ஆலமரத்துக்கிளிகள்

This entry is part 3 of 36 in the series 30 செப்டம்பர் 2012

பச்சை வயல்வெளி .. பக்கத்தில் காவலுக்குப் பனை மரங்கள்…!! —————————————- என்றும் நீ கூண்டில்.. நான் நீதிபதி.. மனசாட்சி.! ————————————– பூமியை அளக்கிறதோ..? நெடுஞ்சாலைகள்..! —————————————– இரவும் பகலும் ஒன்றுதான் உறங்குபவனுக்கு..! ——————————————- மீண்டும் தாய்வீடு… நிம்மதியாய்…. விதைநெல்..! _________________________ வான்மேகங்கள் வேடிக்கை பார்க்கும் பூமியில் சாகசங்கள்..! _________________________ வில்லு போல் உடல் புறப்படும் அம்பு.. குறிகோள்கள்..! _________________________ கரும்புக் காடுகள் இரும்புகளால் முள்வேலி..! _________________________ சிறு புல்லும் நெடு மரமும் எண்ணுமாம் தாங்களே பூமிக்குத தூண்..! […]

ஒரு கூட்டம் புறாக்கள்

This entry is part 1 of 36 in the series 30 செப்டம்பர் 2012

கூடுகளில் அடைபட்ட புறாக்கள் கல்லெறிந்து தீ எரித்து இரவினில் கலைத்து விடுவதற்கல்ல விடிகாலையில் தீனிகொத்தும் அழகைரசித்து குழந்தைகளோடு தத்தித்தத்தி நடந்தாடும் ஒரு கூட்டம் புறாக்கள் முன்பொரு நாள் நேர்ச்சைக்கடனுக்காய் வழங்கிய குஞ்சுப்புறாக்களும் இவற்றில் காணக்கூடும் பறக்கவும் நடக்கவும் தெரிந்த புறாக்கள் மினராக்களில் உட்கார்ந்து நடுங்குகிறது.

தாகூரின் கீதப் பாமாலை – 33 பயணியின் கால்தடம் !

This entry is part 19 of 36 in the series 30 செப்டம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பயணத் துக்கு அவர் புறப்பட்டு விட்டார்  என்று புரிந்து கொண்டேன். எனக்குத் தெரிந்து விட்டது அது. கால்நடைப் பயணியின் அந்த அறிவுரை ஆலய மணி போல் அடித்திடும் என் நெஞ்சினில் ! எங்கே வந்துள்ளார்  அவர் ? எப்போது  அவர் வருவது கடற் கரை மேல் கான கத்தின் முடிவு எல்லையில் ? வானம் விடாது முணுமுணுக்கும் அதனை ! வெகு தூர மூலை […]

ஜென்ம சாபல்யம்….!!!

This entry is part 36 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஏழேழு ஜென்மத்தின் இனிய இல்லறம்…!. இளையவளாய்….பொலிவுடன் புக்ககம் நுழைந்தவள்…! பிழையேதும் அறியாதவள்.. வேரோடு அறுத்து வேறிடத்தில் நட்டாலும்…ஆணிவேர் இல்லாமல் ஆழம்வரை வேர் விடுபவள்..! உறவுகள்…ஊர்வாய்…என.. வகைக்கொரு விமர்சனம்…. புதைகுழியாம் மனக்குழிக்குள்.. மாயமில்லை…தந்திரமில்லை..! மௌனத்தை…மௌனமாய்.. முழுங்கும் வித்தை கற்றவள் கற்ற வித்தை ஏதும்.. துளியும் துணை கொள்ளாதவள்…! குள்ள நரிக் கூட்டத்தின் கூடவே வாழ்ந்தவள்… நச்சுப்பாம்புக் கூடைக்குள் .. மண்ணுள்ளிப் பாம்பு இவள்….! வரமாய் வரவேண்டியதெல்லாம் வினையாய் வந்த வலி ஓங்க…! தாழ் போட்டவள்..இதயத்தை இரும்புச் சிறைக்குள்..! பாலானவள்…மாலையால்.. […]

சுறாக்கள்

This entry is part 35 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  எதுவோ கொடுத்த தைரியத்தில் தொடங்கி விட்டேன்.   யோசித்த பிறகே புரிந்தது தொடங்க வேண்டும் என்ற எத்தனிப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது தொடங்குவதற்கு.   எல்லோரும் சுற்றி வளைத்தனர் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பார்க்க   அவர்களின் கேள்விப் பார்வைகள் மெள்ள மெள்ள மீன் குஞ்சுகளாய் நெளியத் தொடங்க எல்லாவற்றையும் விழுங்கியபடி முன்னேறின எனது எத்தனிப்பு சுறாக்கள். –    நிஷாந்தன்

அவர்கள்……

This entry is part 32 of 41 in the series 23 செப்டம்பர் 2012

– மா.சித்திவினாயகம் – இன்னமும் மணற் கிடங்குகளிலும், சுடு சாம்பலுள்ளும், காலைக்குத்தும் கற்பார்மீதும் என் வாழ்வு சந்தோசமாயிருக்கிறது.   வந்துவிழுந்த செல் துண்டுகளால் என்னைவிட்டு என் உயிர் போகாத மகிழ்ச்சி என்னுள் தாண்டவமாடுகிறது.   நான் நடந்த பாதை யெங்கும் என் இரத்தத்தைச் சந்தோசமாகப் பீச்சியடிக்கிறேன்.   வரும் சந்ததி, என் நிறமூர்த்த அலகுகளை இந்த இரத்தத் திவலைகளிலிருந்து பின்னிக்கொள்ளட்டும்.   நந்தவனமுள்ள பூஞ்சோலையில் சுதந்திர மலர் பூத்திருக்கும் என்று பூப்பறிக்க முற்பட்டவரின் சதைகள் பிய்த்துப் பிய்த்து நந்திக்கடலெங்கும் வீசிக்கிடக்கிறது.   எடுத்து மாலை தொடுங்கள் உலகக் கனவான்களே!   சாட்சியைத் தேடியும்… காட்சியைத் தேடியும்…. ஓடுவதாகச் சொல்பவர்கள் விருந்து சாப்பிடுகிறார்கள். தங்களின் விறைத்த குறிகளை எம்முள் புதைக்கத் துடிக்கிற வீராப்பில்……     நான் இன்னமும்… மணிக்கூட்டுமுள்ளைப் போல் இதே பாழும் மணல் வெளியைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறேன்.   என்ன மாறுதலுக்கு  காத்திருக்கிறேன்- என்றோ நான் இல்லாவிட்டால் இங்கு என்ன மாறுதல் நடந்து விடப்போகிறதென்றோ எதுவும் புரியவில்லை.   இந்த எலும்புக்கூடுகளால் இனி இங்கு எதை எழுதுதல் முடியுமெனக் காலம்காலமாய் நானிருந்த மண்ணில் மறுபடி என்னைக் குடியேற்றுகின்றார்கள்.   இதுவே யதார்த்தம் போல் எங்கும் மௌனம். […]

விசரி

This entry is part 27 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஆதி பார்த்தீபன்  நாளாக்கிய நாளொன்றில் அவள் வந்திருந்தாள் நாளான புண்ணிடமும்-நசுக்கப்பட்ட சீழிடமும் கதை பேசிக்கொண்டிருந்தாள் சிக்கிய முடிவழி-திக்கிய பேனினத்தை சிக்கெடுத்து ஓடவிட்டாள் அவள் காதலில் தோற்று பைத்தியமானவளோ..!! விரல்களை நளினம் செய்து காற்றுடன் காதல் பேசினாள் அவள் தன் உரப்புகளை மீட்கத் தொடங்கியிருந்தாள் ஆண்கள் பற்றிய வசைகளுடனும் ஒன்றிரண்டு காமக் கூச்சலுடனும் ..!! மேலாடை களைவதற்காய் மிகைப்பட்ட முயற்சியொன்றை எடுத்துக்கொண்டாள் களைந்த ஆடைகட்கிடையில் கறைபடிந்த அந்த செய்தியை புரட்டிக்கொண்டிருந்தாள் கவர்ச்சி விழுங்கும் உலகத்திடம்…!! thitthu13@gmail.com

கவிதை

This entry is part 26 of 41 in the series 23 செப்டம்பர் 2012

மு.கோபி சரபோஜி வெட்கமின்றி நீரையெல்லாம் அம்மணத்தால் அலசி கழுவும் சாண் பிள்ளைகள்……..   அம்மாவின் சேலைதுணியை வலையாய் சுமந்து கெரண்டைக்கால் நீரில் தாவித்திரியும் கருவாச்சி தேவதைகள்…..   காற்று கூட விதேசியாய் வேண்டாமென கரையில் வந்துறங்கும் தலைமுறை கண்டவர்கள்….   இரை வரத்துக்காக ஒரு காலூன்றி மறுகால் மடக்கி தவம் கிடக்கும் வள்ளுவ கொக்குகள்…..   புறம் சென்று பொழுது சாய அகம் திரும்புகையில் தன்னழகு காண கரை இறங்கும் வாயில்லா ஜீவன்கள்…   கரை மீது […]

தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் !

This entry is part 21 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒவ்வோர் நாளும் கிடைக்கும் ஏராள மான வெகுமதிகளில் சிறிதளவு பெறுவேன் சில நாட்களில்,  சில வேளைகளில். வசந்தத் தென்றலை உசுப்பிடும் அச்சிறு துண்டும் ! நாட்கள் நகர்ந்தன ஒன்றுக்குப் பின் ஒன்றாய்,  மாந்தர் வாசலுக்கு வெளியே வருவதும் போவதும் போல ! வழிப் பாதைப் போக்கில் அவர்கள் வந்து மிதப்பது போல் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என் கலைக் குரு

This entry is part 20 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என்  கலைக் குரு மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. […]