நூல் அறிமுகம் – 1: அலிஃப் லைலா வ லைலா எனும் 1001அரேபிய இரவுகள் உயிர்மை வெளியீடு தமிழில் : சஃபி

This entry is part 13 of 15 in the series 26 பெப்ருவரி 2023

நண்பர் சஃபி clinical psychologist ஆகப் பணியாற்றிவருகி றார். அவரும் எழுத்தாளரும் நண்பருமான கோபி கிருஷ் ணனும்தான் எனக்கு Psychiatry, anti-Psychiatry சார்ந்த பல விஷயங்களை, நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி அந்தத் துறை சார்ந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளையும் ஒன்றி ரண்டு நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தவர்கள். சஃபியும் நிறைய எழுதியிருக்கிறார்; மொழிபெயர்த்திருக்கிறார். இப்போது சஃபியின் முனைப்பான உழைப்பில் 1001 அராபிய இரவுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

புதுப்புனலின் இலக்கியப் பங்களிப்பு

This entry is part 12 of 15 in the series 26 பெப்ருவரி 2023

புதுப்புனல் (சமூக – இலக்கிய மாத இதழ்) திரு.ரவிச்சந்திரன் புதுப்புனல் பதிப்பகம் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிகைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிற்றிதழ்களின் விரிவாக்கமான இடைநிலை இதழ்கள் தோன்றியுள்ளன எனலாம். முதலில் பன்முகம் பிறகு புதுப்புனல் என்று தமிழ் இலக்கிய வெளியில் புதுப்புனல் பதிப்பக உரிமையாளர் ரவிச்சந்திரனின் பங்கு கணிசமானது. சிறுகதைத்தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கவிதைத்தொகுப்புகள், திறனாய்வுக்கட்டுரைகள் என நூற்றுக் கணக்கான நூல்களை புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழின் குறிப்பிடத் தக்க புதின எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷின் புனைவு, அ-புனைவு நூல்கள் […]

கே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்

This entry is part 6 of 17 in the series 12 பெப்ருவரி 2023

கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆஸ்திரேலியாவை வதிவிடமாய் கொண்ட ஈழத்து எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் புதிய படைப்பு “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு. 1983ல் இருந்து சிறுகதை, குறுநாவல், ஆய்வுக்கட்டுரை, விமர்சனம் ஆகிய பல பாதைகளில் தடம் பதித்தவரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு இது. இலக்கிய சஞ்சிகை, இணையதளம், பத்திரிகை என பல தளங்களில் அயராமல் எழுதிவரும் புலம்பெயர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகருக்கு வேறு அறிமுக பாமாலை வேண்டியதில்லை. இச்சிறுகதைத்தொகுதியின் புகுமுகத்தையும் இன்ஜின் அறையையும் பற்றி அனேக நண்பர்கள் பல தளங்களில் ஏற்கனவே […]

நெய்வேலி பாரதிக்குமாரின்   மனித வலியுணர்த்தும்  எழுத்துகள்

This entry is part 20 of 20 in the series 29 ஜனவரி 2023

எஸ்ஸார்சி ’நட்சத்திரங்களைத்துணைக்கு அழைப்பவள்’ என்னும் சிறுகதை நூல் நெய்வேலி பாரதிக்குமார் ஆக்கத்தில் வெளிவந்துள்ளது.  கதை சொல்லும் நேர்த்தியில்  பாரதிக்குமாரின்  சிறுகதைகள் வாசகனை நெகிழ்ச்சியுற வைக்கின்றன.  பாரதிக்குமார் தமிழகத்தின்  பல்வேறு  இலக்கிய அரங்குகளில் தனது இலக்கியப்பங்களிப்புக்காகப் பாராட்டப் பட்டுள்ளார். அவர் தொடர்ந்து  எழுத்துலகில் சாதித்துக்கொண்டிருப்பவர். வெற்றியாளர்.  பாரதிக்குமாரின் ‘நடசத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’ 23 சிறுகதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு. இதனை இருவாட்சி( இலக்கியத்துறைமுகம்) பெரம்பூர் சென்னை11 வெளியிட்டுள்ளது. இந்நூலை  தனது சகோதரர்  குறியாமங்கலம் செல்வத்திற்கும் திருமதி மீனாட்சி செல்வத்திற்கும்  பாரதிக்குமார் சமர்ப்பித்துள்ளார். தனது வாழ்வில் அரிய மகிழ்வான நெகிழ்வான தருணங்களை உருவாக்கித்தந்தவர்கள் அவர்களே என்று எழுத்தாளர்,  வாசகர்க்கு அறிவிக்கிறார்.  பின்புலமாகி […]

புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்

This entry is part 12 of 20 in the series 29 ஜனவரி 2023

நோயல் நடேசன் கவிஞர் இந்திரனது  ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான  ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை . ஆனால் , உலகத்தின் பல வசதியான  நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தாலும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதிகள்தான்  என்னைக் கவர்ந்தன.  அதற்கான காரணத்தை யோசித்தேன்.  அரேபியா இஸ்லாமியர்களிடம் எப்பொழுதும் இன்ரீரியரர் டிசையின் ( interior design)  நன்றாக இருந்தது. உருவங்கள் அற்று அவர்கள் சிந்திப்பதாலோ? தெரியவில்லை. அதேபோல் லண்டனில் உள்ள  கட்டிடங்களுக்கும் பாரிசில் உள்ள […]

படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின்  தூங்கா நகர் நினைவுகள்

This entry is part 10 of 20 in the series 29 ஜனவரி 2023

முருகபூபதி தனது வாழ்நாட்களில் பெரும்பாலான பொழுதுகளை பயணித்துக்கொண்டே கடந்து செல்லும்  எழுத்தாளர், களப்பணியாளர், மனித உரிமை ஆர்வலர்,  மொழி பெயர்ப்பாளர், தேர்ந்த  வாசகர், தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாதம் கற்றவர்,          அ. முத்துக்கிருஷ்ணன். எங்கள் அவுஸ்திரேலியாவின் நிரந்தர  இலக்கிய விருந்தினர்.  மெல்பனில் வாசகர் வட்டம் அமைப்பதற்கு தூண்டுகோளாகவிருந்தவர். இன்றளவும் அதன் பணிகளில் இணைந்திருப்பவர்.  உறவாடுவதற்கு எளிமையானவர்.  இத்தனை சிறப்பியல்புகளை கொண்டிருப்பவரின் மற்றும்  ஒரு வரவு,  தூங்கா நகர் நினைவுகள்.  மதுரையின் முழுமையான வரலாற்றையே இதனைப் படித்து […]

பாலையும் சிலப்பதிகாரமும்

This entry is part 5 of 6 in the series 8 ஜனவரி 2023

                ( பாலை நிலம் நிரந்தரமான ஒன்றே )   காவடி மு. சுந்தரராஜன் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள ஐவகை நிலங்களில் பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நெடுங்காலமாக நிலவி வருகிறது. அது சரியல்ல என்பதை நிறுவவே இக்கட்டுரை.  சிலப்பதிகாரத்தில், காடு காண் காதையில்,  கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் […]

நவீன விருட்சம் 121  ஒரு பார்வை   

This entry is part 6 of 7 in the series 25 டிசம்பர் 2022

எஸ்ஸார்சி  நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும்  விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி வருகிறார். கதைஞர்கள் பற்றிய   மெய்நிகர் அமர்வு மற்றும் கவிதை நேசிப்புக்கூடுகை என்பவை அவை. 121 நவீன விருட்சம் எப்படி வந்துள்ளது என்பதனை  இவண்ஆராய்வோம். அழகியசிங்கரின் ’கழுதை’ கவிதை என்னை மிகவும் பாதித்தது. அப்பா மகளைச்செல்லமாகக்கழுதை என்று விளிக்கிறார்.  படவா படுவி  என்று […]

கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5

This entry is part 3 of 7 in the series 25 டிசம்பர் 2022

கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5 அழகியசிங்கர் தொகுப்பு நூல்களுக்கு முன்னுதாரணமாக நான் கருதுவது தனிப்பாடல் திரட்டு.  புலவர் அ. மாணிக்கம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு என்ற  புத்தகத்திலிருந்து எடுத்தது. மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சியாளர்,  ‘ஒரு மொழியில் முதன் முதலில் தனிப்பாடல்களே தோன்றியிருக்கக் கூடும்’  என எண்ணுகின்றனர். நம் சங்க இலக்கியங்களை நோக்கும் போது அஃது உண்மையே எனத்  தோன்றுகிறது. ஏனென்றால் சங்க இலக்கியங்கள் எல்லாம் பெரும்பாலும் தனிப்பாடல்களே. அக்காலப் புலவர் பாடல்களைத் தொகுத்து வைத்தாற்போன்று பிற்காலப் புலவர் பாக்களை, அவை  மறைந்து போகாமல் தொகுத்தவர் இல்லை.  அதனால் எண்ணற்ற பாக்களை நாம் […]

க.நா.சு கதைகள்

This entry is part 7 of 9 in the series 18 டிசம்பர் 2022

அழகியசிங்கர்              க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார்.  சிறுகதை புனைவது என்பது பொய்தான்.  பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம். பொய்யைத்தான் எல்லோரும் படித்துக்கொண்டும் இருக்கிறோம்.             ஆனால் இன்னொரு விஷயம் சொல்கிறார்.  பத்திரிகைக் கதை இலக்கியத்தரமான கதை என்று.  இந்தப் பிரிவைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.             எது இலக்கியக் கதைகள் எது பத்திரிகைக் கதைகள்.  இதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்.             இதை ரொம்பவும் விளக்காமல் இருப்பது நன்றாக இருக்கும். இதைக் கண்டு […]