றன அவை மன இருளை அள்ளி அள்ளிக் குடிக்க திறக்கிறது ஞானவாயில் அழகிய பூக்களின் இனிய மணம் நாசி நிரப்புவதுபோல் வாழ்க்கை அறிவு வெளிச்சத்தில் இனிதாய் நகர்கிறது அனுபவங்கள் படைப்பிற்கு கதவு திறக்கின்றன சாதாரண மனிதனாய்ப் பிறந்து கலைஞர் ஆகிறார் வாசகர்

தூங்காத இரவு !

This entry is part 4 of 6 in the series 16 பெப்ருவரி 2020

            ஆயிரமாயிரம் கரிய இழைகளான கருப்புப் போர்வை நொடிகள் நிமிடங்களாக நிமிடங்கள் மணிகளாக நீளும் காலதேவனின் வினோத சாலை இறந்தகால நினைவுகள் பின்னிப் பின்னி மறையும் பிரம்மாண்டமான கரும்பலகை உப்பைத் தின்னும் கஷ்டத்தை உணர்த்தி ஓடுகின்றன ஒவ்வொரு கணமும் … பசியைத் தலையில் தட்டித் தூங்க வைப்பது எளிதா ? தூக்கத்தை யாசிக்கும் ஏழை மனத்தின் ஏக்க வினாக்கள் பதிலளிக்கப்படுவதில்லை தூங்காத இரவில் … …

சம்யுக்தா மாயா கவிதைகள் ..

This entry is part 6 of 6 in the series 19 ஜனவரி 2020

     ஸ்ரீரங்கம் சௌரிராஜன்      சென்னையில் வங்கி ஊழியராக இருக்கும் சம்யுக்தா மாயா [ கோ. உமா மகேஸ்வரி ] போடிநாயக்கனூரைச் செர்ந்தவர்; 1982 – இல் பிறந்தவர். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘ டல்கௌசியின் ஆரஞ்சு இரவு ‘ . உயிர்மை வெளியீடான இத்தொகுப்பில் 65 கவிதைகள் உள்ளன. இவர் கவிதைகளைப் பற்றி மனுஷ்யபுத்திரன் தனக்கே உரிய நடையில் அறிமுகப்படுத்தியுள்ளார். தனிமையின் பெரு நதியொன்றின் அடியாழத்தில் யுகாந்திரங்களாய் கிடக்கும் புராதன சிற்பமொன்றைப் போல மௌனமாகத் […]

விஷக்கோப்பைகளின் வரிசை !

This entry is part 11 of 11 in the series 12 ஜனவரி 2020

        வரிசையில் உள்ள காலிக்கோப்பைகளில் இன்னும் சில நொடிகளில் மனிதர்களின் பொன்னான நேரம் நிரம்பிவிடும் கோப்பைகளின் வண்ணக் கரங்களில் மனிதர்கள் பொம்மைகளாக மாறுகிறார்கள் விஷக்கோப்பைகள் பெண்களை அதிகம் நேசிக்கின்றன விழி உருட்டல்களில் சதித்திட்டங்கள் பலப்பல உருவாகின்றன அழகான பெண்கள் அழுத வண்ணம் … அபத்தங்கள் களைகட்டிச் செழிக்கின்றன உண்வு தண்ணீர் குடும்பம் எல்லாம் மறந்து போகும் அறிவு உறிஞ்சப்பட்டு மனிதர்கள் சக்கையாக வீசப்படுகிறார்கள் தொலைக்காட்சித் தொடர்களின் கோர வாய்க்குள் கிடக்கும் மனிதர்களை வெளியே எடுப்பது எப்படி […]

முடிவை நோக்கிய பயணத்தில் ….

This entry is part 1 of 7 in the series 3 நவம்பர் 2019

   ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மாவின் இளஞ்சூட்டுக் கையேந்தலில் தொடங்கும் வாழ்க்கை கவிழ்த்துக் கொட்டிய தேன் மெல்ல மெல்லப் பரவி மனப்பிராந்தியத்தைக் இனிக்கச் செய்யும் … தீயின் தகிப்பாகி பாதங்கள் கொப்பளிக்கலாம் . மாறி மாறி வந்து நிழலின் அருமையை வெயிலில் உலர்த்திப் போகும் வாழ்க்கை குலுக்கிய நட்புக்கரம் நம் கையைப் பதம் பார்க்கலாம் பற்றி நெரித்த மென் விரல்கள் மௌனமான காதல் கோலம் போடலாம் உறவுகளின் இணைப்புச் சங்கிலி மெல்ல விலகிச் செல்லலாம் நாவின் சுவை நீங்கி […]

நீ நீயாக இல்லை …

This entry is part 4 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

கவிதை நீ உன்னில் பெரும் பகுதியை இழந்துவிட்டாய் உன் குரல் மட்டும் உன்னை அடையாளம் காட்டுகிறது உன் திசை ஒரே புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது ஏழையின் தோள் அழுத்தும் கடனெனக் கனக்கின்றன நாட்கள் முதுமையிலிருந்து உன் மனம் குழந்தைமை கொண்டுவிட்டது நீ அறிந்தவை பல இன்று உருத்தெரியாமல் சிதறிக் கிடக்கின்றன உணவு நீர் ஊட்ட வேண்டியிருக்கிறது நீ நடப்பதற்கு ஒருவர் துணை தேவைப்படுகிறது கோலங்கள் உனக்குக் புள்ளிகளாய்த் தெரிகின்றன முகம் சோகத்தை அப்பிக்கொண்டு திகைக்கிறது வந்து பார்க்கும் […]

ஈரமனம் !

This entry is part 4 of 13 in the series 20 மே 2018

  சரஸ்வதி தோட்டம் வளைவில் சில நாட்களாக பச்சைநிற விளிம்பு உயர்ந்த பிளாஸ்டிக் செவ்வகத் தட்டு இருக்கிறது அதில் தண்ணீரோ பாலோ நிரம்பியிருக்கிறது சில நேரங்களில் சில ரொட்டித்துண்டுகள் தரையில் கிடக்கின்றன தெரு நாய்களும் சில பறவைகளும் பயன் கொள்கின்றன அந்த திரவங்களின் மேற்பரப்பில் ‘ உயிர்களை நேசி ‘ என்ற சொற்கள் மிதக்கின்றன ! ————————

அம்மா இல்லாத நாட்கள் !

This entry is part 3 of 13 in the series 13 மே 2018

  அம்மா ! உன் எழுபது வயது பிள்ளையைப் பார்த்தாயா ? என் இரண்டு கைகளையும் உன் இடது கையால் பிடித்துக்கொண்டு என் இரண்டு கால்களையும் உன் ஒரு காலால் அமுக்கிக்கொண்டு அழகான வெண்கலப் பாலாடையில் பாலில் மிதக்கும் விளக்கெண்ணையைப் ” முழுங்கு … முழுங்கு …’ என அதட்டிப் புகட்டினாயே அதே பிள்ளை இப்போது தாடி – மீசை நரைத்துத் தலைமுடி கொட்டி முதுமையின் கரடுமுரடான பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என் இளமைக்கால வறுமையை அடித்து விரட்டினேன் […]

நம்பிக்கை !

This entry is part 11 of 16 in the series 6 மே 2018

  என் முன்னால் கிடக்கும் பரப்பு சிறியதாகவே இருக்கிறது பின்னால் திரும்பிப் பார்க்கையில் நான் நடந்து வந்த பாதையில் முட்கள் அப்படியே இருக்கின்றன என் அழுகையொலி எங்கோ கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்னைப் பிரிந்து போனவர்களின் காலடிச் சுவடுகள் தெளிவாகத் தெரிகின்றன என் இழப்புகள் இன்னும் மக்கிப்போகவில்லை என் முன்னாலுள்ள ஒளி எல்லைக்கு அப்பால் இருண்மையின் இழைப்பின்னல்கள் வலுவாக இருக்குமோ ? — அதை மறந்து என் கோப்பையில் நம்பிக்கையை மட்டும் நிரப்பிக்கொண்டிருக்கிறேன் !