கோழியும் கழுகும்…

This entry is part 2 of 48 in the series 11 டிசம்பர் 2011

வறுத்தெடுக்க  மனிதன் கொத்திக் குடிக்கப்  பாம்பு இயற்கையும்  சிதைக்க…. உறக்கம் விற்று திசையோடு தவமிருக்கிறது காக்கும் அடைக்காய். ஆகாயக் காவலன் கண்களில் மிஞ்சிப் பொரித்த ஒற்றைக் குஞ்சை உறிஞ்சும் மரணம். அருக்கனையே மறைக்கும் அதிகாரம் வானில் அடங்கினால் அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு. இறகு இத்தினிதான் எம்பி எதிர்க்கிறது இருப்பு இருக்கும்வரை!!! ஹேமா(சுவிஸ்)

மாதிரிகள்

This entry is part 39 of 39 in the series 4 டிசம்பர் 2011

அண்ணன் மாதிரி என்றும் தங்கை மாதிரி என்றும் அபத்த மாதிரிகள் வேறு மாதிரிகளாக  மாறுவதுண்டு மாமனார்  அப்பா மாதிரி மாமியார்  அம்மா மாதிரி மருமகன்  மகன் மாதிரி மருமகள்  மகள் மாதிரி ஒரு போதும்  மாதிரிகள்  அசலாவதிலை மாய மான்  என தெரிந்தும் சீதைகளுக்காக  ராமர்கள் அன்பு அற த்தை தூக்கி போட்டுவிட்டு துரத்தும் நாடகம்  நடந்து கொண்டே இருக்கிறது கங்குகள் மீது படிந்த சாம்பலை கைகள் அறியும் அலுத்துவிட்ட  காட்சிகள் என்றாலும் அலுக்காமல்  அரங்கேறுகின்றன உண்மை  […]

சில நேரங்களில் சில நியாபகங்கள்.

This entry is part 35 of 39 in the series 4 டிசம்பர் 2011

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ ஈரிமைகள் வழியாய் ஒழுகித் தொலைத்தக் கண்ணீர்த் துளிகளோடு முற்றுமாய் தொலைக்கப்பட்டிருக்கின்றன சில நியாபகங்கள். தூர மிளிரும் வான் நட்சத்திரங்களைப் போன்று பன்னாண்டுகள் பிந்தியும் ஈரச் சதைகளினூடே சிமிட்டிக்கொண்டிருக்கின்றன சில நியாபகங்கள் பெரு மழைக்குப் பிந்தைய தவளைகளின் குறட்டைச் சப்தங்களாய் இன்றளவும் இதயமதிறக் குமுறுகின்றன சில நியாபகங்கள் வர்ணமிறுத்தி சடுதியில் அகன்றுவிடும் வண்ணாத்திகளைப் போன்று அகன்றும் அகலா சில எண்ணங்களையிட்டு மறைகின்றன சில நியாபகங்கள் விட்ட மழைக்குப் பிந்தைய விடாதச் சாரலாய் சதா நொசநொசத்துக் கொண்டிருக்கின்றன […]

க‌ரிகால‌ம்

This entry is part 34 of 39 in the series 4 டிசம்பர் 2011

இனி வரப்போகும் பெயரறியா மின்னிக்கென‌ காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும், தத்துவங்களும்… பழையன தொலைத்துவிட்டு புதியன புகும் நாழிகைகள் காலத்தை மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன… கவனங்களின்றி சில‌ பிழைகளின் முகங்கள் பூசிக்கொண்ட அரிதார‌ங்க‌ள் உரிந்துவிட்ட‌து… இய‌ற்கை எக்காள‌மிட்டு சிரிக்கிற‌து உரிந்த‌ அரிதார‌ங்க‌ளின் மீது… – ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

சூர்ப்பனையும் மாதவியும்

This entry is part 33 of 39 in the series 4 டிசம்பர் 2011

செல்வக்குடியில் செம்மைப் பண்பில் மனைவியின் அன்பில் ஊறித் திளைக்கும் ஆண்மை உருவங்கள் வீதியில் உலவுகின்றன இராமனாக இராவணனாக கோவலன்களாக. ஆண்மையை சுகிக்கத் துடிக்கும் சூர்ப்பனை மாதவிகள் வீசும் தூண்டில்களின் காமப் புழுக்களுக்கு இரைகளாக கோவல மீன்களும் தூண்டில்களை விழுங்கும் சுறா இராமன்களை வீழ்த்த சகோதர இராவணன்களும் களமிறங்கியதில் கண்ணகிகளும் சீதைகளும் உயிர்ப்புப் பெறுகிறார்கள். சூர்ப்பனை மாதவிகளின் ஆட்டுவிப்பிலும் கண்ணகி சீதைகளின் சாபத்திலும் கொல்லப்பட்டவரென நீள்கிறது கோவல இராவணன்களின் பட்டியல். கண்ணகி  சீதைகளின் அகோரப் பசிகளுக்கு இரைகளாக புதிய […]

எமதுலகில் சூரியனும் இல்லை

This entry is part 32 of 39 in the series 4 டிசம்பர் 2011

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும் பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும் இறப்பர் விலை அதிகரித்த போதும் நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென உணர்கிறது இதயம் எப்போதும்   அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில் பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால் இரு பாதங்களையும் வைத்தபடி மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி   தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின் உரிமை எமக்கில்லை […]

வலையில்லை உனக்கு !

This entry is part 30 of 39 in the series 4 டிசம்பர் 2011

சி. ஜெயபாரதன், கனடா பெண்ணே நீ கண்ணுக்குத் தெரியாத கம்பிமேல் நடக்கிறாய் சர்க்கஸ் உலகில் அம்மானை ஆடிக் கொண்டு ! விழுவாயோ ? அழுவாயோ ? விழுந்து எழுவாயோ ? விழாமல் கடப்பாயோ ? அடியில் வலையில்லை பிடித்துக் கொள்ள !

“ சில்லறைகள் ”

This entry is part 29 of 39 in the series 4 டிசம்பர் 2011

– தினேசுவரி மலேசியா   பழகிப்போன பழைய முகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒப்பனைச் செய்து கொள்வது கண்ணாடியை உள்வாங்கி…   முகமூடிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளன… ஒப்பனைகளே அக்குறையை நித்தம் நித்தம் நிவர்த்தி செய்வதால்….   இங்கு கண்களால் பேசி சிரிப்பால் கொலை செய்து மௌனத்தால் மட்டுமே கதறமுடிகிறது சிலரால்….   வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்துப் பார்க்க சிலருக்கு குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரம்…   கொப்பளித்து துப்பிவிடுவதில் இங்கு யாரும் சளைத்தவர்கள் அல்ல… துப்பி கொப்பளிப்பதிலும் கூட… […]

நனைந்த பூனைக்குட்டி

This entry is part 26 of 39 in the series 4 டிசம்பர் 2011

சென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி   ஒண்டிய அதன் தனிமையை குலைத்தபடிக்கு தெருவில் கூடின நாய்கள்   ஒற்றை நாயொன்று முன்னிறுத்தப்பட்டு ’உர்’ரென்றது சிலிர்ந்து நின்றதைப்பார்த்து   பூனைக்குட்டி சிலிர்ப்பை விடுத்து ஒடுங்கிய விதத்தை ஆக்ரோஷம் விடுத்து நோக்கின ’உர்’ரானவை   நான் கடக்கையில் லாவகமாக பூனைக்குட்டியை கையிலெடுத்து பூட்டிய கேட்டினுள் விட கூம்பு போல் உடலை உயர்த்தி ஓடிச்சென்று கூரையில் தங்கியது   திரும்புகையில் கால்விரிப்பில் அனந்த சயனத்தில் பூனைக்குட்டியும் […]

வாழ்வியலின் கவன சிதறல்

This entry is part 25 of 39 in the series 4 டிசம்பர் 2011

விதைத்து விட்டிருக்கும்  வாழ்வியலின்  கவன சிதறல்  ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது .   மூன்றாம் வயதின்  நினைவின் மீது  இக்கணம் அமர்ந்திருக்கிறேன் .   அப்பா மளிகை கடை  கொண்டிருந்த காலம்  தினமும் முத்தங்களும்  ஐந்து காசும் ,பத்து காசும்  கிடைத்திருந்தது உணர்த்தி செல்லும்   நினைவுகளும்  அறிவதற்கில்லை  நாங்கள் பெற்றிருந்த  அகமகிழ்வை.   பின் காலத்தின்  பயணம் தொடங்கியது  அனைத்தும் நின்றது . வேறு வகையின் பயணம்  இனிதே தொடங்கியது .   குத்தகை நிலமொன்று  இருந்த காலம்  […]