ஆழ்வேர் நேச காதலினாலோ பாசி படர், மாசு தொடர்பினாலோ பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும், விநாடியில் மறைக்கிற அகால மரணமும் அகங்காரமும், வன்மமும் தேவையா ? அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என கேட்கிறது காதோரம்…
பின்னெப்போதும் இருந்திருக்கவில்லை அந்த உணர்வு. புரவி பிடறி சிலிர்க்க ஓடியபோதும் வியர்த்திருந்தது. காணாத ஒன்றைக் கண்டதாய் பொய்ப்பித்தது கண். நினைவுகள் தப்பிய நேரத்தில் வேர் பிடித்திருந்தது பயம். கண்ணேறு., காத்து கருப்பு., மோஹினி எல்லாம்…
காலக்கட்டத்தில் தேதி கிழிக்கப்பட்ட ஓர் இரவது! மசூதியின் முன்னில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம்! மருண்டோடி சிதறினான்.. முஹல்ல குழு நண்பனொருவன்! அதிர்ச்சியும்.. நிசப்தமும் நிலவிய தருணம் உள் நுழைந்தோம்.. நண்பர்கள்…
பூபாளம் சிறகை கொடுத்த கடவுள் பறக்கவும் கற்றுத் தருவாரா அன்பை பருகிக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்படி பசியெடுக்கும் தனிமையில் அலைகளைப் பார்த்தபடி கடற்கரையில் நின்றிருக்கின்றாயா கூண்டுப் பறவைக்கு விடுதலை அளித்தபோது ஏற்பட்ட…
1.நாள் தோறும் அண்மிக்கின்றேன்… இரக்கமுள்ள மனசே! உன் இருதயத்தில் விழுந்தேன் இறகில்லாமல் பறக்க வைத்தாயே… கருணையின் கடல் நீ என்று தெரிந்த பின்னால் தான் என் வாழ்வெனும் படகில் மிதந்து வந்தேன் உனக்குள்… ஆயினும்…
குமரி எஸ். நீலகண்டன் கிணற்றுக்குள் விழுந்து விட்டது நிலா. வாளியை இறக்கி நிலாவைத் தூக்க முயல்கையில் வாளித் தண்ணீரில் வரும் நிலா மீண்டும் கிணற்றுக்குள்ளேயே விழுந்தது. அசையும் கயிறுக்கு அஞ்சி ஆழ் கிணற்றினுள்ளேயே துள்ளி…
வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில் கந்தலாய் அவனது வழித்தடங்கள் ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய் பாவக்கனியின் அழுகல் பிசிறுகள் தொற்றாய் கிருமிகளென வார்தெடுத்த சர்பமொன்று சாத்தானின் நிழலென ஊடுருவி மாயமான மானை…
வெள்ளம் குருவிக் கூட்டோடு சாய்ந்தது மரம் என்ன ஆனதோ? நேற்றுப் பொரித்த குஞ்சுகள் வெள்ளத்தோடு நகர்கிறது கூரை சில தட்டான் பூச்சிகளுடன் சங்குச் சக்கரமாய்ப் பாம்பு அந்த ஒற்றைச் சுவரில் சில…
மேலும் பூரணப்படுத்தப்படாத பக்கங்கள் இருக்கட்டும் - இன்னும் தீர்க்கப்படாத சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கு… நீருக்குள் பிடித்த நிலா கையில் இருந்து எவ்வளவு தூரம்..? நீங்காத நினைவுகள் இதயத்திலே எந்த பாகம்..? தொலைந்து போன கால வெள்ளம்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "பொறுமையுடன் விரைந்து செல். வாய்ப்புக்கள் வாசலுக்கு வரும் போது சோம்பிக் கிடக்காதே. அவ்வழியில் சென்றால் உன் தவறுகள் தவிர்க்கப் படும்."…