எங்கிலும் அவன் …

This entry is part 10 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

எங்கிலும் அவன் ஒளிந்தே இருக்கிறான் காலை பொழுதின் கதிரினூடே கிளம்பி மாலை மயங்கியும் கூட அவனின் உறக்கங்கள் துவக்கபடவேயில்லை அடர் வனங்களின் தருவின் இடுக்குகளில் வீழ்ந்து கிடந்த இலையொன்று கதைத்து கரைத்தது அவனின் எண்ணற்ற வெற்றி பொழுதுகளை சுழன்றடித்த பெருங்காற்று கிளப்பியது எரிந்து போன சாம்பல் நினைவுகளை பெருந்தீவின் பாரமென ஒளிந்து நின்ற பெருங்கனவின் சார்பை ஒத்தே இருந்தன அந்த இலையின் ஒரு புறம் .. மறு புறமோ  எங்கோ வழக்கொழிந்த அவன் ஒட்டிக்கொண்டு இருக்கிறான்.. மரணமென […]

புத்தன் பிணமாக கிடைத்தான்

This entry is part 8 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

காட்டிடையே வருவோர் போவோரின் விரல்களை எல்லாம் துண்டுதுண்டாய் வெட்டி நறுக்கி மாலையாக்கிப் போட்டுத் திரிந்த அங்குலிமாலாவின் துரத்தல் தொடர்கிறது. புத்தன் அகப்படவில்லை போதிமரத்தடியில் கிடைத்த ஞானத்தை எல்லோருக்கும் வாரிவழங்கி வெற்றிடமாய் போனேன் வருத்தப்பட்டு உரையாடிக் கொண்டிருந்த புத்தனின் கழுத்தில் சயனைடு பாட்டில்கள் தொங்கின இங்கொரு மண்டபத்தின் இடிபாடுகளுக்கிடையே புத்தன் பிணமாக கிடைத்தான். ஹெச்.ஜி.ரசூல்

இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி

This entry is part 7 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

    இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன் சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான். அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து புத்தகம் ஒன்றைக் காட்டி ‘ஏ’ ‘பி’ என்று சொல்லச் சொன்னாள் அம்மா. நழுவித் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான் பையன் இன்னொரு பாடலைப் பாடியபடி.   o செல்வராஜ் ஜெகதீசன்  

குற்றமுள்ள குக்கீகள் (cookies)

This entry is part 5 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

உனது செல்பேசியைக் கொந்த முயன்றதில் எனது சில நழுவிய அழைப்புகளும் கூந்தல் பராமரிப்பிற்கான குறுஞ்செய்திகளும் மட்டுமே கிடைத்தன உனது மின்னஞ்சலை புகுந்து படித்ததில் சில எரிதமும், எண்ணவே இயலாத அளவு பணப்பரிசு அஞ்சல்களும் மட்டுமே கிடைத்தன உனது இணைய அரட்டைகளை இடைமறித்து வாசித்துப்பார்த்ததில் கட்டுப்பட்டித்தன யுவதியின் சொல்லாடல்கள் மட்டுமே கிடைத்தன உனது சமூக வலைத்தளங்களின் பகிர்வுகளில் எந்த சுவாரசியமுமற்ற பொதுவான விஷயங்கள் மட்டுமே கிடைத்தன எனக்குள் அழிக்க இயலாத குற்றமுள்ள குக்கீகளாய் (cookies) இவையனைத்தும் மண்டிக்கிடக்கின்றன எப்போதும். […]

சின்னஞ்சிறிய இலைகள்..

This entry is part 4 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

* பிளவுண்ட கரிய அலகில் இரைப் பற்றுதல் துள்ளத் துடிக்க இறுக்குகிறது உயிரை உயிர் வடிவம் கனமெனவோ கனமற்றோ அசைகிறது பசியின் வயிற்றில் மரக்கிளையில் துடிக்கும் சின்னஞ்சிறிய இலைகள் மெல்ல மெல்ல இழக்கின்றன தம் நிறத்தை.. ***** –இளங்கோ

என் பாதையில் இல்லாத பயணம்

This entry is part 1 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அப்பாவிடம் அடிவாங்கி அழுது விசும்பி சோர்ந்துபோய்க் கண்ணயர்ந்த நாட்களில் எல்லாம் வீட்டை விட்டு ஓடிப்போவதாகவே கனவுகள் வந்திருக்கின்றன. எனினும் பள்ளி நாட்களில் இன்பச்சுற்றுலாவிற்கு ஏங்கிய போதெல்லாம் ஒருபோதும் வாய்த்ததில்லை பயணம். ‘ஒருதலை ராகத்’தில் கிளர்ந்த ரயில் காதலும் அப்பாவின் அதிகாரத்தால் தடம் புரண்டு போயிற்று. அப்பாவின் ‘புதிதான’ பழைய சட்டைகள் அணிந்தே பழகிப் போனதில் நான் நானாகவுமின்றி அப்பாவாகவும் இல்லாது போயிற்று வாழ்க்கைப் பயணமும். __ ரமணி

பிரசவ அறை

This entry is part 33 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

நீ பிறந்து விட்டாய் கேட்டதும் சில்லென்ற உணர்வு.. உன் அம்மாவுக்கும் எனக்கும் இடையே அரை அங்குல புன்சிரிப்பு மட்டும் கடைதெருக்களில் தென்படுகிற வேளைகளில் – எனினும் பிறப்பே, பிறப்பை பார்க்க வருவதே பரவசமாய்.. எப்போது என தெரியாமல் வெடிக்கின்றன குண்டுகள்.. முதுகில் பாய்கின்றன பாதுகாவல்கள்… உறவுகள் தருவதற்கு மறுதலிக்கிறது – தலையனை தரும் ஆறுதலை கூட சிற் சமயங்களில் .. என்ற போதும் ஏதோ ஒர் மூலையில் மிக அகண்டு,மிக அகண்டு – வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை […]

காலம்

This entry is part 32 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

மதிப்பிழந்த என் சுயத்தை வெறுமென வேடிக்கை காட்டும் பொருளாக மாற்றியமைக்க இயன்ற வரை முயல்கிறது என்னை அறியப்படாத காலம் ஒன்று . தன்னை நிருபணம் செய்வதற்கு சுயத்தை ஒன்றுமில்லாமல் செய்வதை வேடிக்கை பார்க்கிறது என்னை அறிந்து வைத்துள்ள காலம் ஒன்று . சுய அங்கீகாரம் அச்சில் பெறுவதில் இல்லை என்பதை உணர செய்கின்ற காலம் இன்னும் தோன்றியிருக்கவில்லை . காலங்கள் இணைத்துள்ள என்னை பெருவெளி மட்டுமே அறியக்கூடிய சுயத்தை பெற்றிருக்கிறேன் . வளத்தூர் தி.ராஜேஷ் .

கூடு

This entry is part 30 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தற்செயலாய் ஒரு குருவிக்கூட்டைக் கண்டேன் என் பிம்பங்களை பிரித்து மேய்ந்துவிட்டது நான்கு முட்டைகள் ஒன்று உடைந்து பிறந்திருக்க அதன் கண்கள் திறக்கவில்லை இறகுகள் இல்லாத பச்சைக்குழந்தை மூக்கு இன்னும் வளரவில்லை அதற்கு உணவூட்ட துடித்த தாயின் அன்பை அனுபவத்தை, ஆசையை எந்த கடவுள் கற்றுகொடுத்தான்? முத்துசுரேஷ்