எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

This entry is part 10 of 41 in the series 8 ஜூலை 2012

கல்வி கரையில! கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குறுகின் தெரிந்து. – நாலடியார். ஒரு மாணவனின் படிப்பு வாழ்க்கையை தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என்று பொதுவாக பிரித்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த நடைமுறை உண்மைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது. (மாணவன் என்பது என் வசதிக்கான குறியீடு அதில் மாணவியும் அடக்கம் எனக் கொள்க) தொடக்கப் பள்ளி நகரத்து பள்ளிகளில் மாணவர்களை […]

நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..

This entry is part 5 of 28 in the series 3 ஜூன் 2012

அமைதிச்சாரல் சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று பெரியோர்கள் ஆராய்ந்து அறியாமலா சொல்லியிருப்பார்கள்?.. நோய் மட்டுமல்ல கவலைகள் வருத்தங்கள் என்று எதுவாக இருந்தாலும் காற்றிலகப்பட்ட சருகாய்ப் பறந்து விடும். மகிழ்ச்சியான பொழுதுகளில் மட்டுமல்ல துன்பம் வரும்போதும் மனம் தளராமல், கலங்காமல் அதைப்பார்த்து நகைக்கும் லேசான மனம் இருந்தால் எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மன உறுதி தானே வந்துவிடும். இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொல்லியிருக்கிறார் நம் […]

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

This entry is part 1 of 28 in the series 3 ஜூன் 2012

டமாரக் கோமாளி 2ஜி, காமன்வெல்த், கார்கில் வீரர்களின் வீட்டு ஊழல், சுரங்க ஊழல் என்று கலக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட்டை விட்டு வைப்பார்களா? எல்லாத்தையும் பத்தி சிரிச்சாச்சு, இதையும் சிரிச்சு வெப்போமே?   கல்மாடி ப்ரொமோட்டர்ஸ்   கல்மாடி: வாங்க வாங்க, எங்கிட்ட வீடு வாங்கினீங்கன்னா, உங்களுக்கு ஒரு தங்க மெடல் தருவேன். நாங்க கட்டற வீட்டில மாடி மட்டும் தான் இருக்கும். நோ க்ரவுண்ட் ஃப்ளோர். எங்க பேரைப் பார்க்கலை? கல்மாடி ப்ரொமோட்டர்ஸ். எங்க […]

எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

This entry is part 40 of 40 in the series 6 மே 2012

சான்ஸ்கீரிட் டமிழுக்கு தம்பியா? அல்லது அண்ணா ? இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா? இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா? அன்னிக்கி இன்ன டானா ? அந்‌த கச்சி மீட்டிங்கிலே வடமொழி ஒழிப்போன்னு குரல் உட்டுகினு கிறான் பழக்கடை பாலு. தமிழன் டிவி யில்ல என்ன சொல்றன்னு சம்ஸ்கிருதம் கலக்கமா பேசனும்கிறாண் !, வடமொழி அது இதுனு ரவுஸ் உடறானுங்க. அவன் இன்னடான கோயிலுல டமில்ல சாமிக்கு பாட்டு படிக்க கூடாதாம்.. […]

வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்

This entry is part 9 of 28 in the series 29 ஏப்ரல் 2012

வடிவேலு…நகைச்சுவை நாயகன்..! அவரது உடலசைவும் முக பாவனையுமே போதும்…! தமிழ் அகராதியில் அவர் சேர்த்த வார்த்தைகள்…அலங்காரங்கள் தான் மேல்தட்டு வகுப்பிலிருந்து அனைவரும் ஒரு முறையாவது அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பார்கள்  அல்லது நினைத்தாவது பார்த்திருப்பார்கள். சார்லி சாப்ளின் போல் தன்னை மட்டும் பழித்து வேடிக்கை காட்டும் வித்தகன் வடிவேலு . அவரது அத்தனை படத்திலும் இதுவரை அவர் மற்றவரைப் பழித்தோ, இழிவான வார்த்தைகள் பேசியோ..நம்மை சிரிக்க வைத்ததில்லை. ஆனால் கவுண்டமணி முதல் விவேக் வரை சந்தானம் வரை….மற்றவர்களை […]

பாரதி 2.0 +

This entry is part 26 of 40 in the series 1 ஏப்ரல் 2012

  பாரதி கண்ட கனவுகளை நாம் சில்லறை வர்த்தகத்தில் விற்றுக் கொண்டோ அல்லது வாங்கிக் கொண்டோ தான் இருக்கிறோம். பாரதி கேட்ட பெண் விடுதலை பெண்களே சுயமுயற்சியில் பெற்றுக் கொண்டார்கள் கல்வியின் வெளிச்சத்தினால் !! ஆண்களோ முதுகெலுப்பை கழற்றி அரசியல் வாதிகளிடம் கொடுத்துவிட்டு சொந்‌ததில் விலங்கு அணிந்‌துக் கொண்டு சுதந்‌திரம் ,மகிழ்ச்சி என தாந்‌தானா பாடிக் கொண்டு இருக்கிறார்கள் . அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியில் முளை சோம்பலில் திளைத்து சூம்பி […]

“ஊசியிலைக்காடுக‌ள்”

This entry is part 38 of 42 in the series 25 மார்ச் 2012

இற‌க்கை முளைத்த‌ குண்டூசிக‌ள் எனும் கொசுக்க‌ளின் ஊசிக‌ள் அல்ல‌ இவை. ந‌ம‌க்கு நாமே ம‌ருத்துவ‌ம் செய்து கொள்ள‌ போட்டுக்கொள்ளும் ஊசிக‌ளே இந்த‌க்காட்டின் பூக்க‌ள். சங்கரன் கோயில் ================== தபசுக் காட்சி சப்பரங்கள் திரும்பிவிட்டன. சரித்திரங்கள் திரும்பவில்லை. அம்மா ====== சொல்லி அடித்து கில்லி ஆடினாலும் வில்லி இல்லை என்று சொல்லி விட்டார்கள். அலாவுதீன் பூதம் பெட்டியில் இருக்கிறது. கலைஞர் ======== சங்கத்தமிழ் எட்டுத்தொகை யெல்லாம் துட்டுத்தொகையாய் தொண்டர்களுக்கு தெரிகிறது. “கணவாய்”வரலாறுகள் கவைக்கு உதவாது. அதனால் வந்த‌ “ச‌ங்க‌ட‌ங்”கோயில் […]

எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)

This entry is part 45 of 45 in the series 4 மார்ச் 2012

ஆத்மாநாம் =========== சுஜாதாவுக்குள் சூல் கொண்ட மேகம் இந்தக் கவிதை. மௌனி ======= ஞான இரைச்சல்களை தின்று விழுங்கியவர். பேயோன் ======== “பின் ந‌வீன‌த்துவ‌த்துக்கும்” பேன் பார்த்த‌வ‌ர். கி.ராஜேந்திர‌ன் ============= க‌ல்கி வைக்காம‌ல் போன‌ முற்றுப்புள்ளிக‌ளால் க‌ல்கியை நிர‌ப்பிய‌வ‌ர் ஜெகசிற்பியன் ============= உணர்ச்சியின் விளிம்புகளை ஊசிமுனையாக்கி..அதில் உலகத்தை நிறுத்தி வைப்பவர். அநுத்தமா ========= ஈயச்சொம்பில் ரசம் வைத்துக்கொண்டே மனித ரசாபாசங்களை தாளித்துக் கொட்டுபவர். அரு.ராமநாதன் =============== கட்டில் மெத்தை எழுத்துக்கள் ஆனால் தூங்குவதற்காக அல்ல. நாஞ்சில் பி.டி […]

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

This entry is part 12 of 45 in the series 4 மார்ச் 2012

மாணவர்களின் பெயர், எந்த மாநிலம், அவர்களுடைய சொந்த முகவரி, தொலைபேசி எண்கள், எந்த பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர், கல்லூரி விடுதியில் தங்கியிருக்கின்றனரா, வெளியில் தங்கியிருக்கின்றனரா, அப்படி வெளியில் தங்கும் மாணவர்கள் என்றால், அவர்களுடைய செயல்பாடுகள் என்னென்ன, அவர்கள், யார், யாரை சந்திக்கின்றனர், கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரிக்க உத்தரவு உள்ளது. விவரங்களுடன், மாணவர்களின் புகைப்படங்களும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கென புகைப்படம் எடுத்தால், மாணவர்கள் மத்தியில் பிரச்னை ஏற்படும் […]

எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)

This entry is part 30 of 45 in the series 26 பிப்ரவரி 2012

  சு.சமுத்திரம் =========== எழுத்து நிறைய கடல் உண்டு. ஒரு துடுப்பு தேடும் துடிப்பு உண்டு. பி.எஸ் ராமையா ================ ம‌ணிக்கொடியை கொடி அசைத்து ஓட்டியவர் இவ‌ரே. சாவி ==== மாற்றிப்ப‌டியுங்க‌ள். அமெரிக்காவுக்கு “விசா” இவ‌ர‌து “வாஷிங்க்ட‌னில் திரும‌ண‌ம்” ம‌ணிய‌ன் ‍======== ஆன‌ந்த‌ விக‌ட‌னில் அங்குல‌ம் அங்குல‌மாய் ஊர்ந்த‌ எறும்பு. ஸ்டெல்லா புரூஸ் ================= காத‌லுக்கு க‌ண்ணில்லை என்பார்க‌ள் நாவ‌ல்க‌ளில் காதலுக்கு துடிப்புமிக்க‌ க‌ண்க‌ள் த‌ந்த‌வ‌ர். டாக்ட‌ர் ல‌ட்சுமி ============== பெண்க‌ள் என்றாலே குத்துவிள‌க்கு தான் என்று […]