தண்டனை யாருக்கு?

14 டிசம்பர் 2012ல் நியூயார்க்கில் நியூடவுன் நகரில் சாண்டி ஹூக் பள்ளியில் 27 குழந்தைகள் சுட்டுக் கொலை. இது செய்தி. இனித் தொடருங்கள் அறிவு பெருக்கு மிடத்தில் குருதிப் பெருக்கு குறுத்துக்கள் 27 குருதிச் சேற்றில் இனி குண்டு துளைக்காக் கவசங்கள்…

கவிதைகள்

இடப்பெயர்ச்சி கண்கள் கூசுவதிலிருந்து தப்பித்தேன் குளிர்க்கண்ணாடிகள் மூலம் வன்முறைகள் நிரம்பிய உலகில் இரக்கம் பறவையின் இறகுகளாய் உடலை மென்மையாய் வருடியது கரங்களை நனைத்த தண்ணீர் குருதியைவிட அடர்த்தியாய் இருந்தது பீழை தான் வாழ்வு சுமக்கும் பாரத்தை கைத்தாங்கலாக இறக்கி வைப்பார் யாருமில்லை…

வால்ட் விட்மன் வசன கவிதை -4 அவனுக்கு ஒரு பாடல் (For Him I Sing) (1819-1892) (புல்லின்இலைகள் -1)

(1819-1892) (புல்லின்இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார்.…

தாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் வீணைக்குள் இனிய கானங்கள் முன்பே ஒளிந்திருந்தன ! பூக்கள்  கொட்டிக் கிடக்கிறது என் கூடையில். அதே வசந்தகாலத் தென்றல் அடித்து அன்றைய தினத்தில் நம்மிருவரையும் ஆட வைத்தது…
வால்ட்  விட்மன்  வசன கவிதை -3  வரலாற்று ஆசான் ஒருவனுக்கு  (To a Historian)           (1819-1892)  (புல்லின்இலைகள் -1)

வால்ட் விட்மன் வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1)

வால்ட்  விட்மன்  வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1) வரலாற்று ஆசான் ஒருவனுக்கு மூலம் : வால்ட் விட்மன்   தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்துதந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ் களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேசஉணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்டசிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது. வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத்தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்டவசன நடைக் கவிதைகளாய்[Free…

அறுவடை

கனவுக்கும் நனவுக்கும் இடையே இருந்தேன் காலக் கணக்குகள் தப்பாகாது வசிப்பது ஏ.சி அறையிலென்றால் இறந்த பின் அரியணையில் உட்கார வைத்து சாமரம் வீசுவோர் உண்டோ விதிக்கு கை விலங்கு போட்டுவிட்டேன் என்று நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுவோர் உண்டோ…

சீக்கிரமே போயிருவேன்

ஷான் வறண்டு போன வரப்பு கருகுன அருகம் புல்லு காருங்க பறக்குது காத்தாலை கம்பெனிக்கு பஸ்சுங்க பறக்குது பனியன் கம்பெனிக்கு ஐம்பது ஏக்கரா முதலாளி அருமைக்காரர் தோட்டத்த அறுத்தறுத்து வித்தாச்சு அமெரிக்கா போறாரு புள்ள அங்க வேலயில இவருக்கொன்னும் வேலயில்ல ரெண்டு…

கோசின்ரா கவிதைகள்

கோசின்ரா   இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் இன்னும் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் எதையும் பறிக்காமல் இந்தக் காற்றில் தேவதைகளின் வாசனைகள் பறக்கின்றன கடவுள் துகள்கள் மிதக்கின்றன காதலின் அலைகள் மலர்ந்திருக்கின்றன உன் உதட்டிற்கும் பொருந்தும் முத்தங்கள் பட்டாம் பூச்சிகளாய் திரிகிறது…

தாகூரின் கீதப் பாமாலை – 45 கானம் பாட வேண்டும்

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஏனிங்கு வரச் சிரமப் படுகிறாய் நேரமில்லை என்றால் ? சிறிது கணம் வந்து தங்கியதும் செல்ல வேண்டு மென நீ சொல்லாதே ! என் ஆத்மாவிடம் ஓர் அறிவுரை…

அசிங்கம்..

ஜே.பிரோஸ்கான்- நேற்று ஒரு நாள் நானும் அவனும் நண்பர்கள் அசுசியான வார்த்தை அறுத்தல்கள் என்றும் எமக்குள் இருந்ததில்லை நட்பாகிய பொழுதுகளில். என் வெளியில் விஸ்த்தீரணம் பிரபஞ்சம் தாண்டி பேசப்படுவதாய் அவனுக்குள்ளாடிய சலசலப்பில் தானே தோற்றுப் போனதாய் கவலையாகி கண்கள் கசக்கி உறவுகள்…