நம்மூரில் ஒரு ‘கலாச்சாரம்’ இருக்கிறது. பல வீடுகளில் பையன் ஓட்டும் பைக் அப்பா வாங்கித்தந்ததாக இருக்கும். மதியம் 1 மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, குளிக்காமல் தொப்பையை சொரிந்துகொண்டு, அரியர்ஸ் எக்ஸாம்க்கு பிட் எழுதும் மகனைப் பற்றி அம்மாக்காரி அக்கம்பக்கத்து வீடுகளில் ‘என் புள்ள மாதிரி வருமா? அவன் மனசு தங்கம்’ என்றெல்லாம் என்றெல்லாம் ‘கலவாணி’ சரண்யா ரேஞ்சுக்கு பில்டப் தருவாள். இதையெல்லாம் கேட்டு வகையாக ஒரு பெண் வந்து மாட்டும். இந்த இரண்டு பெண்களுமாக சேர்ந்து, எப்படியோ […]
கொலைகாரன் ஏதேனும் ஒரு க்ளூவையாவது விட்டுவைப்பான் என்று துப்பறியும் அகராதிகள் சொல்வதுதான். கொலையானவனுக்கு மட்டுமே கொலை செய்தவனைத் தெரியும் என்கிற நிலையில் வேறெதுவும் க்ளூவே கிடைக்கவில்லை எனும்போது, கொலையை யாரும் பார்க்கவேயில்லை எனும்போது, கொலையை துப்பறியும் நிபுணரும் சுஜாதா, ராஜேஷ்குமார், சாம்பு, டி.சி.பி. ராகவன் அளவிற்கு இல்லாமல் போகும்போது, கதையை எப்படித்தான் நகர்த்துவது? கொலையானவரே எழுந்து வந்து ‘இன்னார் தான் கொலையாளி’ என்று சொன்னால்தான் உண்டு. செத்தவன் எப்படி எழுந்து வந்து சொல்ல முடியும்? பேயாக வந்து […]
படத்தின் துவக்க காட்சியே, தூள்! இன்டிகோ விமானத்தில் ஒரு வட இந்திய பெண்ணிடம் சில்மிஷம் செய்து மாட்டிய வயதான தொழிலதிபர் பற்றி நீங்கள் யூட்யூபில் தேடினால் கிடைக்கலாம். படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த குடும்பங்களிலெல்லாம் ஏகப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் எல்லாம் எங்கே? சரிக்கும் தவறுக்கும் இடையே நூல் இடைவெளி தான் என்கிறார் கவுதம். சரிக்கும் தவறுக்கும் இடையே வசீகரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் போல. தேன்மொழியை பெண் பார்க்க வரும் காட்சி தீவிரமாக […]
பின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை சிருங்காரம் சார்ந்ததாக இல்லை. சிருங்காரத்தை ஒதுக்கி விட்டால், நவரசங்களின் பாவங்களை தம் நடனத்தில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அந்த நடனம் தனக்கு மறுத்துக்கொள்வதாகும். யாமினிக்காக பேராசிரியர் தயாரித்துக் கொடுக்கும் பாடாந்திரம் ( repertoire) பெரும்பாலும் ஆண், பெண் தெய்வங்களின் குணங்களை அல்லது தெய்வச் செயல்களை விதந்து போற்றுவனவாக இருக்கும். […]
ஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். எந்த இலக்கிய வடிவமும் உள்ளடக்கத்தைப் பார்க்கிலும் சொல்லப்படும் வகையினாலேயே சிறப்புப் பெறுகிறது. ஆனால் திரைப்படங்களில் மட்டும் அதன் அழகியலுக்குள் போகாது கதையோடு நின்று விடுகிறோம். இதற்குக் காரணம் ‘திரை மொழி’யில் தேற்சியில்லாமைதான். படிக்கத் தெரியாதவன் ஒரு சஞ்சிகையை எடுத்து எப்படிப் படங்களை மட்டும் பார்த்து விட்டு வைத்து விடுகிறானோ, அப்படித்தான் ரசிக்கத் தெரியாதவன் சினிமாவில் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறான். […]
இயற்கை எல்லா விலங்கினங்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்தை தன்னுள்ளே உணவுச் சங்கிலியாக வைத்திருக்கிறது. அப்போது, நிகழும் பொழுதும், பசித்தால் உண்ண உணவும் மட்டுமே மனித இனத்தின் பிரதான தேடலாக இருந்தது எனலாம். இப்போது அப்படி இல்லை. மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏணிப்படி (ladder) என்ற ஒன்று இருக்கிறது. இந்த ஏணிப்படியின் ஏதாவதொரு நிலையில் தன்னை பொருத்திக்கொள்ளவே மனிதன் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. பெரும்பாலான அவனது உழைப்பு, இதற்கே போய்விடுகிறது. அதாவது, ஆதி காலத்தில் நீங்கள் பிறந்திருந்தால், […]
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. இவ்வாண்டின் அவ்விழாவில் ” நம்மூர் கோபிநாத்” அவர்களைச் சந்தித்தேன். கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் அவரின் கவிதையில் நவீனத்துவம் இல்லாவிட்டாலும் மரபின் தொடர்ச்சியாய் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதைக் கண்டேன். அவர் இணைந்து பணியாற்றி, நடித்துமிருந்த “ எதுவும் மாறலாம் “ குறும்படத்திலும் இதைக் காண முடிந்தது. “புறச்சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குளேயிருக்கும் ஆதிக்கம், தன்னில் […]
புற அழகின் உச்சம் பெண்ணின் உடல். அப்படி ஒரு அழகான பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். ஜிம் வைத்து நடத்தி வரும் லிங்கேஸ்வரன். மிஸ்டர் இந்தியா ஆவது லிங்கேஸ்வரனுக்கு கனவு. பேரழகுப்பெண் தியா. மிஸ்டர் இந்தியா ஆகத்துடிக்கும் படிப்பறிவு மிக இல்லாத நாயகன். ஒரு சந்தர்ப்பத்தில், உடன் நடிக்க வேண்டிய ஆண் மாடல் ஜான் ஒத்துழைக்க மறுக்க, வேறு மாடல் தேவைப்படுகையில், லிங்கேஸ்வரன் பயன்படுகிறான். பழகபழக லிங்கேஸ்வரன் மீது காதல் வருகிறது. லிங்கேஸ்வரன் வளர வளர, எதிரிகள் […]
ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். “இசையால் வசமாக இதயமெது..?” இந்தப் பிரபலமான பாடலை அறியாத தமிழர் எவரும் இருக்க முடியாது. டி.எம்.எஸ் அவர்களின் இனிமையான குரலில் மயக்கும் பாடல் அது . இன்னிசையே, இறைவன் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம், நமது இதயம் இசைக்கு இசைவது தான் நமக்கு இறைவன் அளித்த பேரருள். மன ரணங்களுக்கும், மனத்தின் சுகங்களுக்கும் ஆண்டவன் அளித்த கொடை இசை. அந்த இசையை ரசித்து மகிழாதவர் எவரும் மனிதனாக வாழும் தகுதி அற்றவர் எனலாம். மனத்துக்குப் […]
படம் பார்த்தேன். கொலையாளி யார் என்கிற பார்வையாளனின் கேள்விக்கு படம் முழுவதும் வெவ்வேறு மனிதர்களை காட்சிகள் வாயிலாகவும் , வசனங்கள் வாயிலாகவும் சூசகமாக கைகாட்டிவிட்டு, இறுதியில் கொலையாளியை அடையாளம் காட்டுகிறது கதை. திரைப்படம் மூலம் இயக்குனர் சொல்ல வரும் மனப்பிணி குறித்து சொல்வதானால், ஒரு நாவலே எழுதலாம். இந்த உலகில் போனால் திரும்பி வராத, இழந்தால் திரும்பவும் பெறமுடியாதவைகளுள் ஒன்றே கதையின் மையம். மரணம் நிகழ்கையில், அதைப் பார்த்தவர்கள் தவறுதலாக பச்சை நிற கார் தான் விபத்துக்கு […]