ஆதியோகி கவிதைகள்

This entry is part 2 of 19 in the series 25 ஜூன் 2023

ஆதியோகி நிழல்களைப்பாதிப்பதேயில்லை,நிஜங்களின்உணர்வுகள்…!***நிர்வாணம் என்கிறஒற்றை நிஜத்தைமறைப்பதற்குத்தான்விதவிதமாய்எத்தனை ஒப்பனைகள்…!***என்னதான் கடந்துவந்துவிட்ட போதிலும்அவ்வப்போதுஉணர்வுகளின் ஊடாய்முகம் காட்டி விட்டுத்தான்போகின்றன,முந்தைய பல பரிமாணங்கள்…!                                      – ஆதியோகி +++++++++++++++++++++++

முள்வேலிப் பூக்கள்

This entry is part 1 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான் வேலி சலசலக்க முன் விரைந்தோடுகிறது ஓர் அணில் அதன் அடியொற்றி பின் துரத்துகிறது மற்றொன்று வெட்கம் நனைந்த முள்வேலியெங்கிலும் படர்ந்திருக்கிறது அன்றலர்ந்த பூக்கள்.      -கோவிந்த் பகவான்

மௌனி

This entry is part 8 of 9 in the series 18 ஜூன் 2023

ஆர் வத்ஸலா உனது மூன்று முகங்களை கண்டு உன் பால் ஈர்புற்றவள் நான் ஒரு மகனின் ஆதூரத்துடன் அணுகி எனக்கு தேவையானதை நான் கேட்காமலேயே தந்தாய் ஒரு நண்பனாக என்னுடன் விவாதித்தாய் பல்வேறு விஷயங்களை வியக்கத்தக்க வகையில்  நாம் கருத்தொருமித்தோம் ஒரு கண்டிப்பான ஆசானாக எனக்கு சிலதை மிக நன்றாக கற்றுக் கொடுத்தாய் பிறகு வந்தது ஒரு நீள்மௌனம் குதறிப் போட்டுக் கொண்டு பல்லாண்டு  என்னை காயங்கள் ஆறி நான் மீளும் நேரமிது இப்போது புதிதாகக் காட்டுகிறாய் […]

அப்பாவின் கை பற்றி…

This entry is part 2 of 9 in the series 18 ஜூன் 2023

பிஞ்சு வயதில் அப்பா கை பற்றி உலக அற்புதங்களை காண பழகுகையில் கண்டேன்  மின்மினி பூச்சியையும் அதன் வால்விளக்கையும் அப்பாவிடம் கேட்டேன் சந்திரன் இருக்கும்போது மின்மினி பூச்சிக்கு விளக்கெதெற்கென அப்பா சொன்னார் – ‘என் கண்ணே, மின்மினி பூச்சி அறிவாளி அதற்குத் தெரியும் சில சில சமயம் சந்திரனும், சூரியனும், நட்சத்திரமும் நம்மிடம் கூறாமலே காணாமற் போய்விடும் ஆகவே எப்பொழுதும் கைவசம் ஒரு சிறு விளக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென அதனால்தான்  நான் பாதை துழாவாமல் நடக்கிறேன் […]

வாளி கசியும் வாழ்வு

This entry is part 3 of 11 in the series 11 ஜூன் 2023

கோவிந்த் பகவான். மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கொண்டிருக்கிறது இப்பெரும் வாழ்வு.     -கோவிந்த் பகவான்.

பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்

This entry is part 9 of 9 in the series 4 ஜூன் 2023

கோவிந்த் பகவான் புளித்த மாவாய் பெரிய சைஸ் இட்லி மாவு குண்டானுக்குள் நொதித்துக் கிடக்கிறது காலம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆழாக்காய் பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் காலத்தை ஊற்றி  காலத்தை அவிக்கிறாள் ஒரு மூதாதி. வெந்து தணிந்த காலத்தை தன் சுருக்குப்பையில் முடிந்து காலத்தின் மற்றுமொரு ஆழாக்கை  அவிக்கத் தொடங்குகிறாள் அந்தக் கிழட்டு மூதாதி. காலம் பதுக்கி அடைக்கப்பட்ட சுருக்குப்பைகள்  பெருமலையென குவிந்து கிடக்கிற அந்தக் கொட்டகையின் கதவிடுக்கில் கசிந்தபடி இருக்கிறது இப்பிரபஞ்சத்தின்  சபிக்கப்பட்ட காலம். […]

இந்த இரவு

This entry is part 7 of 9 in the series 4 ஜூன் 2023

பகலிலேயே வந்து மூடும்இந்த இரவை என்னென்று சொல்வது? கிளிகள் பழமுண்ணாமல்பரிதவித்துத் தவிக்கின்றன. தன் புண்னைக் கொத்தவரும்காக்கையை விரட்ட முடியாமல்காளை தலையை ஆட்டிப் பார்க்கிறது. ஆந்தையின் மகிழ்ச்சியைஅந்தப் பொந்தினுள் கண்டேன். இரவின் இருளுக்குக்கருமையென்றும்நீலமென்றும்வண்ணம் வடிக்கிறார்கள். பகலை விட்டுவிட்டுஇரவு மெதுவாகவெளியே ஏறும்போதுநிலவு வந்து கொண்டிருந்தது. இப்போதுதான்அந்தக் கள்ள இரவுஉண்மையில் வந்து தீர வேண்டும். இந்த நிலவின் ஒளியில்அப்போதுதான்இரவை விரட்டி அடித்துஇன்பம் அள்ளலாம்.

பழுப்பு இலை

This entry is part 6 of 9 in the series 4 ஜூன் 2023

வளவ. துரையன் தேய்ந்து கொண்டே போய்இல்லாமல் ஆகிவிடும்நாள்காட்டியாக போலத்தடுமாறுகிறது நெஞ்சம். திருவிழாவில் தொலைத்துவிட்டபெற்றோரைத் தேடும்சிறுவன் போலத்தவிக்கிறேன். யாரைப் பார்த்தாலும்உதவிசெய்ய வருபவர்போலவே தெரிகிறது. ஆனால் அவர்கள் மனத்திலிருந்துசுத்தமாக என்னைஅழித்திருப்பதைஅறியும்போதுதான்அழுகை வருகிறது. தண்ணீரில் தத்தளிக்கும்சிற்றெறும்பு ஒன்றுதுரும்பொன்றைத் தேடுகிறது. விழுகின்ற பழுப்பு இலைகளைமனம் விட்டுவிடாமல்எண்ணிக் கொண்டிருக்கிறது.

ஆணவசர்ப்பம்

This entry is part 2 of 9 in the series 4 ஜூன் 2023

ரோகிணி கனகராஜ் தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று…  அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என்  கையில்தான்….  ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது…  எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது…  நான் இப்போது பியானோ வாசிக்கக் கற்றுக் கொள்கிறேன்….  சர்ப்பத்தையும் மகுடியையும் நான்  தேடுவதேயில்லை… அவை வேறு  யாரிடத்திலாவது இருக்கக்கூடும்…. 

சூடேறிய பூகோளம் முன்னிலைக்கு மீளாது

This entry is part 1 of 9 in the series 4 ஜூன் 2023

காலம் மாறிப் போச்சு !ஞாலத்தின் வடிவம்கோர மாச்சு !நீர்வளம் வற்றிநிலம் பாலை யாச்சு !துருவத்தில்உருகுது பனிக் குன்று !உயருதுகடல் நீர் மட்டம் !பூகோளம் சூடேறிகடல் உஷ்ணம் ஏறுது !காற்றின் வேகம் மீறுது !பேய்மழை கொட்டிநாடெல்லாம்வீடெலாம், வீதியெலாம் மூழ்குது !வெப்ப யுகத்தில்காடெல்லாம் எரியுது;அண்டை நாடுகள்சண்டை யிட்டு, குண்டு போட்டுநகரங்கள்நரகங்கள் ஆயின !தொழிற்சாலைகள் வெடித்துகரி வாயு,விஷ வாயுபேரளவு பெருகுது ! பூகோளம் முன்னிலைக்குமீளாது !மக்கள் வேலை போச்சு !கூலி போச்சு !நோய் நொடிகள்தாக்க,மக்கள் எல்லாம் இழந்துபுலப்பெயர்ச்சி ! இப்போதுவெப்ப யுகப் […]