author

நான் நானாகத்தான்

This entry is part 5 of 9 in the series 29 அக்டோபர் 2017

நான் கைவிட்ட காதலி வேறொருவனுடன் குடும்பம் நடத்துகிறாள் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட நண்பன் பணக்காரனாகி எல்லார்க்கும் உதவி செய்கிறான் சண்டை போட்டு விரட்டப்பட்ட அப்பாவும் அம்மாவும் சின்னவனோடு சௌக்கியமாக இருக்கிறார்கள் ராசியில்லையென நான் விற்ற வீட்டில் இப்போது குடும்பமொன்று வளமாக இருக்கிறது எல்லாம் நல்லபடி இருந்தும் இன்னும் நான் நானாகத்தான் இருக்கிறேன்

திருவள்ளுவர்—ஒரு புதிய பார்வை

This entry is part 1 of 5 in the series 8 அக்டோபர் 2017

  [ புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் 5—ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆற்றிய பேருரை ] அன்பார்ந்த நண்பர்களே! அனைவர்க்கும் வணக்கம். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் தொடர்பான ஓர் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் தலைவர், செயலாளர், உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதிலும் திருக்குறளின் பெயரால் அமைந்த ஓர் இலக்கிய அமைப்பில் நான் பேசிப் பல ஆண்டுகள் ஆகி […]

நெய்தல்

This entry is part 7 of 10 in the series 1 அக்டோபர் 2017

தோழிக்கு உரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! பாணன் சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல் ஆற்றா தேமே [கழிசூழ் மருங்கு=kஅழிகள் சூழ்ந்துள்ல கடற்கடைப் பக்கம்; நாணிரை கொளீஇ=தூண்டில் நாணில் இரை வைத்து; முயலல்=செய்தல்] ஆவன் அடிக்கடி அவளைச் சந்திக்க வந்து போறான்; ஆனா கல்யாணம் கட்டற நெனப்பே இல்ல; ஊருக்குத் தெரிஞ்சிட்டா அவனும் வர முடியாது; அவனுக்கும் ஆபத்து; தனக்கும் கெட்ட பேருன்னு நெனக்கறா […]

பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்

This entry is part 5 of 12 in the series 10 செப்டம்பர் 2017

  பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002   “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுவதற்கு அரிய அத்தகைய மனிதப் பிறவியை எடுத்தவர்கள் இவ்வுலகில் அப்பிறவியை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவன்றி, “வெந்ததைத் தின்று விதி வந்தால் மடிவோம்”என்று வாழ்தல் வாழ்வாகாது. வாழவேண்டிய முறைப்படி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்களைத் தான் “வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. வாழவேண்டிய […]

நெய்தல்—தாய்க்கு உரைத்த பத்து

This entry is part 7 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

  நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகும். இங்கு வாழும் மக்கள் பரதவர் ஆவர். மீன் பிடித்தலும் உப்பு விற்றலும் அவர்களது தொழில்கள். உள்ளம் ஒருங்கிணைந்த காதலர் பின்னர் கடமை காரணமாகப் பிரிந்த காலத்து ஒருவரை ஒருவர் நினைத்து இரங்குவதே நெய்தல் திணைக்கு உரிய பொருள் ஆகும். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களை எழுதியவர் அம்மூவனார் ஆவர். இவர்தம் இயற்பெயர் மூவன் என்பதாகும். தாய்க்குரைத்த பத்து—1 இதில் இருக்கற பத்துப் பாட்டுகளுமே தோழி சொல்றதுதான்; […]

இயற்கையின் ஊடே சமூகப் பயணம்

This entry is part 1 of 16 in the series 9 ஜூலை 2017

  கவிதாயினி மீனாட்சிசுந்தரமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுப்பு “வனம் உலாவும் வானம்பாடி”. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும் இயற்கையையே பாடுபொருளாகக் கொண்டுள்ளன. அதிலும் சூரியன் நிறைய கவிதைகளில் காணப்படுகிறான். கவிதைகளுக்கேற்ற படங்களா? அல்லது படங்களுக்கேற்ற கவிதைகளா? என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது. படங்கள் இருப்பதால் எக்கவிதைக்கும் தலைப்பு அளிக்கவில்லை போலும். முதல் கவிதையில் சூரியன் அப்போதுதான் உதிக்கத் தொடங்குகிறான். அதைக் கவிதாயினி செங்கதிரோன் “உலா போகப் புறப்பட்டான்” என்கிறார். அதுவும் ஒற்றை யானையில் கிளம்பப் போகிறான். அவன் வந்து […]

வ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”

This entry is part 17 of 18 in the series 2 ஜூலை 2017

வளவ. துரையன் தம் தொகுப்பான முதல் தொகுப்பான,”மெல்ல விரியும் சிறகுகள்” என்னும் கவிதைத் தொகுப்பிலேயே நம் கவனத்தை ஈர்க்கிறார் பரிமளாதேவி. காரணம் இவரது கவிதைகளின் எளிமைத்தனம்தான். எந்தவித மறைபொருளோ, படிமம், மற்றும் இருண்மையோ இல்லாமல் நேரிடையாகக் கைப்பிடித்துத் தம் கூடவே வாசகனை அழைத்துச் செல்கின்றன இவர் கவிதைகள். பெண்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டு வீதிகளுக்கு வந்து ”ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி” என்று பாரதி சொன்னதற்கேற்ப பல்துறை வித்தகராய் விளங்கும் காலம் இது. ஆனாலும் கூட […]

எருமைப் பத்து

This entry is part 2 of 19 in the series 28 மே 2017

பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ் ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில மாந்தர்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. ஓரம்போகியார் நாள்தோறும் தாம் கண்டு இன்புற்ற காட்சிகளை இப்பாடல்களில் நன்கு புலப்படுத்தி உள்ளார். எருமைப் பத்து–1 நெறிமருப்[பு] எருமை நீல விரும்போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகள்இவள் பழன வெதிரின் கொடிப்பிணை […]

      இலக்கியங்கள் வழிபாட்டுக்கன்று ந. முருகேசபாண்டியன் எழுதிய “மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]

This entry is part 11 of 15 in the series 21 மே 2017

  வளவ. துரையன்   நவீன இலக்கிய எழுத்தாளர்களில் சங்க இலக்கியப் பயிற்சி கொண்டவர்கள் மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய அவர்களில் ந. முருகேச பாண்டியனும் ஒருவர். அதிலும் தமிழில் திறனாய்வுச் சங்கிலி அறுந்துபடாமல் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர். பல்வேறு கருத்தரங்குகளில் சங்க இலக்கியம் பற்றி அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. குறிப்பிடத்தக்க நவீன இலக்கிய இதழ்களிலும் இவை வெளிவந்துள்ளன.மாதவி மற்றும் மணிமேகலை குறித்தும் இரு கட்டுரைகள் உள்ளன,   ”சங்க காலத்தில் […]

இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [நிகழ்ச்சி எண் : 168]

This entry is part 4 of 11 in the series 14 மே 2017

இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [நிகழ்ச்சி எண் : 168] நாள் ; 21-05=-2017 ஞாயிறு மாலை 6 மணி இடம்: ஆர். கே. வி தட்டச்சகம், கூத்க்தப்பாக்கம் தலைமை ; திரு வளவ. துரையன், தலைவர் இலக்கியச்சோலை திருக்குறள் உரை : திருமதி கவி மனோ பொருள் : புல்லறிவாண்மை கவிச்சரம் : திரு ப. செந்தில்முருகன் வள்ளுவர் முற்றம் திருவள்ளுவராக : முனைவர் திரு ந. பாஸ்கரன் அரசியல்வாதியாக ; திரு வெ. நீலகண்டன் பெண்ணிய […]