கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)

This entry is part 36 of 45 in the series 9 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “சகோதரர்களே ! ஒருவருக் கொருவர் போதனை கூறிக் கொள்வீர். அதுவே உமக்கு பிழைகளைத் திருத்தவும், வீணான மன நோவைத் தவிர்க்கவும் வழி வகுக்கும். பலரின் அனுபவ ஞானமே சித்திரவதைக்கு எதிரான ஒரு கவசம் உமக்கு ! அம்முறைப்பாடு நமது எதிரிகளைக் குறைக்கும்” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ காதல் என்பது என்ன ? காதல் என்பது கவிஞனுக்குப் பெருமித உணர்ச்சி ! […]

நிலாவும் குதிரையும்

This entry is part 35 of 45 in the series 9 அக்டோபர் 2011

குமரி எஸ். நீலகண்டன்   பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய்.   ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு மேய்ந்திருக்க இறுமாப்புடன் வானம் நோக்கியது.   வட்ட நிலாவைக் கண்டு அழகிய இளவரசி தன்மேல் சவாரி செய்வதாய் நினைத்துக் கொண்டது.   முதுகில் இருப்பதாய் கூடத் தெரியவில்லை… எவ்வளவு மெல்லிய உடலுடன் என் மேல் சவாரி செய்கிறாளென இன்னும் குதூகலமாய் குதித்து குதித்து பறந்தது.   அங்கே ஒரு அழகிய தாமரைக் குளம் வந்தது. […]

சிற்சில

This entry is part 33 of 45 in the series 9 அக்டோபர் 2011

சிற்சில சொல்லாடல்கள் பிரித்து அறியப்படாமலே  வாதங்கள் என மேல்போர்வை கொண்டு ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன .. மீட்சி என்னும் சொல்லறியா அவை தனக்குள் முடங்கி  “தான் ” விடுத்து.. தர்க்கத்தில் கலந்து பிணைந்து  பின்னர் தானாய் கரைந்தும் விடுகின்றன அவைகளுள் சிலவோ நீரினடியில் வேர் பிடித்து தண்டின் வழி உண்டு எங்காவது  மலர சேற்றின் அடியில் இன்னும் சிக்கி மூச்சடக்கி கிடக்கின்றன அந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை … ஷம்மி முத்துவேல்

கொக்கும் மீனும்..

This entry is part 30 of 45 in the series 9 அக்டோபர் 2011

  கால்வலி கண்டதுதான் மிச்சம்- கொக்குக்கு.. ஓடையில் வரவில்லை ஒரு மீனும்.. வரும் மீனையெல்லாம் வலைபோட்டுத் தடுத்துவிட்டான் குத்தகைதாரன்.. கண்மாய் மீன்களுக்குக் கரைகாணா சந்தேஷம்- இரை கிடைக்கிறதாம் இலவசமாக.. மொத்தமாய் இரையாகப் போவது இப்போது தெரியாது.. இதுதான் இப்போது அரசியலோ.. அப்படியெனில், கொக்கும் மீனும் நாம் தான் !        -செண்பக ஜெகதீசன்..

துளிப்பாக்கள் (ஹைக்கூ)

This entry is part 29 of 45 in the series 9 அக்டோபர் 2011

சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம் ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல் உணவின் முடிவு மறுவுலகின் துவக்கம் – அதுவே மரணம் ஊரை இணைப்பதும் ஊரைப் பிரிப்பதும் – அதே தெருக்கள் பிறரைக் காப்பதால் தன்னைக் காப்பது – அதே தர்மம் குழந்தைக்கு வந்து பொம்மை நிறுத்தியதும் பெரியதாய் வளர்ந்ததும் […]

நாயுடு மெஸ்

This entry is part 27 of 45 in the series 9 அக்டோபர் 2011

    தண்ணி யடிசசு வந்தா தடாவாமே அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண நாயுடு மெஸ்படி ஏறு..   வாசல் எருமைங்க வால்தூக்கு தேவிலகு ஏசாதே நீமெர்சல் ஆவாதே – ராசால்லே ஓரமாய் ஆம்லெட்மேல் ஓடுதுபார் மாட்டுஈ காரம்போர்ட் காய்கணக்கா சுண்டு.   ஈமூ கறி’பா எடுத்து ருசிபாரு ஏமி முளிக்கறே ஏனத்தக் காமி தயிர்வடை ஓணும்னு தம்பிவந்து நிக்கறான் அய்ர்ர்வூட்டுப் புள்ள அனுப்பு.   (ஈமு Emu – நெருப்புக்கோழி […]

அவரோகணம்

This entry is part 23 of 45 in the series 9 அக்டோபர் 2011

பழக்கப்பட்ட உடல்களைப் போலிருந்தன அவை செய்கையும் செய்நேர்த்தியும் எத்தனை சிற்பியோ.. விரிந்தும் குறுகியும் அகண்டும் பருத்தும் ஆதிமூர்க்கங்களின் விலாசங்கள் அறிகுறிகளின் கையெழுத்தோடு. நிராசையோ., நிரந்தரச் சுவையோ., நேர் நேர் தேமாவென ஒற்றைச் சாளரம் வழி வழிந்து பெருகியது காற்றில் ஓரிதழ் தாமரையென. ஒன்றிணைந்து மிதந்து கொண்டிருந்தன.. நிறை நேர் புளிமாவிலிருந்து முற்றிலும் ஒதுங்கி.

வியாபாரி

This entry is part 21 of 45 in the series 9 அக்டோபர் 2011

மிக உன்னதமான ஒன்றைப் போன்ற பாவனைகளுடன் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளும் மிக எளிமையான ஒன்றைப் பற்றி. புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் அயற்சி ஏற்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும்’ அதன் மதிப்பை அதிகப்படுத்துகின்றன. அயர வைப்பதுபோல் தோன்றினாலும் மலையிலிருந்து ஒரு கல் மடுவிலிருந்து கொஞ்சம் சேறு பனியிலிருந்து சிறு பாறை காட்டிலிருந்து ஒரு சுள்ளி என பொறுக்கிச் சேர்க்கும் கலவை பல் நீட்டிக் கொண்டிருக்கிறது. சரளமற்ற ஒன்றை சர்வதேசத்தரம் என்ற சங்கப்பலகை போன்றதான மிதக்கும் பீடத்தில் சுமப்பவர்கள் சாதாரணரர்களைக் […]

திறவுக்கோல்

This entry is part 20 of 45 in the series 9 அக்டோபர் 2011

அகம் சார்ந்த வாழ்வை பழித்து விடப்பட்டிருக்கிறது ஆதலால் முன்னோர்களின் வழியின் திறவுக்கோல் வைத்து சரிப்பார்த்துக்கொள்ள முடிகிறது நான் எதிர் கொள்ளும் அனைத்தின் விளைவுகளும் . இதில் திறவுக்கோல் அளவுகள் பரிசோதிக்க அவசியம் இருக்கவில்லை அனைத்துக்குமான நிறைவை உள்ளடக்கியது இவை . என் அகம் பிரபஞ்ச தொன்மையில் தொலைந்து போயிந்த ஒன்று வார்த்தையின் தேடல்களில் அவை சிக்குவதில்லை மன உணர்வின் அதிர்வுகளும் அறிவதில்லை . கிடைக்க பெறாத எதுவுமே நம்பிக்கையாக்கப்படுவதால் அவ்வண்ணமே நானும் ஆக்கப்பட்டேன் . கொடுர நம்பிக்கை […]

நன்றி மறவா..!

This entry is part 19 of 45 in the series 9 அக்டோபர் 2011

பேச வேண்டுமென நினைக்கும் வார்த்தைகள்.. உள் மடங்கி குறைப்பிரசவமாய்! ஜீரணிக்க முடியா நிகழ்தலில்.. காதலுக்கான குறியீடுகள்! கவிதையின் உப்பில் உள்ளளவும் நன்றி மறவா கண்ணீர் படிமங்கள்!!! -மணவை அமீன்.