ஆணவசர்ப்பம்

This entry is part 2 of 9 in the series 4 ஜூன் 2023

ரோகிணி கனகராஜ் தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று…  அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என்  கையில்தான்….  ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது…  எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது…  நான் இப்போது பியானோ வாசிக்கக் கற்றுக் கொள்கிறேன்….  சர்ப்பத்தையும் மகுடியையும் நான்  தேடுவதேயில்லை… அவை வேறு  யாரிடத்திலாவது இருக்கக்கூடும்…. 

சூடேறிய பூகோளம் முன்னிலைக்கு மீளாது

This entry is part 1 of 9 in the series 4 ஜூன் 2023

காலம் மாறிப் போச்சு !ஞாலத்தின் வடிவம்கோர மாச்சு !நீர்வளம் வற்றிநிலம் பாலை யாச்சு !துருவத்தில்உருகுது பனிக் குன்று !உயருதுகடல் நீர் மட்டம் !பூகோளம் சூடேறிகடல் உஷ்ணம் ஏறுது !காற்றின் வேகம் மீறுது !பேய்மழை கொட்டிநாடெல்லாம்வீடெலாம், வீதியெலாம் மூழ்குது !வெப்ப யுகத்தில்காடெல்லாம் எரியுது;அண்டை நாடுகள்சண்டை யிட்டு, குண்டு போட்டுநகரங்கள்நரகங்கள் ஆயின !தொழிற்சாலைகள் வெடித்துகரி வாயு,விஷ வாயுபேரளவு பெருகுது ! பூகோளம் முன்னிலைக்குமீளாது !மக்கள் வேலை போச்சு !கூலி போச்சு !நோய் நொடிகள்தாக்க,மக்கள் எல்லாம் இழந்துபுலப்பெயர்ச்சி ! இப்போதுவெப்ப யுகப் […]

இடம்

This entry is part 13 of 14 in the series 28 மே 2023

ஆர் வத்ஸலா சேர்த்து வைத்திருக்கிறேன் மூன்று வருடங்களாக தீபாவளிக்கு பொங்கலுக்கு உன் பிறந்த நாளுக்கு என் பிறந்த நாளுக்கு நமது மணநாளுக்கு எப்போதும் போல் நம்மிருவருக்கும் உடைகள் வாங்கித்  தனித் தனி பெட்டிகளில் அவை நிரம்புவதற்குள் வந்து விடுவாய்  நீ எனக்குத் தெரியும்  நிரம்பாவிட்டாலும்… சொல்லி விடுகிறேன் இப்போதே.. முடிந்து வைத்துக் கொள் வீர வணக்கம் செலுத்திய பின்  உன் தேகத்திலிருந்த உரித்தெடுக்கப் பட்ட உன் சீருடைக்கு இவற்றில் இடமில்லை

வீட்டுச் சிறை

This entry is part 12 of 14 in the series 28 மே 2023

ஆர் வத்ஸலா வீட்டினுள் கைது கதவில் பூட்டில்லை கையில் விலங்கில்லை துப்பாக்கியுடன் யாருமில்லை பார்க்கப் போனால் “வீட்டை விட்டுப் போடீ” என ஓங்கும் அதிகாரக் குரல் காதில் அவ்வப்பொழுது நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ஆசைதான் ஆனால் தூக்கம் கலைந்து ஓலமிடத்‌ தயாராகும் சிசு  மடியில்  பூவிலங்காய்

யாக்கை

This entry is part 9 of 14 in the series 28 மே 2023

ராமலக்ஷ்மி வெறித்து நிற்கிறாள் போதை இறங்காது வீழ்ந்து கிடப்பவனை. எக்கவலையுமற்றவன் தருந்துயரும் தனியொருவளாய்த் தாங்கும்  அன்றாடத்தின் பாரமும்  அழுத்துகிறது  உள்ளத்தையும்  உடலையும். ஒவ்வொரு உறுப்பும் ஓய்வு கேட்டுக் கெஞ்ச எண்ணிப் பார்க்கிறாள் கடிகாரத்தின் முகத்திற்கும், அதன்  நொடி நிமிட மணிக் கைகளுக்கும், நாற்காலியின் முதுகிற்கும் நாளெல்லாம் நிற்கும் மேசையின் கால்களுக்கும் ஒருபோதும் சோர்வு ஏற்படாததை. வீசும் காற்றில் ஓசை எழுப்பும் மணிகளின் நாக்குகளுக்கு இருக்கிறது சுதந்திரம்  நினைப்பதை அரற்றிட. விம்மிச் சிவக்காத மூக்குடன் கூஜாவும் நெரிக்கப்படாத கழுத்துடன் […]

அவனை அடைதல்

This entry is part 7 of 14 in the series 28 மே 2023

கோவிந்த் பகவான் அவன் ஒரு விசித்திரன் எப்போதும் உடனிருப்பவன் உடன் சாப்பிடுபவன் உடன் உறங்குபவன் உடன் கனவு காண்பவன் உடன் சிறுநீர் கழிப்பவன் உடன் தேநீர் அருந்துபவன் உடன்‌ சண்டையிடுபவன் தனிமையைப் பழக்கி தன் இன்பத்தை அறிமுகப்படுத்தியவன் உச்ச பேரானந்தம் கையளித்து  வெறுப்பை அவன் பெற்றவன்  ஓய்ந்து உறங்கியெழுந்த ஒரு சாம்பல் அதிகாலையில் உடனில்லாத அவனை சுற்றும் முற்றும் அதிர்ச்சியில் தேடியலைந்தேன் நிசப்தம் நிரம்பிய தூரத்துக் குன்றின் மீதமர்ந்து பெயர் தெரியாத இசைக்கருவி ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தான் மீண்டும் […]

யாதுமாகி

This entry is part 6 of 14 in the series 28 மே 2023

கோவிந்த் பகவான் ஒருக்களித்து காம்புகள் தெரிய உறங்கும் இணை இணையாத இளம் வீதி நாயின் கனவினைப்போல் விரிகிறாய் துருவேறி செதிலுதிர்க்கும்  குளியலறை ஜன்னல் கம்பிகளின் மீது படர்ந்த  அணில்கொடியின் சொரசொரப்பாய் படர்கிறாய் நான்கு வழிச் சாலையில் குருதி வழிய துடித்துப் புலம்பும் விபத்தின் உயிர் நோக்கி விரையும் அவசர ஊர்தியின் சைரன் ஒலியாய் அலறுகிறாய் அகன்ற வாயுடைய சமையலறை குண்டானுக்குள் துண்டு துண்டாய் வெந்து கொதிக்கும் மாமிசத்தின்  வீச்சமாய் வீசுகிறாய்  போதாது மூங்கில் கொம்புகளால் வேயப்பட்ட பாடையில் […]

உனக்குள் உறங்கும் இரவு

This entry is part 5 of 14 in the series 28 மே 2023

கோவிந்த் பகவான் உனக்குள் உறங்கும் இரவு எலுமிச்சைச் சாறு பிழியும் கருவியைப்போல் பிழிந்தெடுக்கிற இந்த இரவு துயர் மிகுந்த நம் நினைவுகளை கசியவிடுகிறது புளிப்பேறிய சுவைடர்ந்த அவை தலைக்கேறி தள்ளாடச் செய்கின்றன அடுக்களை டப்பாவில் அடைக்கப்பட்ட மீத நினைவுகளையும் சில தேக்கரண்டி அள்ளிக் கலக்கி ஒரே மிடறில் சுவைக்கத்தொடங்கியதும் இந்த இரவு எனக்குள் ஊறி உறங்குகிறது.      -கோவிந்த் பகவான்

எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

This entry is part 12 of 12 in the series 21 மே 2023

கோவிந்த் பகவான் அது ஒரு வீடு உட்தாழ்ப்பாளிட்டு எப்போதும் சாத்தி  ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும் அது துர் சக்திகள் வெளியேறும் மார்க்கம் என எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு நம்பப்பட்டது அதனருகில் சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை மனிதர்கள் வாழ்ந்ததற்கான எவ்வித அடையாளமுமற்று வெறுமனே காட்சியாய் அல்லது சாட்சியாய் மௌனிக்கிறது அவ்வீடு. பட்டாம்பூச்சிகளின் குவியல்  அதன் ஜன்னல் வழி புகைபோல் வெளியேறிய ஓர் அதிகாலைப்பொழுதொன்றில் துழாவும் கண்களால் அதன் அருகடைந்தேன் மெல்ல மேலெழுந்து வெளியேறும் புகை மண்டலம் சூழ  […]

பாழ்நிலம்

This entry is part 10 of 12 in the series 21 மே 2023

கோவிந்த் பகவான் ஓர் ஊழிக்காலத்தின் இறுதியில் பெய்த மழையொன்றில் நனைந்த பறவை அடுத்த ஊழிக்காலத்தில் சிறகுலர்த்திய போது  அதன் ஈரம் தோய்ந்த இறகுதிர புவியின் மீதான பாரம் கூடி விசை செயலிழக்கிறது பறவையினால் சபிக்கப்பட்ட பாழ்நிலமென இப்பெருங்கோள் ஏதோவொரு காலத்தில் பெயர் பெறக்கூடும். -கோவிந்த் பகவான்.