தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

“மெர்ஸல்”ஆகிப்போனார்கள்…

=ருத்ரா கையாலாகாதவன் கவிதை எழுதினான். மின்னல் கீரைக் குழம்பு வைத்து சாப்பிட்டேன் என்று. நிலவை நறுக்கி உப்புக்கண்டம் போட்டேன் என்று. கடலிடமே கடலை போட்டேன் அது காலடியில் குழைந்து நெகிழ்ந்தது என்று. என் எழுத்தாணிக்குள்…

சான்றோனாக்கும் சால்புநூல்கள்

  பாவலர் கருமலைத்தமிழாழன்   கிழிந்திட்ட   துணிதன்னைச்   செம்மை   யாக்கக் கிழிச்சலினைத்   தைக்கின்ற   ஊசி   போல கிழிந்திட்ட   மனந்தன்னை   நல்ல நூல்கள் கீழ்வான   வெளிச்சம்போல்     செம்மை   யாக்கும் வழிமாறிப்   போகின்ற நீர்த   டுத்து வளமாக  …

என்னைப்போல

பாவலர் கருமலைத்தமிழாழன்   என்வீட்டுப்   புறக்கடையின்   வேலி   யோரம் எச்சமிட்ட   காகத்தின்   மிச்ச   மாக சின்னதொரு   முளைகிளம்பி   விருட்ச   மாகிச் சிலிர்த்துநின்ற   பசுமைமரம்   மகளின்   முத்த இன்பம்போல்   குளிர்ந்தகாற்றால்   இன்ப   மூட்டி இனிமையான   மழலைமொழி  …

நிழல் தந்த மரம்

  சூர்யா நீலகண்டன்   ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான்.   வீட்டிற்கருகில் மரமொன்றும் இல்லாததால் கூகுளிலிருந்த மரமொன்றை கொண்டு வந்து கணினித் திரையில் நட்டார் சிறுவனின்…

கருவூலம்

    இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் படைத்து வருகிறேன்   அசைவுகளாலும் பாவங்களாலும் மின்னும் ஓவியத்தை வரைந்து வருகிறேன்…

ஒட்டுண்ணிகள்

    உன் உண்மை எது உண்மை என்னும் கேள்வி இரண்டும் பலிபீடம் ஏற என் உண்மை நிறுவப் படும்   அலைதல் திரிதலே தேடல் பிடிபட்டதே புரிதல் என்னும் விளக்கங்கள் இடம்பிடிக்கும் அகராதிகளில்…

ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்

ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings] (தொடர்ச்சி) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் பாடல் முடிந்த தென்று உனக்கு…

நிழல் தரும் மலர்ச்செடி

சேயோன் யாழ்வேந்தன் இடையில் சிறுத்த கரிய அழகிய அதன் நிழலுக்காகத்தான் அந்தச் செடியை நான் வாங்கினேன் நிழலில் கூட அது கறுப்பு மலர்களை பிறப்பித்திருந்தது நிழலுக்காகத்தான் அந்த மலர்ச்செடியை நான் வாங்குவதாக உன்னிடம் சொன்னபோதே…

வரலாறு புரண்டு படுக்கும்

சத்யானந்தன் பலரை சிறையில் அடைத்த வாளும் கிரீடமும் சிறைப்பட்டிருக்கின்றன அருங்காட்சியகத்தில் உயரமான மாணவர்களுக்குக் கூட பெருமிதமான வரலாறு சிறு குறிப்புகளின் ஊடே பிடிபடவில்லை சிறுவரை அழைத்து வந்த ஊர்தியில் யாருமில்லை வெற்றிடமுமில்லை பையன்கள் விளையாடுவர்…