நிம்மதி தேடி

This entry is part 25 of 31 in the series 4 நவம்பர் 2012

மு.கோபி சரபோஜி செருப்பை எங்கு மறைவாய் வைப்பது? அர்ச்சனையை யார் பெயருக்கு செய்வது? உடைக்க வாங்கிய தேங்காய் எப்படி இருக்கப்போகிறது? தட்டோடு நிற்பவர்களுக்கு தர எவ்வளவு சில்லரை இருக்கிறது? இப்படியான குழப்பங்களோடு நிம்மதி தேடி சந்நிதி நுழைந்ததும் அர்ச்சகரின் குரல் ஒழித்தது “நடை சாத்தி நாழியாயிற்று” – என்று! மு.கோபி சரபோஜி சிங்கப்பூர்.

உல(தி)ராத காயங்கள்

This entry is part 24 of 31 in the series 4 நவம்பர் 2012

நேற்கொழு தாசன் வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த நினைவுகளின் வெதும்பல்கள் விளிம்பு நிலையொன்றில் முனகிக்கிடக்கும் பகலின் நிர்வாணத்தின் முன் கூனிக்குறுகிக்கிடக்கும் அவை இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து அதீதமான பிரவாகத்துடன் ஓரங்களை தின்னத்தொடங்கும். இரைமுகரும் எலியொன்றின் அச்சம் கலந்த கரியகண்களை, இரையாகும் தவளையொன்றின் ஈன அவல ஒலிகளை உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும். தகனமொன்றின் நாற்றங்களை பின்னான எச்சங்களை அருகிருக்கும் இலைகளில் படிந்திருக்கும் புகைகுறியீடுகளை விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த துர்தேவதைகளின் கொலுசொலிகள் நாளைமீதான […]

அருந்தும் கலை

This entry is part 19 of 31 in the series 4 நவம்பர் 2012

அந்த எலுமிச்சம் பழங்களை வாங்கிவந்தேன் மொத்தம் மூன்று தந்தார்கள் தீராச் சண்டைக்கும் கசப்புக்கும் முகம்திருப்பி தெருவில் போனதற்கும் இன்னும் என்னென்னவோ பொருமல்களுக்கும் பிறகு அவர்கள் கொடுத்தவை இவை மேசையில் உள்ள அந்தப் பழங்களை இன்னும் வீட்டில் யாருமே தொடவில்லை அப்பழங்களுக்குள்ளிருக்கும் சாறு பற்றி கூசும்படி ஒரு சந்தேகம் அவர்கள் வீட்டுப் பழங்களுமா குற்றவாளி? பார்த்துக் கொண்டேயிருக்கும்போது பழங்களும் பார்த்தபடியே இருப்பதாக எண்ணம் குறுக்கிட சட்டென எதிரி வீட்டுக்காரன் முகத்தை மஞ்சளாய் பழத்தோலில் மனம் வரைகிறது. கொஞ்சம்சர்க்கரை கலந்து […]

மணலும் நுரையும்-2

This entry is part 16 of 31 in the series 4 நவம்பர் 2012

  பவள சங்கரி     Sand and foam – Khalil Gibran (2)   மணலும், நுரையும் (2)   வெகு நேரம், அந்த, பருவ மாற்றங்களும்  அறியாமல், அமைதியாக, எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான். பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை உயிர்த்தெழச் செய்ததால், யான் எழுந்து அந்த நைல் நதிக்கரையோரம் பகலோடு பாடிக்கொண்டும், நிசியோடு சுவனம் கொண்டும் நடந்தேன். மேலும் தற்போது அந்த பகலவனோ, தம் ஓராயிரம் பாதக்கிரணங்கள் கொண்டு எம்மை ஏறி மிதித்துச் […]

வீழ்தலின் நிழல்

This entry is part 15 of 31 in the series 4 நவம்பர் 2012

    ஒரு கோட்டினைப் போலவும் பூதாகரமானதாகவும் மாறி மாறி எதிரில் விழுமது ஒளி சூழ்ந்த உயரத்திலிருந்து குதிக்கும்போது கூடவே வந்தது பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து ஒரு புள்ளியில் ஐக்கியமாகி ஒன்றாய்க் குவிந்ததும் உயிரைப் போல காணாமல்போன நிழலில் குருதியொட்டவே இல்லை   – எம்.ரிஷான் ஷெரீப்

பொய்மை

This entry is part 6 of 31 in the series 4 நவம்பர் 2012

(1) பொய்மை   காண வேண்டி வரும் தயக்கம்.   கண்டு விடக் கூடாது என்று முன் எச்சரிக்கை.   எதிர் அறையின் பேச்சரவங்கள் என்னைத் தீண்டுகின்றன.   அவன் அறைக்குள் இருப்பதை அவை உறுதி செய்கின்றன.   அவனை நேருக்கு நேர் காணாது சென்று விடும் வேளையைத் தேர்ந்து கொண்டிருப்பேன்.   மெல்லக் கதவைத் திறப்பேன் பூனை போல் வெளியேற.   ஓ! அவன் கதவை நான் திறந்தது போல் அவன் கதவை அவன் திறந்து […]

குடை

This entry is part 5 of 31 in the series 4 நவம்பர் 2012

  மரணம் ஒன்றே விடுதலை கைதிகளில் ஏது ஏற்றத்தாழ்வு ஓவியனுக்குத் தெரியாத சூட்சும உருவங்கள் பார்வையாளனுக்குப் புலப்படும் கரையை முத்தமிட்டு முத்தமிட்டுச் செல்லும் கடலுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை மேனி கறுப்பாகாமல் மேகமாய் வந்து மறைக்கிறேனென தேவதைக்கு தெரிய வருமா மூக்குத்தியின் ஜ்வலிப்பைக் கண்டு நட்சத்திரங்கள் வயிறெரியும் அவள் உள் வரை செல்லும் காற்று அவளின் முடிவை விசாரித்துச் சொல்லுமா பெருமழையின் சாரலில் அவள் நனைந்துவிடக்கூடாதென நான் குடை பிடிப்பேன் நான் நனைவதைப் பார்த்து குடை […]

இப்படியிருந்தா பரவாயில்ல

This entry is part 3 of 31 in the series 4 நவம்பர் 2012

முருகன்ங்க வயசு சரிய தெரியல்லை 34 ன்னு எழுதிக்கோங்க நான் 2 தாங்க மேலே படிக்கிலங்க ஆம் எனக்கு படிப்பு வராதுன்னு டீச்சர் சொல்லிட்டாங்க கல்யாண ஆச்சுங்க ஒரே பையன் 4 படிக்காங்க இங்கிலிஷ் ல பேசுறாங்க எல்லா வேலையும் செய்வேன்க கூலின்னு போட்டுக்கோங்க திருநெல்வேலி வரைக்கும் தான் போயிருக்கேன் ரேசன் கார்டு இருக்குங்க அரிசி வாங்குவேன்ங்க பழையதுங்க இரவுக்கு நெல் சோறுங்க பலகாரம்ல்ல நல்ல நாள் பொழுதுல்ல தாங்க சட்டை கல்யாண காட்சிக்கு போனதாங்க, அழுக்கு […]

சிறுவன்

This entry is part 32 of 34 in the series 28அக்டோபர் 2012

  முடிவேயற்று மிகவும் நீண்ட அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த, காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில் தேயிலைச் சாயம் குடித்த, அப்பாவைத் தேடி அம்மாவுடன் *பூஸாவுக்குச் சென்ற…   கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை பையன்கள் பறித்துப் போகையில் அவர்களுக்கொரு பாடம் புகட்டிட அப்பா இல்லாததால் உதடுகளைக் கடித்து பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட…   ஒருபோதும் தான் காண அழாத அம்மா மறைவாக அழுவதைக் கண்டு உறங்காமல் உறங்குவது போல் தலையணை நனைய அழுத…   ஆற்றில் சுழிகள் உடையும் […]

மரப்பாச்சி இல்லாத கொலு

This entry is part 24 of 34 in the series 28அக்டோபர் 2012

  ஐந்து ஏழாகிப் பின் ஒன்பதான படிகள் முழுவதும் பொம்மைகள்! குடும்பத்துடன் நிற்கும் ராமர் ராசலீலையில் கிருஷ்ணர் மழலைபொங்கும் முகத்தின்பின் அனாவசியக் குடைதாங்கி நிற்கும் வாமனன் நடுவான தசாவதாரம் ராகவேந்திரர் புத்தர் காமதேனு மஹாலக்ஷ்மி என நீண்ட வரிசையின் கடைசியில் செட்டியாரும் மனைவியும் காய்கறி பழங்களோடு பலசரக்குக்கடை பரப்பி அமர்ந்திருக்க எப்படி எல்லாமோ மாற்றி அமைத்து வைத்த கொலுவில்   முதலில் உட்கார்ந்திருக்கும் கணபதியோடு பஞ்சகச்சமோ மடிசாரோ கோட்சூட்டோ கவுனோ எதைத் தைத்துப் போட்டாலும் கூர்மூக்கின் கீழ் […]