கதையே கவிதையாய்! (10)

This entry is part 9 of 21 in the series 21 அக்டோபர் 2012

  நித்திலம்   சிப்பியொன்று  தமதருகில் இருந்த மற்றுமொரு சிப்பியிடம், “ யான் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன், கனரகமாகவும், உருண்டையானதுமான அது  எமைத் துன்பமுறச் செய்கிறதே,” என்றது..   மேலுமந்த மற்றொரு சிப்பியோ, “வாழ்க வாழ்க, அந்த விண்ணும், சாகரமும்!  எம்முள்  ஏதும் இருந்தும்,  இன்மையாலும், கூட யான்  எந்த வேதனையும் இன்றி சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன்“ என்றதாம் மன நிறைவுடன்.   அத்தருணமதில் அவ்விடத்தைக் கடந்து செனற,, இவ்விரண்டு சிப்பிகளின் உரையாடலையும் செவிசாய்த்த, நண்டு […]

மீந்த கதை!

This entry is part 6 of 21 in the series 21 அக்டோபர் 2012

வாழ்க்கைக்கு வெளியில் தொலையவோ வாழ்க்கைக்குள் மறையவோ சாத்தியம் எதுவும் இல்லை இங்கு… வாய்வழி சென்றவை பின் வாயில் வெளியேறி மறிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் பற்கள் இடுக்கில் சிக்கிய உணவு போல ஒவ்வொரு நொடியும் மீந்த கதை சொல்ல மட்டுமே முடிகிறது நம்மால்… தினேசுவரி, மலேசியா    

தப்பிப்பு

This entry is part 1 of 21 in the series 21 அக்டோபர் 2012

ஏரி நீர்ப்பரப்பில் மீன் கொத்தி லாகவமாக இறங்கி மேலெழும்பிய போது அதன் அலகில் மீன் இருந்ததா என அவதானிக்கவில்லை வரப்பு வளையில் பதுங்கும் நண்டு வேட்டையிலிருந்து தப்பித்த ஒன்று தான் முட்டையிலிருந்து வெளி வந்த சில மணி நேரத்தில் வல்லூறுக்கு அகப்படாதவையே கடலுள் உயிர்க்கும் ஆமைகள் தராசுத் தட்டுக்கோ செண்டுக்கோ சரத்துக்கோ போகாமல் செடியிலுருந்த மலர்கள் விழும்முன் சருகாய் மனவெளிக்கும் சொற்களுக்கும் பிடிபடாத ஒரு கவிதை எரிகல்லாய் யதார்த்தத்திலிருந்து தப்பிப்பு உண்டு விடுதலை இல்லை என்றது கீறி […]

எதிர் வினை!

This entry is part 19 of 23 in the series 14 அக்டோபர் 2012

காத்தமுத்துப் பேத்திக்குக் காதுவரை வாய் காட்டுக் கூச்சல் போடும் காது கிழியப் பேசும் கட்டிக்கப் போகிறவனுக்குக் கஷ்டம்தான் என்பர் சொந்தங்களுக்கு இடையேயான உரையாடல்களிலும் கூட சந்தம் வைத்துக் கத்தும் சந்தைக்கடை தோற்கும் ஒன்றுமில்லா விடயத்திலும் கத்திப் பேச அதற்குக் காரணங்கள் இருக்கும்! பழநியப்பன் பேரனோ பரம சாது சொற்ப டெஸிபலுக்கே சுருங்கிப் போகும் முகம் கண்களைப் பொத்திக்கொண்டு காது மடல்களைக் கைகளால் மடிப்பான் ஒலி கலந்த வார்த்தைகளைப் பல சமயங்களில் புன்னகையோ தலையசைப்போ கொண்டு எதிர்கொள்வான் நான்கு […]

தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்

This entry is part 15 of 23 in the series 14 அக்டோபர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மனத்தில் வைத்துக் கொள் இதனை  ! உனது புன்சிரிப் பூடேயும் உன் களி ஆட்டம்  வழியேயும் கானம் பாடினேன் நான் காய்ந்த இலை உதிர் காலத்தில் ! தீய்ந்த புல்வெளிக் களத்தி டையே மொட்டை மரக்காட் டிடையே நீ தன்னை மறந்தாய் என்னிசையில் ! என் பாட்டைப் புறக்கணித் தாலும் அல்லது நீ இகழ்ந்து பேசினும் கானம் பாடினேன் நான் காய்ந்த இலை உதிர் […]

கவிதை

This entry is part 13 of 23 in the series 14 அக்டோபர் 2012

துர் சொப்பனம் நிஜத்தில் நிகழாதிருக்க கிணற்றுக்குள் கல்லைப்போடு.   புதிதாய் முளைக்க விழுந்த பல்லை கூரையில் விட்டெறி.   திடுக்கிட்ட நெஞ்சு திடமாய் மாற மூன்று முறை எச்சில் உமிழு.   கண்ணேறு மறைய காலனா சூடத்தை முற்றத்தில் கொழுத்து.   பாதை இருட்டு கடக்க மூச்சு விடாமல் இறை நாமம் சொல்லு.   தலைமுறை தோறும் உயிர்த்திருந்த உபதேசங்கள்…….   உதிர்ந்து சருகானது அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபின்!   மு.கோபி சரபோஜி சிங்கப்பூர்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்

This entry is part 12 of 23 in the series 14 அக்டோபர் 2012

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் […]

பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம

This entry is part 4 of 23 in the series 14 அக்டோபர் 2012

    சந்திரசோம நீ காலமானதும் பத்மினி அழவில்லை வேறு பெண்களென்றால் நிலத்து மண் தின்று உளறி உளறி ஓலமிட்டு ஒப்பாரி வைத்தழுது துயருறும் விதம் நினைவிலெழ பத்மினி உன்னை நேசிக்கவில்லையென கவலை கொண்டாயோ சந்திரசோம   எனினும் நீயறியாய் சந்திரசோம மூன்று நான்கு மாத காலத்துக்குள் பேச்சு வார்த்தை குறைந்து நடக்கவும் முடியாமல் போய் திடீரெனச் செத்துப் போனாள் பத்மினி   – தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

கதையே கவிதையாய்! (9)

This entry is part 22 of 23 in the series 14 அக்டோபர் 2012

The Madman – when my sorrow was born – Khalil gibran   பவள சங்கரி   எம் துக்கம் செனித்த தருணமதில்…..-   (சோகத்தின் சுகம்)    எம் துக்கம் செனித்தபோது யான் அதைக் கவனமாக, பேணிப் பாதுகாத்தேன். மேலும்  பாசத்தோடு பராமரித்தேனதை.  மேலும் எம் துக்கம் மற்ற உயிரினங்களைப் போன்றே, செம்மலும், சோபிதமும், மற்றும் வியத்தகு பூரிப்புடனுமே வளர்ந்தது  நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். யானும் எம் துக்கமும், எங்களுக்கான […]

நடுங்கும் ஒற்றைப்பூமி

This entry is part 12 of 23 in the series 7 அக்டோபர் 2012

மணி.கணேசன் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த அபசுரங்களையெல்லாம் ஒருசேர்த்து உரத்தக் குரலில் உயிரைக் கீறும் யாரும் கேட்டிடாத முரட்டு மலைப்பாட்டாக முழங்கிக் கொண்டிருக்கும் கன்னங்கரியக் குயிற்குஞ்சைக் கூரிய தம் கொடும் அலகுகளால் கொத்திக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன ஆவேசப்பட்ட அண்டங்காக்கைகள் கூட்டமாக. அப்பாடலின் சுருதி முன்பைவிட பலமாக ஓங்காரித்ததில் அதுவரை நிச்சலனமாக நின்றிருந்த கொள்ளைப்போகும் கிரானைட் மலைகளின் அடையாளம் மழிக்கப்பட்டப் பசுங்காடுகள் புதிதாய்த் துளிர்த்த தளிர்களுடன் கந்தக மண்ணில் தம் இன்னுயிரை அடகுவைத்து வெடிமருந்துகளுக்குச் சாம்பலான பட்டாசுமனிதர்களின் கருத்தக் காற்றைப் […]