சிற்பம்

This entry is part 26 of 45 in the series 2 அக்டோபர் 2011

  ‘பாவம் காகம், பசிக்குமென்று ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’ என்று தொடங்கிற்று உன் காக்கா கதை!   பார்த்துப் பிடிக்கவில்லை, பழகிப்பார்த்துப் பிடித்தது, சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு!   ‘ரெயின் ரெயின் கம் அவர் வே’ என்றும் ‘நிலா நிலா பறந்து வரேன்’ என்றும் பாடப்பட்டன உன் நர்சரி ரைம்ஸ்!   இவை மட்டுமல்ல அழகாய் உன் தனித்துவத்தோடு செதுக்கப்படுகிறது குழந்தையும் தான்!

சுதேசிகள்

This entry is part 25 of 45 in the series 2 அக்டோபர் 2011

அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும் ஆபத்பாந்தவர்களான அடிடாஸு’ம் ,ப்யூமா’வும் வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர்   தங்கம் தவிர்த்த வேறு உலோகங்கள் மனித இனத்திற்குக்கிஞ்சித்தும் பயனற்றவை ‘ஆதலால் காதலை’ச்சொல்ல இப்போதெல்லாம் ஆதாமும்  தங்கம் தேடி அலைகிறான்.   வெள்ளாவியில் வைத்துத் துவைத்ததால் போகாத அழுக்குடன் எல்லோரும் வாழ்நாள் முழுதும் மல்லுக்கட்ட இயலாமல் ஒரு தேக்கரண்டி பொடி தேடி அலைகின்றனர்   வெள்ளை உள்ளம் படைத்தவரை இனங்கண்டுகொள்ள அவரின் முகமும் செயற்கை வெள்ளையாய் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 50 பாகம் -1)

This entry is part 23 of 45 in the series 2 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தோன்றியது முதல் இங்கிருக்கிறேன் முடிவு வரை நானி ருப்பேன் முடிவில்லை எனது வசிப்புக்கு ! படைப்பின் போது இறைவன் தன்னிட மிருந்து பிரித்து வைத்து ஒரு பகுதி எரிப்புத் தீப்பந்தம் இந்த மனித ஆத்மா ! கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ காதல் என்பது என்ன ? இதயத்தை ஊட்டும் அமுதமாய் காதலர் கண்களின் வழியே ஆன்மா வின் மதுவில் காதல் […]

முற்றும்

This entry is part 22 of 45 in the series 2 அக்டோபர் 2011

முன் பெற்ற காலமொன்றில் தன் நிலையினை  அளவிடுவதற்கு தூற்றும் நினைவினை கொண்டு எடுத்து ஆளும் நிறைவு உண்டு . முதல் அன்பின் வீச்சு பார்வையை கூச செய்த தன்மை இனி வருவதற்கில்லை இயங்கலாமல் போன காலமொன்றில் சேகரித்து வைக்கிறேன் முதலின் அனைத்தும் . இங்கு தான் முதன் முதலாக நியாயப்படுத்தி கொள்கிறது பல நிலைகளுடைய தன் சுய விருப்பங்கள் . நீள்கின்ற அவைகளை சுய தொன்மை சுருக்கி விட்டது பல மாலை பொழுதின் கண்ணீரோடு . இன்றளவும் நினைவின் வடுவும் உறுதி […]

கள்ளன் போலீஸ்

This entry is part 16 of 45 in the series 2 அக்டோபர் 2011

நிலவும் நானும் கள்ளன் போலீஸ் விளையாடினோம் நான் போலீசாக நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும் நிலவு போலீசாக நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன் இப்படி மாறி மாறி இரவெல்லாம் விளையாட்டு சூரியன் தன்னையும் விளையாட்டில் சேர்க்க சொல்லி சண்டையிட எங்கள் விளையாட்டை கலைத்தோம் மற்றொரு நாளில் விளையாடுகையில் நிலவு மேகத்தில் மறைந்து போக்கு காட்டியது அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை போதும் விளையாட்டு வெளியே வா என அழைக்க நிலவின் ஒளிசத்தம் மட்டும் கேட்டது நிலவு வடித்த கண்ணீர் […]

த்வனி

This entry is part 10 of 45 in the series 2 அக்டோபர் 2011

இன்றைக்கு என்ன கிழமை வெள்ளியா, சனியா மாத்திரை விழுங்காமல் எங்கே தூக்கம் வருகிறது தேர் நிலைக்கு வந்துவிட்டது போல வேட்டுச் சத்தம் கேட்கிறது இத்தனை வயசாகியும் வாய் சாகமாட்டேன் என்கிறது புத்தனுக்கு ஞானம் தந்த அரசமரம் எங்கள் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது அந்திம காலத்தில் தான் மனிதனுக்கு மூன்றாவது கண் திறக்கிறது இன்றைக்கு ஏன் நட்சத்திரங்கள் இப்படி ஜொலிக்கின்றது த்வனி மாறினால் வார்த்தைகள் வசையாக மாறி எதிரிலிருப்பவரை காயப்படுத்திவிடுகிறது மூதாதையர்கள் பட்சியாக வீட்டைச் சுற்றுவதாக கிணத்தடி ஜோசியன் […]

பறவையின் இறகு

This entry is part 7 of 45 in the series 2 அக்டோபர் 2011

வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் 67 -ம் பக்கஎண் அடையாளமாக ஒரு பறவையின் இறகை செருகி இருந்தேன். மீண்டும் வாசிக்கஎடுத்தபோது 83  -ம்பக்கத்தில் பறவையின் இறகு இருந்தது. இப்பொழுது பறவையின் இறகை கையில்வைத்துக்கொண்டு கற்க ஆரம்பித்திருக்கிறேன் 67 -ம் பக்கத்தில் இருந்து 83  -ம் பக்கத்திற்கு எப்படி பறப்பதென்று? ரவி உதயன் raviuthayan@gmail.com

தாய்மை!

This entry is part 5 of 45 in the series 2 அக்டோபர் 2011

நீண்டதொரு சாலையில் மிதிவண்டியை இழுத்தபடியே என்னோடு பேசிக்கொண்டே நடந்தாய் நீ! நாமிருவரும் தற்காலிகமாய் பிரியவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியது சாலையின் பிரிவு! என்னிடம் விடைபெற்றபடியே சாலையின் வலதுபுறமாய் அழுத்தினாய் நீ உன் மிதிவண்டியை! என் கண்ணைவிட்டு நீ மறையும்வரை உன்னை பதைபதைக்கும் உள்ளத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்!! நடைவண்டியை தள்ளிக்கொண்டு உற்சாகமாய்க் கிளம்பும் தன் குழந்தை கீழே விழுந்துவிடக்கூடாது எனத் தவிக்கும் தாய் போலவே…

நவீனத்துவம்

This entry is part 37 of 41 in the series 25 செப்டம்பர் 2011

மரப்பாச்சி பொம்மை மறைத்து மயில் தோகை பக்கம் மறந்து பைசா கைச்செலவு தவிர்த்து குச்சு ஐஸ் பிசுபிசுப்பு விலகி பள்ளிக்கூட வாசல் நெல்லிக்காய் இழந்து, தெருக்கோடி விளையாட்டு அறுத்து என் மகனும் பழமைத்துவம் அளித்த நவீனத்துவம் பழகுகிறான் செயற்கையாய்……..     ராசை நேத்திரன்