உன் முகம் குகையோவியத்தின் மறைக்கப்பட்ட அர்த்தம் போல தெரிகிறது எனக்கு. நான் அந்த ஓவியத்தை வருடுகிறேன் குரங்கு மனதால் முதலில் இரண்டாவது கண்களால் மூன்றாவது கைகளால் ஓவியம் தேய்கிறது வருடி வருடி சுருங்கி விரிகிறது உன் முகம் உன் பற்கள் பனியென குளிரும் காட்சி கொடுக்கிறது அந்த கதவுகள் மாசுபட்ட காற்றுடன் சண்டையிடும்போது வெறுமை விரவுகிறது என் உடலில்லாமல் நான் கடைக்கு எலுமிச்சை வாங்கப்போகும் உணர்வு தொங்குகிறது தூக்கில் தொங்கிய சைக்கோ கொலைகாரனை போல
கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி. அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.அவனை அனைவரும் மைக்கேல் […]
வாரத்திற்கு 10 நாட்கள் சண்டையிட்டு நிம்மதியை கெடுக்க வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணம், லட்சியம், கொள்கை, கோட்பாடு, நியாயம், தர்மம், நீதிநெறி, நம்பிக்கை, எல்லாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாரத்திற்கு 7 நாட்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. சண்டை என்று வந்துவிட்டால் “சிவகங்கைச் சீமையிலே படத்தில் வரும் எஸ்.எஸ்.ஆரைப் போல் பொங்கி குமுறுகிறாள். சுமார் 40 பக்க வசனங்களை மனப்பாடம் செய்யாமல் முன் தயாரிப்பின்றி, தங்குதடையின்றி சரளமாக மடைதிறந்த வெள்ளம்போல் கொட்டித் தீர்க்கின்றாள். அவள் ஆவேசமாக சண்டையிடுகையில் அவளது […]
நார்த்தா குறிச்சியில் லைஃப்பாய் சோப்பு போட்டுக் குளித்துக் கொண்டிருந்தவர்கள், நந்திசேரியில் ரின் சோப்பு போட்டு குளித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று லக்ஸ் சோப்பு போட்டு குளிக்கிறார்கள் என்றால் அதற்கு ஷாப்புக்கடை ஓனர் சேதுராஜன் தாத்தாதான் காரணம். ஆம் ஐஸ்வர்யாராய் தேய்த்துக்குளித்த அதே லக்ஸ் சோப்பு. அபிராமத்தில் உள்ள லக்ஸ் சோப்பு ஷாப்புக்கடை என்றால் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு எல்லாம் நன்கு பரிச்சயம். இராமநாதபுரம் மாவட்டம், கமுதிக்கு அருகில் அமைந்துள்ள ஷாப்புக்கடையின் புகழ் , இந்த அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் […]
ஆனால் ஊருக்குள் புதிதாக நுழைபவர்களுக்கு ஊர்க்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் எதுவும் தெரிவதே இல்லை. தான் தோன்றித் தனமாக ஊருக்குள் நுழையும் இவர்கள் சில விஷயங்களைப் பார்த்து, மனம் கொதித்த பின்னரே மாற்றமடைகிறார்கள். ஊர் பெரிய மனிதர்கள் ஊர் பழக்கவழக்கததை, கட்டுப்பாட்டை எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. கமுதி பேருந்து நிலையத்திற்குள் ஒருவன் வெள்ளை வேட்டி சட்டையை அணிந்து கொண்டு நுழைகிறான் என்றால் அவன் எவ்வளவு துணிச்சல் நிறைந்தவனாக இருக்க வேண்டும். நிச்சயமாக […]
நூறு பேர் வரிசையில் நிற்கும் பொழுது ஒருவன் மட்டும் தன்னை புத்திசாலித்தனமாக நினைத்துக் கொண்டு அனைவரையும் தாண்டிக் கொண்டு முன்னாள் சென்று தன்னுடைய வேலையை முடிக்க நினைக்கும் கயவாளித்தனத்தை சற்றும் சகித்துக் கொள்ள முடியாது. எல்லோருக்கும் வேலை உண்டு. எல்லோருக்கும் அவசரம் தான். அனைவருக்கும் வேலை முடிந்தாக வேண்டும். ஆனால் ஒரு சிலர் மட்டும் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, தன்னைப்போல் அவசரம் வேறு யாருக்கும் இல்லை என்பது போல்,எல்லோரையும் ஆட்டு மந்தைகளைப் போல் நினைத்துக் கொண்டு முன்னேறிச் […]
பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மாவட்ட அளவில் என அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ-மாணவிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் பொழுது என்னவோ கருப்பாகவும், மாநிறமாகவும்தான் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் தங்கள் மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளைப் பார்த்தால் ஏதோ ஆங்கிலோ இந்தியர்களைப் போல செக்கச் செவேள் என ஜொலிக்கிறார்கள். அவர்களை புதிதாக பார்க்கும் யாரும், “இவர்கள் இந்தப்பகுதி மக்கள் இல்லை போல” என்று கேட்கும் அளவுக்கு தனித்துக் […]
இன்று அவர் கூறினார். “சார்…. இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக…. இல்லை அதை உருகி உருகி என்னை மாதிரி ஆட்கள் ரசிச்சு கேட்கிறாங்களே அதுல சந்தோஷம் அதிகமா??… எனக்கு பகீர் என்றது. “உங்களுக்கு ஏழரை சனி பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று கூறிய ஜோசியக்காரனை இழிவாக பேசி காசு கொடுக்காமல் வந்தது திடீரென எனக்கு நியாபகத்திற்கு வந்தது. அவர் மீண்டும் அதே கேள்வியை […]
சூர்யா லட்சுமிநாராயணன் ஒரு நிமிடம் முந்தியோ அல்லது ஒரு நமிடம் பிந்தியோ சென்றிருக்கலாமே… இந்த ஒரு துர்சம்பவம் நிகழ்ந்திருக்காதே என்று எல்லோரும் அவரவர் வாழ்வில் விரக்தியின் உச்சத்தில் ஒரு நிமிடமாவது புலம்பியிருப்போம்….. ஆனால் அந்த ஒரு நிமிடநேர மாற்றத்தைக் கூட விரும்பாத ஒருவன், நேரத்திற்கு சென்று சமப்வத்தை சந்திக்க துணிந்த ஒருவன், நேரத்தை கடைபிடிப்பதில் தீவிரவாதியைப் போன்ற ஒருவன் எங்கள் அறையில் இருந்தான். புத்தருக்கு அடுத்தபடியாக முதுகெலும்பு மடங்காமல் உட்காருபவன் காந்தி கிருஷ்ணா மட்டும்தான். ஆனால் அவனது […]
அந்த வார்த்தை மிக அழகாக இருந்தது. “யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ உனது மறு கன்னத்தைக் காட்டு” ஒருநாள், தேவாலயத்தின் வெளியே, காம்பவுண்ட் சுவர் ஓரமாக ஒன்றுக்கு போய்க் கொண்டிருந்த அந்த சிறுவன் ஒரு நிமிடம் ஒன்றுக்கு போவதை நிறுத்திவிட்டு அந்த வாசகத்தைக் கேட்டான். மெய் மறந்த நிலையில் அந்த வார்த்தையை பற்றி யோசித்தபடியே இருந்தான். தேவாலயத்துக்குள் சென்ற அவன், ஞாயிற்றுக் கிழமை பிரசங்கத்தை முழுமையாக கேட்டு அறிந்து தெளிந்தான். அப்போது […]