– இந்திக ஹேவாவிதாரண தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை சித்திரவதையென்பது, மனித வர்க்கத்தினால் தனது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் மிகவும் கீழ்த்தரமான செயல்களிலொன்று என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இலங்கை கூட அதனை ஏற்றுக் கொண்டு ‘1994ம் ஆண்டின் 22ம் இலக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அச் சட்டத்தின் மூலம் குரூர, மனிதாபிமானமற்ற மற்றும் அவமரியாதையான சித்திரவதைகளுக்கு எதிராக நடந்துகொள்ள வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு நடந்துகொள்வதற்காக காவல்துறையினருக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் சாதாரண பொதுமக்கள் எந்தவிதமான […]
சத்யானந்தன் உயர்வு தாழ்வு, நன்மை தீமை, மகிழ்ச்சி துன்பம், உண்மை பொய், இருப்பது இல்லாதது, இனிப்பு கசப்பு இப்படி இரன்டில் ஒன்றைத் தேடுவதாகவோ அல்லது இனங்காணுவதாகவோ வாழ்க்கைகள் கழிந்து வரலாறாய் மாறின. ஆன்மீகம் என்பது இந்த இருமை நிலைகளுக்கு அப்பாற்பட்டே இருக்கிறது. நமது தேடலை இந்த இருமைகளுக்கு மட்டுமே பழகிய பார்வை த்டை செய்கிறது. புரிதலுக்கான ஒரே ஒரு திசை காட்டியாக இந்த இருமை புற உலகு சம்பந்தப்பட்டதென்பதும் ஆன்மீகம் அக உலகிலானது என்று ஜென் வழி […]
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,மலேசியா,பிஜி,இலங்கை கென்யா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்த்து சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி முடித்தவர் என்ற பெருமைக்குரிய சிற்பி கணபதி ஸ்தபதி ஆவார். கடந்த 6.9.11 அன்று பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடலின் பல பாகங்கள் இயங்கா காரணத்தால் சத்யலோகம் அடைந்தார். இவர் 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் எழுவன்கோட்டை எனும் கிராமத்தில் வைத்தியாநாத ஸ்தபதி -வேலம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது மனைவியின் பெயர் […]
அசாரே என்ற இயக்கத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பது லட்சக்கணக்கான மத்யத்தர வர்க்கத்தின் அரசியல்வாதிகளின் மீதான கோபமும், வேதனையும், கீழ்த்தட்டு மக்களின் கடுமையான அரசு ஊழியர்களின் மீதான கோபமும்தான் , இந்த இயக்கத்தின் வெற்றியின் சின்னமாக தெரிகின்றது. காந்தியின் சிந்தனையும், ஜெயப்பிரகாஷ் நாரயண் போராட்டமும் வெவ்வேறு இலக்கைநோக்கி சென்றது. இன்றைய தேவை, நாணயமான, ஒழுக்கமுள்ள, சமூக சிந்தனைகூடிய தலைமை பொறுப்பை ஏற்று, மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடக்கூடிய மனிதர்களும். அதனால் ஏற்படும் சட்டமன்றங்களும், நாடாளு மன்றங்களும் துவங்கவேண்டும். இன்றைய மந்திரிகள், […]
ஜென்னைப் புரிந்து கொள்ள விருப்பந்தான். ஆனால் எங்கிருந்து துவங்குவது? ஒரு ஜென் கதை இது: ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திக்கு வாரிசாக ஒரே மகள். எனவே குழந்தைப் பருவம் முதலே அவள் விருப்பம் எதையுமே ராஜா தட்டுவதில்லை. அதனால் அவளை வழி நடத்துமளவு யாருமே இல்லை. ராணி செய்த முயற்சிகளையும் ராஜா தடுத்து விட்டார். இளம் பெண்ணாக வளர்ந்து விட்ட இளவரசிக்கு ஒரு நாள் ஒரு கண்ணில் அரிப்பும் எரிச்சலும் வந்தது. அந்தக் கண்ணைக் கசக்கிக் கொண்டே […]
கெம் மருத்துவமனையின் ஒரு செவிலிக்கும். அருணா சென்பக்கின் கதையை எழுத வந்த பிங்கி விராணிக்கும் இடையே நடந்த ஒரு ( கற்பனை) உரையாடல். கருணையாய் ஒரு வாழ்வு…:- ************************************** செவிலி :- அருணாவின் கதையை எழுத வந்தீர்களா.. முடிக்க வந்தீர்களா.?? பிங்கி :- கருணைக் கொலை என்பதை ஏன் எதிர்க்கிறீர்கள்..? செவிலி :- கொலை என்று சொல்லும் போது அதில் கருணை எங்கே வந்தது.. இந்திய இறையாண்மைப்படியும் வாழும் உரிமைகள் குறித்தே சட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கு. கருணைக் கொலை […]
சின்ன வயதினிலே ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று. பெரியவர்களாலும் வரவேற்கப்படும் பண்டிகை. காரணம் இப்பண்டிகையின் எளிமையே. பட்டாசு சத்தம் கிடையாதல்லவா? ஒளி, ஒலி கொண்டாட்டங்களால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழ்னிலை மாசுபடுதல் என்றெல்லாம் கிடையாது. சிறுவர்கள் விரும்பும் காரணம் கொழுக்கட்டை போன்ற வினோதமான தின்பண்டங்கள். பலவிதமான கொழுக்கட்டைகள். ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்குமேல். அவைகள் மற்ற வீட்டுக்குக் கொழுக்கட்டைகளோடு பரிமாறிக் கொள்ளப்படும். பனையோலைக் கொழுக்கட்டை பட்டணங்களில் கிட்டாது. கிராமங்களில் மட்டுமே. இன்னொரு காரணம் வணங்கப்படும் தெய்வம். அதன் உருவம் […]
– தில்ஷான் எகொடவத்த தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை கடந்த வாரம் காவல்துறையில் கடமை புரிந்த சார்ஜன் ஒருவரின் உடம்பொன்று வந்தது. சுகவீனமுற்று இருந்திருக்கிறார். நீரிழிவும் இன்னும் அனேக வியாதிகளும் இருந்திருக்கின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்துத்தான் மரணம் சம்பவித்ததென உடலைக் கொண்டு வந்த உறவினர்கள் கூறினர். இருக்கலாம். காவல்துறை அதிகாரிகள் அதிகமாகக் கோபப்படுவார்கள் அல்லவா? கைகள் கட்டப்பட்ட மனிதர்களை லத்திக் கம்புகளால் தாக்குவதைத்தான் நாம் அடிக்கடி தொலைக்காட்சியில் காண்கிறோமே. அவ்வாறிருக்கையில் இரத்த அழுத்தம் ஏறாமல் இருக்குமா […]
திகார் சிறையில் அவரை அடைத்துவிட்டு உடனேயே தொடை நடுங்கியபடி மத்திய அரசு விடுதலை செய்த பிறகும் அன்னா ஹாசாரே சிறையை விட்டு வெளியேறாமல் தனது நிபந்தனைகளை முன்வைத்து அங்கேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அந்தக் காட்சி மட்டும் தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் அதன்பிறகு உண்ணாவிரதத்தை ராம் லீலா மைதானத்தில் தொடர்ந்து பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகு நிறைவு செய்யும் வரையிலும் அதற்கு அப்பாலும் ஒவ்வொரு நிமிடத்தையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய வண்ணம் இருந்தன. முதன் முதலாக பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி […]
“அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் வெற்றியாமே?!” டீ கடை பெஞ்சு முதல் பீசா கார்னர் வரை எல்லா இடங்களிலும் விவாதிக்கப் படும் முக்கிய விஷையங்களில் இது தலையாயது. ஊழலுக்கு எதிராக யாரேனும் போர் புரிய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தது, இந்த ஊழல் ஒழிப்பு போராட்டத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளது. முதலாம் சுதந்திரப் போர், இன்றைய தலைமுறைக்கு மறக்க முடியாத, பார்க்கத் தவறிய ஒரு த்ரில்லர் படம் போன்றது. இன்றைய இளைஞர்கள், பெரும்பாலும் பழைய படங்களை கிண்டல் […]