‘குருவே வணக்கம்’ என்ற வாட்ஸ்அப் செய்தி என் தொலைபேசியில் படபடத்தது. குருவா? நானா? இதுவரை என்னை அப்படி யாரும் அழைத்ததில்லையே. இது யாராக இருக்கும்? என் சேமிப்பில் இருக்கும் நண்பர் பட்டியலிலிருந்து வரவில்லை. ஒரு எண்ணிலிருந்து வந்திருக்கிறது. அந்த வாட்ஸ்அப் எண்ணோடு இருந்த புகைப்படத்தை அகல விரித்துப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகமாகத்தான் இருக்கிறது. யாராக இருக்கும்? வாட்ஸ்அப்பிலேயே உரையாடினேன். ‘குருவா? நானா?’ ‘ஆம்’ ‘நீங்கள் என் சிஷ்யனா?’ ‘ஆம்’ ‘ஹ்ஹ்ஹ்ஹ்ஹா. சரி போதும். சொல்லவந்ததைச் சொல்லுங்கள்’ […]
மதுரை வீரன் (1956) படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் பேசுவதாக ஒரு வசனம் வரும். ‘தேவாமிர்தம் தேவாமிர்தம்னு இதத்தான் சொல்லியிருப்பாகளோ?’ பழைய கஞ்சியோடு அந்த நீராகாரத்தின் கடைசிச் சொட்டை ருசித்துவிட்டு அவர் பேசும் வசனம் இது. அந்தக் காலங்களில் எங்கள் வீட்டிலும் காலையில் பழைய கஞ்சிதான். கோப்பை நிறைய கஞ்சியோடு ஓர் ஆப்பை பசுந்தயிர் விட்டு அளவாக உப்புப்போட்டு அம்மா தருவார். உள்ளங்கை முழுவதையும் நனைத்துப் பிசைவேன். கடலெண்ணையில் வறுபடும் சுண்டவத்தல் காப்பிக் கொட்டை நிறத்துக்கு வரும்போது […]
அன்பு உள்ளங்களே ஆதரிக்கும் உறவுகளே அன்னைத் தமிழின் அருந்தவச் செல்வங்களே அத்துனை பேர் வாழ்விலும் ஆனந்தமே என்றும் பொங்க அன்பு மலர் தூவி அத்துனை பேர் ஆசிகளையும் யாசிக்கும் உங்கள் ஆனந்தி பேசுகிறேன் என்று தொடங்கியதுமே கரவொலி. ஒரு குடம் பால் தலையில் ஊற்றிய சிலிர்ப்பு. சிங்கை வாழ்க்கை சரிப்படாது என்று அறந்தாங்கிக்கே ஓட நினைத்த என் கால்களைக் கட்டிப்போட்டது அந்தக் கரவொலிதான். நான் என் கணவர் செந்தூர்ப்பாண்டியோடு சிங்கை வந்து இரண்டு மாதங்கள் […]
திருமதி சாவித்திரியின் உதடுகள் அந்தக் கார் டயரில் பதிந்திருந்தது. வாடி உதிர்ந்த செம்பருத்திப் பூவாய் காருக்கடியில் கிடந்தார் சாவித்திரி. அந்தக் கார்ப்பேட்டையைக் கழுவவந்த ‘பையா’ மேடம், மேடம் என்று அடிவயிற்றிலிருந்து கத்திவிட்டு மூன்றாவது கதறலை தன் கண்ணீரில் கரைத்தான். சாவித்திரியின் பணிப்பெண் சரீனா வீட்டை அப்படியே போட்டுவிட்டு ஒலிம்பிக் வேகத்தில் ஓடுகிறாள். மேடம் மேடம் என்று குலுக்குகிறாள். பருக்கையைக் கண்ட புறாக்களைப்போல் அதற்குள் சேர்ந்துவிட்டது கூட்டம். எல்லாம் சரீனாவை இழுக்கிறார்கள். சுவற்றில் சாய்ந்தபடி அவள் கதறுவது பரிதாபமாக […]
ஒரு மாணவன் கணவனாகிறான். கணவன் அப்பாவாகிறான். அப்பா தாத்தாவாகிறான். பிள்ளைகள், பேரர்கள். வெவ்வேறு நாடுகள். வெவ்வேறு கூடுகள் குஞ்சுகள் என்று எல்லாரும் சிதறியபின் தாத்தாவுக்கு ஓர் ஆசை. மீண்டும் எல்லாரையும் ஒருசேரப் பார்க்கவேண்டுமாம். குறிஞ்சி பூப்பதுபோல், அரிய சூரிய கிரகணம் காணக் கிடைப்பதுபோல் யாருக்காவதுதான் அது சாத்தியமாகிறது. அந்த ஆசை எனக்கு சாத்தியமாகி யிருக்கிறது. எல்லாரும் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரின் விளிம்பில் இருக்கும் டப்ளின் நகரில் என் மகள் வீட்டில் ஒன்று கூடினோம். இதோ எல்லாரும் கூடி […]
‘அவசரம். அரை மணி நேரத்தில் நீங்கள் இங்கிருக்க வேண்டும். இல்லாவிட்டால்..’ என்று தொடரந்த அந்த மனநல நோய் மருந்துவமனை தாதியை இடைமறித்தேன். ‘இருபத்தொன்பது நிமிடத்தில் அங்கிருப்பேன்’ என்று சொல்லி துப்பாக்கியில் விடுபட்ட குண்டானேன். பறந்தேன். இலக்கைத் தொட்டேன். படுக்கையில் அன்சாரி. இரண்டு கைகளிலும் தோள்பட்டையிலிருந்து மணிக்கட்டுவரை கட்டுப் போடப்பட்டிருந்தது. அவருடைய ரத்தம் தோய்ந்த பழைய சீருடை சுருட்டிக் கிடந்தது. புதிய சீருடையில் புதிய கட்டுக்களுடன் என்னைப் பார்ந்து சிரிக்கிறார். தாதி ‘ஆபத்து’ என்றார். இவரோ சிரிக்கிறார். […]
இரவு 2 மணி. நான் தூங்கச் செல்வது எப்போதும் இந்த நேரம்தான். ‘அவசரப்படாதே, யாரோ அழைக்கிறார்கள். பேசிவிட்டுப் படு’ என்றது என் தொலைபேசி. எடுத்தேன். ‘சார், நான் நீல்பேரி பேசுறேன். சான்ஃபிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இருக்கிறேன். எனக்குத் தெரியும் சார் இப்போ அங்கே இரவு 2 மணி. இங்கோ பகல் 2 மணி இங்குள்ள அதிகாரிகள் என்னையும் மகள் சாருலதாவையும் தனியாக ஒரு அறையில் இருக்கச் சொல்லிவிட்டு அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். ஒன்னும் புரியல சார். […]
எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ள வசதியாக ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்கள் தயாராக இருக்கிறது. துருக்கியின் அடனாவுக்குப் போய்வர விமான நுழைவுச்சீட்டு, விசா வந்துவிட்டது. திரும்பிவரும் சீட்டு தேவையில்லாமலே கூடப் போய்விடலாம். நாளைக் காலை அடனாவுக்குப் பயணமாக வேண்டும். தினமும் மழுங்கச் சவரம் செய்யும் முகத்தில் ஒரு மாதத் தாடி. அவர் முகம் அவருக்கே அடையாளம் தெரியவில்லை. கடவுச்சீட்டில் இருக்கும் முகம் அவருடையதுதான் என்று சொல்ல குடிநுழைவு அதிகாரியிடம் போராட வேண்டும் அந்த சிக்கந்தர். அவருக்கு […]
என் தொலைபேசி துடித்தது. ஊரிலிருந்து தம்பிதான் பேசுகிறான். வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கும் அக்காவைப் பற்றித்தான் பேசுவான். தெரியும். கிடத்தப்பட்ட மெல்லிய முங்கில் கழிபோல் இருக்கிறது அக்கா. சீரணமும் சுவாசமும் மட்டும் வேலை செய்கிறது. மற்றபடி உடம்பே உறைந்துவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்தான் பார்த்துவிட்டு வந்தேன். அக்கா முடிவுரைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு போகலாம் என்றிருந்தேன். சே! எவ்வளவு குரூரமான மனிதன் நான். ஒவ்வொரு தடவை தம்பி அழைக்கும் போதும் இரவுக்குப் பின் பகல் என்பதுபோல […]
அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ் கோவிலிருந்து என் மகள் குடும்பத்துடன் சிங்கைக்கு வருகிறார். கணவர், மகள், மகன் எல்லாரும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு மாதம் தங்கும் முடிவுடன் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து இப்படி வர ஒரு வீடு வாங்க காசு சேர்ப்பது போல் சேர்த்தால் தான் முடியும். அப்படிச் சேர்த்துத்தான் அவர் வரப்போகிறார். இப்படி வரும் மகளை வீட்டிலேயே வைத்துக்கொண்டு திரும்ப அமெரிக்காவுக்கு அனுப்புவதா? எனக்கு மனசு ஒப்பவில்லை. அவர்களை எங்காவது அழைத்துச் செல்ல வேண்டும். பல ஊர்களை சிந்தனைக்குள் […]