உஷாதீபன் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். எங்கே அவர் புகழடைந்து, அவர் புத்தகங்கள் விற்பனை கூடி, தன் புத்தகங்கள் நின்றுவிடுமோ என்கிற எண்ணம். தானே ஒரு படைப்பாளியைப் புகழ்ந்து சொல்வதன் மூலம், தன்னையறியாமல் தானே தன்னைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்கிறோமோ என்கிற பயம். இப்படி இன்னும் பலவாக தமிழ் எழுத்துச் சூழல் உள்ளது. குழு குழுவாக இயங்குதல், அவர்கள் புத்தகங்களை அவர்களைச் சார்ந்தவர்களே புகழ்ந்து கொள்ளுதல், அவர்களுக்குள்ளேயே பத்திரிகை நடத்திக் கொண்டு அவர்கள் […]
”கிளம்பிட்டீங்களா பாலன்…நானும் உங்க கூட வரலாமா? ” – மெல்ல அருகில் வந்து சத்தமில்லாமல் நந்தினி கேட்ட நாசூக்கிலிருந்தே யாருக்கும் இது தெரிந்து விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாய் இருக்கிறாள் என்று புரிந்தது பாலனுக்கு. அன்று அவளின் நெருக்கம் சற்று அதிகமோ என்று தோன்றியது. ஏன் அவன் அண்ணனை அங்கு வரச்சொன்னாள். அவர் ஏன் தன்னிடம் தனியாகப் பேச வேண்டுமென்றார். அப்படியானால் அவர்கள் வீட்டில் முடிவே செய்து விட்டார்களா? இவர்களாக ஏதாவது தாறுமாறாய், தன்னிச்சையாய் நினைத்துக் கொண்டால் எப்படி? […]
( 3 ) என்னா நாகு…என்னாச்சு விஷயம்…? – கான்ட்ராக்டர் பிச்சாண்டியின் குரல் கேட்டு அதிர்ந்துதான் போனார் நாகநாதன். கடையின் முன்னால் வந்து இப்படியா எல்லோர் முன்னிலையிலும் பளீர் என்று கேட்பது? விவஸ்தை என்பதெல்லாம் ஏது இந்தாளுக்கு? – நினைத்தவாறே பட்டென்று எழுந்து வந்தார் வெளியே. உள்ளே நுழைய எத்தனித்த ஆளை அப்படியே இடதுபுறமாகத் தள்ளிக்கொண்டு போனார். ஆமை நுழைந்தது போல் இவன் நுழைந்து வைத்தானானால் பிறகு இருக்கும் வியாபாரமும் படுத்துவிடும். வியாபாரம் வேறு. அரசியல் வேறு. […]
( 2 ) எடுத்த எடுப்பிலேயே மறுத்தான் பாலன். முடியாதுப்பா…நீங்க சொல்ற ஆளு ஒர்க் க்வாலிட்டி இல்லாத ஒப்பந்ததாரர். கடந்த மூணு வருஷமா அவர் மேல நிறையப் புகார். அதனால் அவருக்கு எந்தக் கான்ட்ராக்டும் வழங்கக் கூடாதுன்னு உத்தரவு… அதிர்ந்து போனார் நாகநாதன். தன் பையன் இத்தனை கரெக்டாகப் பேசுவது குறித்து பிரமித்தார். நீ ஒரு வார்த்தை போட்டு வை உங்க ஆபீசர்கிட்ட…அது போதும்….மத்ததை நான் பார்த்துக்கிறேன்….. இந்த மாதிரியான விஷயங்கள் எதுலயுமே நான் தலையிடுறதில்லப்பா…தயவுசெய்து என்னை […]
உஷாதீபன் ——— அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலனுக்கு ஏனோ என்றும்போல் அன்று வேலை ஓடவில்லை. தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த காற்றாடி கூட இவன் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பது போல் மெல்ல வட்டமடித்துக் கொண்டிருந்தது. சுத்தமாக் காத்தே இல்லையே! யாரு ஸ்லோவாக்கினது? என்று கேட்டுக்கொண்டே எழுந்து சென்று ரெகுலேட்டரைத் திருகினான். குளிர்ந்த காற்று மெல்லக் கீழே இறங்கி இவன் சட்டைக்குள் புகுந்து இவனைக் குளிர்வித்தது. அங்கிருந்தமேனிக்கே தலையைச் சாய்த்து வாயில்வரை பார்த்தான். மனம் […]
ஒரு ஆங்கில தினசரிக்கும், ஒரு தமிழ் தினசரிக்குமாகச் சேர்த்து ஆண்டுச் சந்தா செலுத்தி நாளிதழ் வாங்கிப் படித்து வருபவன் நான். இதை கடந்த நான்கைந்து வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். என் வீட்டுக்குப் பேப்பர் போடும் நியூஸ் ஏஜென்டும் ஒருவரே. அவரை நான் இன்றுவரை மாற்றவில்லை.எதிர் வீடு, பக்கத்து வீடு என்று பலரும் ஆள் மாற்றி, ஆள் மாற்றிச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நான் அதைப் பண்ணுவதில்லை. பொதுவாக மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அப்படித்தான் அவர் ஒருவரே […]
தோன்றும் வேகத்தைப் பிடித்து நிறுத்து எங்கு நின்றதோ அங்கு ஒரு புள்ளி வை அதை மையமாக்கி கிளைகள் பிரி அதன் வழியே பயணம் மேற்கொள் பாதை தெரியும் தானே விரியும் கடந்த பாதை தனக்கான இடத்தில் தானே நிற்கும் உனக்கான முடிவை உன்முன் விரிக்கும் அங்கும் ஒரு புள்ளி வை அந்தப் புள்ளிதான் அடையாளப்படுத்தும் ஆட்கொள்ளும் உன்னை…! ————————
ரஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத் தோன்றியது. தனது ஒவ்வொரு பதில் கண்டும் ஊடகவியலாளர் தொடர் கேள்வி கேட்கத் தயங்குவதிலிருந்து அது புரிந்தது. ஒன்றிலிருந்து ஒன்று பிறப்பதாகத்தான் பேட்டி அமைய வேண்டும். அதுதான் உண்மையான பேட்டிக்கு அழகு. அம்மாதிரியான கேள்விகளைக் கேட்பதும், அதற்கான தகுதியோடிருப்பதும் பேட்டியாளரின் சாமர்த்தியம். அதற்கு […]
”நீங்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்திருக்கலாம்…. – எதிர்வீட்டில் அவர்கள் வந்து இறங்குவதைப் பார்த்துவிட்டு, சடாரென்று தன்னை மறைத்துக் கொள்வதுபோல் உள்ளே வந்த சந்திரா என்னிடம் சொன்னாள். மனசுக்குள் இரக்கம். முகத்தில் தெரிந்தது. நான் அமைதியாயிருந்தேன். இப்டியே ரூமுக்குள்ளயே அடைஞ்சிக்கிட்டு புஸ்தகமே படிச்சிட்டிருங்க…..எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்…..என்றாள் மீண்டும். என்னைச் சீண்டுகிறாள். நன்றாகவே தெரிகிறது. கறிக்கு உதவாதுங்கிறதில்லை…..எப்டி உபயோகப்படுத்தறோம்ங்கிறதைப் பொறுத்தது… ஏன்னா இந்த உலகத்துலே எல்லாவிதமான அனுபவங்களும் ஒரு மனுஷனுக்குக் கிடைச்சிடுறதில்லை…வாழ்க்கைல அடிபட்டு, அனுபவப்பட்டு, […]
சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து “அவரவர் பாடு” என்கிற இந்நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு என்கிறார் க.நா.சு. க.நா.சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக நற்றிணை பதிப்பகம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நாவல் இது. இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை என்று சொல்கிறார். எழுதிப் பார்க்கிறேன். அது […]