கவிதைகள்

This entry is part 19 of 28 in the series 5 மே 2013

உளி   அவர் பயன்படுத்திய சூரல் நாற்காலி அனாதையாய் கிடந்தது அவர் மணி பார்த்த கடிகாரம் இன்றும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது பத்திரிகை தலையங்கங்களில் பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை காலையில் சூரியன் உதிப்பதும் மாலையில் மறைவதிலிருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை ஆஷ்ட்ரேவில் சாம்பல் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது அவர் பயன்படுத்திய அத்தனையையும் தீயிலிடுவது இயலாத காரியமாயிருந்தது எழுதுகோல் எழுதித் தீர்க்க காகிதத்தை எதிர்பார்த்திருந்தது கவிதை தன்னையே எழுதிக் கொள்ள அவர் சிதையில் தீயை மூட்டியது.     […]

இன்னொரு எலி

This entry is part 18 of 28 in the series 5 மே 2013

எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு?   எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும்.   சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும்   புத்தகங்களின் தராதரம் தெரியவில்லை அதற்கு.   எழுதப் படிக்கத் தெரியாத அற்பம் அது.   சினந்து கவிதை எழுதி சபித்து விடலாம் அதை.   ஆனால் அதற்கு கவிதையை இரசிக்கத் தெரியாது. சுட்ட தேங்காய் ருசி தான் தெரியும்.   திருத்த முடியாது எலியை. எப்படியும் பிடித்து விட வேண்டும்.   வன்மம் கூடிய இரவில் […]

தெளிதல்

This entry is part 14 of 28 in the series 5 மே 2013

    ஏமாற்றத்தின் சலனங்களோடு மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும் அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம் இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள் மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை   மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள் ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும் மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து […]

நிழல்

This entry is part 12 of 28 in the series 5 மே 2013

உன் குற்றப்பத்திரிக்கையின் கூர்முனையிலிருந்து வெளிவரத்துடிக்கிறதொரு நிழல் உன் புறக்கணிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் எனதிந்த உடலை திண்ணத் தொடங்க கொடூரத்தின் கோரத்திலும் புன்னகித்தபடியே கடக்கிறது வன்முறையொன்று ப்ரியத்தின் பொருட்டு வழக்கொழிந்து போவதாய் வழமை போலவே நினைக்கிறது அது புலங்கப்படா பாதையில் படிந்திருக்கும் தூசிதனை தட்டியெழுப்புவது போல் இருக்கிறது நினைவின் தடம் செய்யத்துடிக்கும் அனைத்திலும் செயலின்மையை கைக்கு கொடுக்கிறது கையாளாக அன்பு இறுகப்பற்றுதலிலோ நீண்ட முத்தத்திலோ சில துளி கண்ணீரிலோ மீட்டெடுக்கலாமென நினைக்கையில் மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது அந்நிழல்   ரேவா

நவீன தோட்டிகள்

This entry is part 5 of 28 in the series 5 மே 2013

    ‘இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்’ கூரிய பார்வைகளும் குற்றச்சாட்டுகளும் குத்தும் ஊசிமுனைகளும் முடிவற்றவை   தலைக்கு மேலே சூரியனும் நோயுற்ற தீக் காற்றும் கொதிக்கச் செய்கிறது குருதியை. பரம்பரை வழித் திண்ணையும் செந்தணலாய்ச் சுடுகிறது.   காகங்கள் வரிசையாக எச்சமிடுகின்றன எச்சங்களை விற்றும் பிழைப்பவர்கள் ‘இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்’ என்கின்றனர்.   – விஜய நந்தன பெரேரா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

தாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. !

This entry is part 4 of 28 in the series 5 மே 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.       அந்த நாள் நாமிரு வரும் ஒன்றாய் உடல் நெளிந் தாடினோம் அடர்ந்த காட்டிலே ! மலர்களில் தோன்றிய ஆட்டம் மலர் மாலை ஆனது ! அந்தச் சில கண நேரங்கள் உந்தன் நினைவுக்குள் விழிதெழட்டும் ! அதை மறந்து விடாதே ! அந்த நாள் காற்று வெளியில் பிதற்றும் நிலையில் என் மனது பின்னிக் கிடந்தது ! […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -22 என்னைப் பற்றிய பாடல் – 16 (Song of Myself) விலங்குகள் நேர்மையானவை .. !

This entry is part 2 of 28 in the series 5 மே 2013

  (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     திரும்பி நினைத்து வந்தேன் மிருகங்க ளோடு நான் வசிப்பதற்கு !  மிகவும் அமைதி யானவை ! தன்னடக்கம் கொண்டவை ! நெடு நேரம் நின்று அவற்றை நோக்குவேன், ஆம் நெடு நேரம் ! இழிவு நிலைக்கு அவை புலம்புவ தில்லை ! புகார் செய்வ தில்லை ! பயத்தால் வேர்ப்ப தில்லை ! இருட்டில் படுத்து […]

தாகூரின் கீதப் பாமாலை – 62 தீராத ஆத்ம தாகம் .. !

This entry is part 22 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     விழிகள் உன் முகம் நோக்கும் போது வேதனை அடையுது மனம் ! திரும்பி நீ வருவாயோ வராது போவாயோ,  அதை நான் அறிவ தெப்படி  ? நானுனக்கு ஆசனம்  அமைப்பதும், பூமாலை பின்னுவதும் வீணாகுமா என்று நான் வியப்புறு கின்றேன் சில வேளை !   பொழுது சாயும் வேளையில் புள்ளினங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் !   மலை […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -21 என்னைப் பற்றிய பாடல் – 15 (Song of Myself) நாணல் புல் கீழானதில்லை..!

This entry is part 21 of 29 in the series 28 ஏப்ரல் 2013

   (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      வானத்தில் தோன்றிய விண்மீன்களை விட எவ்விதத் திலும் நாணப் புல்லானது தாழ்ந்த தில்லை என்று நம்புகிறேன் நான். சிட்டுக் குருவி முட்டை போல் செம்மை யாய்ச் செதுக்கப் பட்டது சிற்றெறும்பும், செம்மண் கல்லும் ! மரத் தவளை படைப்பில் சிறந்தது உயிரின மேதை கட்கு ! பிளாக் பெர்ரி கனிக் கொத்து அலங்க ரிக்கும் சொர்க்கபுரி […]

எத்தன் ! பித்தன் ! சித்தன் !

This entry is part 18 of 29 in the series 28 ஏப்ரல் 2013

                                           ஜெயானந்தன். எத்தனென்று , பித்தனென்று, சித்தனென்று, யார் உளரோ ? – பூவுலகில், நித்தம் பிடிச்சோற்றை தின்பதற்கே நாயாய், பேயாய், நரியாய் திரிபவர்தான் நடுச்சபையில் நிற்பவரோ ! எள்ளாய், முள்ளாய் , எரிமலையாய் போனபின்பு திருநீராய் தேகமெங்கும் பூசி ஓதி தெய்வத்தை தேடுவதால் யாது பயன் ?