ஜோர்டான் நாட்டின் மலைபிரதேசங்களை நூறு கோடி ரூபாய் செலவில் 3டி யில் காட்டவெனவே ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. ரிட்லீ ஸ்காட்டின் மார்ஷியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மார்ஸ் கிரகம் இப்படியெல்லாமா இருக்கிறது! என்று நீங்கள் ஆச்சர்யப்பட தேவையில்லை. கையில் கொஞ்சம் பணம் இருந்தால், ஜோர்டான் நாட்டுக்கு செல்லுங்கள். அங்கே தான் இந்தப்படத்தில் வரும் பெரும்பாலான மலைப்பாங்கான இடங்களை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள். மார்ஷியன் படத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. கேஸ்ட் […]
0 “ கிக்குஜீரோ” என்னும் ஜப்பானிய படத்தைத் தழுவியது என்று மீடியாக்கள் வெளிச்சம் போட்ட படம் தான் நந்த்லாலா! இதற்கு முன்னால் வந்த விஷ்ணுவர்தனின் ‘சர்வம்’, ராதா மோகனின் ‘ அபியும் நானும்’ தழுவலைத் தாண்டி தாம்பத்தியமே நடத்தின! அப்போது எந்தக் கூக்குரலும் இல்லை. ஏனென்றால் அவை ஃப்ளாப்! இது எங்கே ஓடி விடப் போகிறதோ என்கிற காழ்ப்பில் குரல் எழும்பி ஒலித்தன. அதனாலெல்லாம் படம் ஓடி விடவில்லை. ரசிக்கப்பட்டது. பின் பாக்ஸ் ஆபிஸ் பூட்சுகளால் நசுக்கப்பட்டது. […]
நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை என்பதும், அந்தப் பெண் தன மகனின் உடல்நிலை பற்றி மடுமல்லாமல், அவனைக் குறித்த வேறு கவலை கொண்டுள்ளாள் என்று அறிகிறோம். அந்தக் குழந்தை உடல் நிலை சரியாக ஆகிவிட்டாலும் மீண்டும் பெற்றோரிடம் வர வாய்ப்பில்லா சூழ் நிலை உருவாகக் கூடும் எனபது […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா பத்மபூஷன் – நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து பரதம் பயிற்சியை தொடர்ந்த பாக்கியசாலி. கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின் நுட்பங்களின் ஆய்வில் தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பு 1970 களில் இயங்கியது. இதில் எழுத்தாளர்கள் சாந்தன், மாவை நித்தியானந்தன், குப்பிழான் சண்முகன், யேசுராசா, இமையவன், நெல்லை க. பேரன் […]
இலக்கியா தேன்மொழி நடப்பதைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றாலும், எல்லாரும் இப்படி இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த படம் எல்லோருக்குமான படம் அல்ல. மனிதர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். 1. புரிந்துகொள்ள எளிமையான உறவுகளை பழகுபவர்கள், துணைக்கென காத்திருப்பவர்களை நான் இந்த பிரிவில் அடைக்க விரும்புகிறேன். 2. புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள். துணைக்கென காத்திருக்காதவர்களுக்கு இந்த பிரிவு. ‘நான் ஒரு விர்ஜின் ஆம்பளை. எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும்’ என்கிற டயலாக்கும், ‘என்னை […]
0 மாயவனத்தில் மடிப்பிள்ளையை தேடி அலையும் ஆவித்தாயின் கதை! அப்சரா நடிப்பின் மீது பேராவல் கொண்ட துணை நடிகை! அவள் கருவுற்றது, தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று வாதம் செய்து, கருவை கலைக்க அப்சரா மறுப்பதால், விலகுகிறான் அவளது கணவன் அர்ஜுன். மீரா எனும் பெண் குழந்தையுடன், தனியே திரைப்படத் துறையில் போராடிக் கொண்டிருக்கிறாள் அப்சரா! 27 வருடங்களுக்கு முன் மாயவனம் காட்டில் கொலை செய்யப்படும் மாயா எனும் மனநோயாளி, தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையைத் தேடி, […]
இலக்கியா தேன்மொழி பெண்கள் நேர்மையானவர்கள். உழைப்பின் வழி உயர்வின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால், நிதர்சன உலகில், இப்படிப்பட்ட உயர் அர்த்தங்கள் கொண்ட பெண் இனம் வீழ்வதும், களங்கத்திற்கு ஆளாவதும், அடிமைப்படுவது, ஏமாற்றப்படுவதும், நேர்மையற்ற ஆண்களை தேர்வு செய்கையில் நிகழ்ந்து விடுகிறது. நேர்மையான வழிகளில் பணம் ஈட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. அபி நயாவின் காதலனாக வரும் அரவிந்த் சிங் பொருள் ஈட்ட தேர்வு செய்யும் வழி, ஓட்டு ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய் என்கிற நேர்மையற்ற […]
திண்ணை இணைய இதழில் நான் சிலாகித்து கட்டுரையாக எழுதிய பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ தாய் செல்வத்தின் இயக்கத்தில் சனிக்கிழமை (29.8.2015) விஜய் சித்திரத்தில் ‘மரி’ என்கிற தலைப்பில் இரண்டு மணி நேர படமாகக் காட்டப்பட்டது. கதை இதுதான்! புருசன் ஓடிப்போனபின், கடன் கொடுத்த எபினேசரே வாழ்வளிக்க முன் வர, அதை ஏற்றுக் கொள்கிறாள் அற்புத மேரி என்கிற மரியின் அம்மா. எபினேசர் மூலம் அவளுக்கு சேவியர் என்கிற மகனும் பிறக்கிறான். 18 […]
0 விலகிச் செல்லும் காதலியை விரும்ப வைக்கும் வித்தியாச இளைஞனின் கதை! ஷார்ப் எனப்படும் சக்திவேல் வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றித் திரியும் அப்பா செல்லம். அவனது நண்பன் டயர் என்கிற கிருபாகரன். இந்தக் கூட்டத்தின் காமெடி பீஸ் குட்டிப் பையன். ஷார்ப் கண்டவுடன் காதலாகும் பிரியா மகாலட்சுமி, மாமன் மகன் அன்போடு திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டவள். ஷார்ப் எப்படி பிரியாவின் மனதை மாற்றி, அன்பின் சம்மதத்தோடு அவளைக் கைப்பிடிக்கிறான் என்பது படம். சிம்புவுக்கு படங்கள் தாமதமானாலும், அவரது […]
நாட்டிய சாஸ்திரம் பற்றிய புத்தகங்கள் எப்படிச் சொன்னாலும், அவை எவ்வளவு முழுமையானவையானவையும், அதன் விதிகள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும் , நிருத்யம் என்பது நடனம் ஆடுபவர் செய்வதே. அவை எத்தனை புராதனமானவையாயினும், காலம் காலமாய் தொடரும் முரண்பாடற்ற சரித்திரத்தையும், மரபுகளையும் கொண்டவையாய் இருப்பினும் கூட. ஒரே இலக்கணமும், மொழியியலும் தான் ஒரு ஷேக்ஸ்பியரையும் உருவாக்குகிறது, ஒரு இடைப்பட்ட தரமுடைய கவியையும் உருவாக்குகிறது. ஷேக்ஸ்பியர் போன்ற கவி எட்டிய உயரங்களை அதன் நிறுத்தக்குறிகள் கூட மாறாமல் […]