author

சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …

This entry is part 8 of 20 in the series 19 ஜூலை 2020

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ஸமிரா கவிதையின் கருப்பொருள்.சல்மாவின் மொழிநடையில் ஒரு மெல்லிய , மிக அழகான நேர்த்தி காணப்படுகிறது. பிரியும் வேளை மௌனத்தில் நனைந்திருந்தன — என்பது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. பிரியப் போகிறோமே என்ற மௌனத்தில் மெல்லிய உறைதலில் மனம் கனக்கிறது. திரைச் சீலைகள் கண்களில் எம் முகங்களை நிரப்பிக் கொள்ள கடும் பிரயத்தனம் கொள்கிறோம் நானும் ஸமிராவும் —- மேற்கண்ட வாக்கியத்தில் எல்லா சொற்களும் முக்கியமானவை. குழந்தை ஸமிரா மனத்தை ஈர்க்கக்கூடியவள் . இதை நயம்படச் […]

தவம்

This entry is part 7 of 18 in the series 21 ஜூன் 2020

        என் தெளிவான கேள்வி ஒரு குழப்பமான சூழலில் தத்தளிக்கிறது சொற்கள் சுழலும் மனத்தில் என் கேள்விக்கான உன் பதிலை ஏந்தி மகிழக் காத்திருக்கிறேன் அதிக மௌனத்தை உருவாக்கி மலையாய்க் குவித்து வைத்திருக்கிறாய் நீ தேடும் என் கரங்களுக்கு அகப்படாமல் ஓடி ஒளிந்துகொள்ள உன் சொற்களுக்குத் தெரிந்திருக்கிறது உன் மௌனம் திறப்பதற்காக என் தவம் நீள்கிறது ….. நீண்டுகொண்டே இருக்கிறது            ————-

ஒளிவட்டம்

This entry is part 6 of 7 in the series 14 ஜூன் 2020

   என் மௌனத்தின் எல்லா திசைகளையும் உன் அலகு கொத்திப்பார்க்கிறது எதிலும் ஒட்டாமல் உன் மனம் விலகி விலகி ஓடுகிறது எது குறித்துமான உன் கேள்விகள் கோணல் மாணலாய் நிற்கின்றன வாசிப்பின் பக்கவிளைவாக உன் தீர்ப்புகள் பிறர் மனங்களைத் தீப்பிடிக்க வைக்கின்றன உன் பேச்சின் வெளிச்சத்தில் நீ இருளைத் தவணை முறையில் தந்து கொண்டிருக்கிறாய் நியாயங்களை அனுமதிக்காமல் உதறித் தள்ளுகிறாய் நீ ஏற்றத் துடிக்கும் தீபத்தில் இன்னும் எண்ணெய் வார்க்கப்படவில்லை எனவே உன் தலைக்குப் பின்னால் நிற்பதாக […]

புலம்பல்கள்

This entry is part 1 of 9 in the series 7 ஜூன் 2020

உன் தவறுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவற்றின் மேல் கம்பீரமாக நின்று பேசுகிறாய் உன் கற்பனைகளுக்கு முலாம் பூசிக் குற்றச்சாட்டுகளென என்னைச் சுற்றி வேலி கட்டுகிறாய் கயிற்றைப் பாம்பென்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறாய் நீ காது தாண்டிய உன் வாய் அறியாமையை முழக்கியும் நீ ஓய்ந்தபாடில்லை யூகங்களின் பரந்த வெளியில் நின்று நீ தாண்டவமாடுகிறாய் அபாண்டத்தை முன் வைக்கும் உன் புலம்பல்களே உனக்குத் தண்டனையாகிறது           ++++++++

தனிமை

This entry is part 6 of 12 in the series 24 மே 2020

    உன் மௌனத்தின் உதடுகள் என் இரவின் முட்களுக்கு ஆதரவளிக்கின்றன என்னை வாரிவாரி விழுங்கிய பின்னும் எச்சத்தின் தவிப்பு திறந்து போடுகிறது பெரும் ஆசை வெளியை… என் எல்லா சொற்களையும் பிடிங்கிக் கொண்டு எப்போதாவது ஒன்றிரண்டை என் கையில் திணித்துப் போகிறாய் சுருள் சுருளாய் விழுகின்றன ஆசைகள் இருள் இழைத்து இழைத்துக் குவித்ததில்… காலத்தின் முன் வலைப்பட்டுக் கட்டுண்ட என் காலடியில் நகர்கிறது பூமி தன் முடிவிலாப் பயணமாய்…

இன்னும் வெறுமையாகத்தான்…

This entry is part 5 of 8 in the series 17 மே 2020

  நான் சொல்லி நீ கேட்க வேண்டிய வயது உனக்கும் எனக்கும் உன் இடதுபுறம் போய்க் கொண்டிருக்கும் அந்த நிர்வாணிகளின் பக்கம் திரும்பாதே உன் வலதுபுறம் சர்வ அலங்காரங்களோடு போய்க் கொண்டிருக்கும் உன் சகாக்களைப் பார் வெறுக்கையை வெகுநேரம் மூடிக்கொண்டிருப்பதால் உள்ளே ஒன்றும் முளைத்துவிடாது உன் முதல் வேலை முயற்சியென அறிந்துகொள் நிர்வாணம் குழந்தைமையோடுதான் பொருந்தும் உன்னோடல்ல உன் பாதப் பதிவுக்கென உரிய இடம் இன்னும் வெறுமையாகத்தான் இருக்கிறது             ————–

இயலாமை !

This entry is part 4 of 11 in the series 10 மே 2020

காலை நடைப்பயிற்சியில் அமைதியான சூழலை கிழித்துப் போடுகிறது அந்தக் கிளியின் அலறல் வானத்தின் பொது அமைதி பாழ்பட அந்தக் கிளியைத் துரத்துகிறது ஒரு காகம் காகத்தைத் தடுக்கவோ சுய இன நேயம் உணர்த்தவோ கரைந்து கொண்டே பின் செல்கின்றன சில கிளிகள் அபயக்குரல் நின்றபாடில்லை கிளியின் தவிப்பு என் மனத்தில் சிறகடிக்கிறது தொலைக்காட்சியில் பார்த்த புலி வாயில் சிக்கிய மான் சிங்கம் பிய்த்தெடுக்கும் எருமையோடு அந்தக் கிளியையும் சேர்ந்து கொண்டுவிடுமோ ?              ———-

நூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘

This entry is part 5 of 13 in the series 3 மே 2020

            நண்பர் திரு.பா. சேதுமாதவன் கவிதை , சிறுகதை ஆகிய வடிவங்களைக் கையாண்டு வருகிறார். இவர்வரலாறு தொடர்பான நூலொன்று ம் எழுதியுள்ளார். ‘ சொற்குவியம் ‘ என்ற இந்நூல் ஆசிரியரின் ஒன்பதாவது நூலாகும். இதில் கட்டுரைகள் , உரைகள் , மதிப்புரைகள் , நூல் அணிந்துரைகள் , நேர்காணல்கள் என்னும் ஐந்து பகுதிகள் காணப்படுகின்றன.      பசுவய்யா, விக்ரமாதித்யன், சுப்ரமணிய ராஜு, கல்யாண்ஜி, இங்குலாப், வாலி, பாலகுமாரன், த. பழமலய், சுயம்புலிங்கம், மனுஷ்யபுத்திரன், அனார், ஆகியவர்களின் கவிதைகளிலிருந்து […]

இழப்பு !

This entry is part 7 of 14 in the series 26 ஏப்ரல் 2020

வந்தவை உச்சிக்குப் போய் படிந்து கனத்தன இருந்த நல்லன மெல்ல விலகின அது இருட்டெனவும் இது வெளிச்சமெனவும் பேதமறிய முடியாமல்

குட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …

This entry is part 9 of 13 in the series 22 மார்ச் 2020

          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்      குட்டி ரேவதி கவிதைகளைப் பற்றிப் பேசிய தேவதேவன் ,”  இத்தொகுப்பு மூலம் குட்டி ரேவதி அசலானஒரு கவிஞராகப் பிறந்துள்ளார். ” என்கிறார்.      குட்டி ரேவதியின் கவிதைகள் உணர்ச்சிகள் திரண்டு மேலெழுந்து பொங்கும் இயல்பு கொண்டவை. அரிய சொற்றொடர்கள் விரவிக் கிடக்கின்றன.தனித்தன்மை கொண்ட நடை சாத்தியமாகி இருக்கிறது. நல்ல படிமங்கள் காணப்படுகின்றன.      ‘ நின்றுவிட்ட காலம் ‘ — புதிய படிமத்துடன் தொடங்குகிறது. கருமேகம் தரையிறங்கி உறைந்திருக்கிறது […]