ரவி அல்லது. தாவித் திமில் பிடித்து. தட்டுத் தடுமாறி விடாது இழுத்து. தலை குப்புற விழ வைத்து. கிழித்து இரத்தம் பீறிட கிறுக்காக்கி எகிறிக் கொண்டே இருக்கிறது இந்த எண்ணங்கள் எப்பொழுது பிடிபடாமல் ஓடி. *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com ***
முனைவர் ந.பாஸ்கரன் போகி பொங்கல் திருநாளை வரவேற்கும் முன்தீ நாள். மன மாசுகளையும் மனை மாசுகளையும் இரு மாசுகளையும் தின்றொழிக்கத் தீநாக்குத் தொங்கும்நாள். பழையனவற்றைப் புதியன எரித்து விரட்டும் எரிநாள். அழுக்கு அஃறிணைகளைக் கழட்டியெரித்தெறிய உயர்திணைக்கு வாய்ப்புநாள். நெருப்புநீரில்… மனப்பந்தலில் பூத்துக்குலுங்க மல்லிகைப்பூக்கள் பூக்கும்நாள். பயன்பாட்டு ஒட்டடைகளில் புதையுண்ட பொருள்கள் புதைபொருள்கள் அல்ல புதைக்கவேண்டிய பொருள்களாக்கிப் போகியோபோகியென்று உரக்கச்சொல்லும் வெளிச்சநாள். போகியின் முடிக்கும்நெருப்பு எடுக்கும். பொங்கலின் அடுப்புநெருப்புக் கொடுக்கும். — முனைவர் ந.பாஸ்கரன் இணைப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை பெரியார் […]
வளவ. துரையன் அரியாசனம் யாரும் அமைத்துத் தராததால் அரற்றுகிறது அசல் போலிகள் தம் பொக்கை வாயால் சிரித்துக் கொண்டிருக்கின்றன. போலிகள் எப்படியும் பொய் எனும் ஆயுதம் கொண்டு வெற்றி பெறுகிறார்கள் காலம்காலமாகவே இந்திரன்கள் வெற்றி பெற்றும் கவுதமர்கள் தோற்றுக் கொண்டும் இருக்கிறார்கள் எல்லாம் முடிந்தபிறகு கல்லாய் மாறிப்பின் கால்பட்டுப் […]
வளவ. துரையன் எங்கள் வீட்டு நாய்க்குட்டி சேற்றில் புரண்டு வந்தது. அதைக்குளிப்பாட்டினேன் எங்கள் வீட்டு பூனைக்குட்டி அணிலைப் பிடித்துத் தின்று வாயில் குருதிக் கறையுடன் வந்தது. கையிலெடுத்துத் துடைத்து விட்டேன் எங்கள்வீட்டு மல்லிகைக் கொடி நேற்றடித்த காற்றில் அலைபாய்ந்தாட அதற்கு ஒரு கொழுகொம்பு நட்டேன். என் கடைசிப் பையன் […]
.ரவி அல்லது. தற்கொலைத் தாக்குதல் என்றான பின் யார் எங்கு எப்படி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். யுகாந்திர நோதலின் வெறுப்புக் கனல் கொளுந்து விட்டு எரிய உதவிடும் காற்றைப் பற்றி சொல்லத் தேவையில்லை கலந்திருக்கும் மாசுக் கட்டற்று கலந்திருப்பதால். அபகரித்து ஆக்கிரமித்த நிலங்களை மீட்கும் போரில் புற முதுகிட்டு ஓடும் அவலத்தை ரசிக்க முடியவில்லை அழிவில் எம் பங்கும் மிகைத்திருப்பதால் சமாதான மேகங்கள் சூழாமல் சர்வ நாச யுத்தம் நடந்து கொண்டிருக்கும்பொழுது அங்கேயொரு மாமிச மனித பிண்டம் […]
எனக்கு ஞாபகமில்லை அவரை. அவர் எனைப்பார்த்து புன்னகையை சிந்தினார் நானும் சிந்தினேன். அருகில் வந்தார். நானும் அவரருகே சென்றேன். நினைவில்லையா…., இழுத்தார். கொஞ்சம் நெற்றியை தடவினேன். “அதான் சார். … போனமாசம் இதே இடத்தில் நான் வாந்தி எடுத்த போது ஓடோடிச்சென்று , கோலி சோடா வாங்கி கொடுத்திங்களே. ..” ஏதோ ஒரு இடத்தில் சிந்திய புன்னகை இன்னொரு இடத்தில் விருட்சம். யார் யாரோ வருகிறார்கள், போகிறார்கள். அன்பே போதிமரம்.
வளவ. துரையன் பாட்டி எப்பொழுதும்படுத்துத் தூங்கவைக்கும்போதுகதை சொல்வார்.எல்லாக்கதைகளிலிலும்எங்கள் பாட்டி தன்வலைகளை அறுத்துக் கொண்டுவெளியே வருவார்.உளுத்துப் போன உத்தரந்தான்எனினும் இவ்வீட்டைஉறுதியாகத் தாங்குவார்.கதைகளில் சிலநேரம்அவர் உள்ளே சென்றுகாணாமல் போய்விடுவார்.பேய்க்கதைகள் சொல்லும்போதுபேயாக மாறிவிடுவார்,சாமி கதை சொன்னாலோசாமியாட்டம்தான்.கதை முடிந்துவிட்டதுஎன எண்ணுகையில்சற்றுநேரம் பேசாமல் இருப்பார்.திடீரென கதையைமுன்பைவிட வேகமாகத்தொடங்குவார்.ஒரு கதையிலிருதுஇன்னொரு கதைக்குமுடிச்சுப் போட்டுத் தாவுவார்.இப்பொழுதுஊரின் கிழக்கேதனியாய்ப் படுத்துக் கொண்டுயாருக்குக் கதை சொல்கிறாரோ?
விடாது துரத்துகின்றவைகளுக்காகவும் விட்டு விட முடியாதவைகளுக்காகவும் ஓடுமென் அன்றாடத்தின் இடையில் உரசிவிடும் இவரை விட்டொழித்துவிடலாம்தான் வெறுப்பின் வேதனையில். மறந்துபோன என்னை நினைவூட்டுவதன் பொருட்டால் யாவின் அசௌகரியங்களையும் பொறுக்கத்தான் வேண்டியதாகிறது இவரைப் போல ஒருவரை இக்கணம் வரை என் வாழ்வில் சந்திக்க இயலாதிருப்பதால். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
சொற்கீரன் ஓங்கு பருதி செந்நெல் குப்பை பழனந்தோறும் அணிமலி காட்சியின் சோறுடைத்து வளனே நீரொடு கலித்த வளவன் நாட்டு திண் தோள் மறவன் கையொடு கோர்த்து இலம் நீங்கு தோகை கண்ணொடு கண்ணிணை கசிய வாங்கு நுதலி கருவிழியாளும் வரு நிலை கலங்கா வண்ணம் சேர்த்து கதழ்பரி கலிமா அன்ன விரைஇ கடும் சுரம் எதிர்த்தும் கால் பதித்தனளே. ஆறு அலையுநர் பசுங்குடை பொதிந்த வெண்ணிய சோறு மறிப்ப போலும் பசி உழல யாங்கும் நோன்றல் இல்லாள் […]
ஜெயானந்தன் எல்லா அறைகளையும் பூட்டி சாவி கொத்தை சிங்கார வேலர் எடுத்து விட்டு ஒவ்வொரு பூட்டையும் இழுத்துப்பார்த்தார். ஸ்டேசன் அடைவதற்குள் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் பறந்துவிட்டது. பிளாட்பார ஓரத்தில் எட்டணா டீயோடு காத்திருப்பார் அடுத்த வண்டிக்கு. இடையே மூன்றாவது அறையை பூட்டினோமா சந்தேகம் வரவே கால்கடுக்க ஓடினார் வீட்டுக்கு. எல்லா அறைகளும் பூட்டித்தான் இருந்தன. ஸ்டேசன் அடைவதற்குள் அடுத்த வண்டியும் சென்றுவிட்டது. காலியான ஸ்டேசனில் அடுத்த வண்டிக்காக காத்திருக்கும் கடைசி ஆள் இவரோ. – ஜெயானந்தன்