கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்

This entry is part 8 of 33 in the series 27 மே 2012

கயஸ்கான் தொடர்ந்து வெற்றுக் கூச்சல்களை போட்டுக் கொண்டிருந்தான்.வெவ்வேறு குரல்களில்  கூச்சல் போட்டு பழகிய வாய் ஒரு நாள் சோறு தின்ன மறுத்துவிட்டது.காபி குடிக்கவும் முடியவில்லை. தொழுகைக்கு ஸப்புகளில் நின்ற போது தக்பீர் கட்ட அல்லாஹுஅக்பர் சொல்லவும் முடியவில்லை. என்ன செய்யலாம்..என்று ஆலகால விஷமிறக்கும் நாட்டு வைத்தியர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டான். நாட்டுவைத்தியர் நான்கு குளுசைகளை(லேகிய மாத்திரை)கையில் கொடுத்து ஐந்து நேரம் சாப்பிட வேண்டும் என்றார். நான்கு குளுசைகள்தானே இருக்கிறது எப்படி ஐந்துநேரம் சாப்பிடுவது என்று சைகையால் கேடடபோது […]

முள்வெளி அத்தியாயம் -10

This entry is part 7 of 33 in the series 27 மே 2012

“டாக்டர் சிவராமை சந்தித்தேன். அவர் கருத்தில் ராஜேந்திரன் ஒரு பக்கம் கடுமையான மன அழுத்தத்திலும் மறுபக்கம் கற்பனாசக்தியுடைய எழுத்து முயற்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். விபரீதமான எதையும் வெளியுலகில் அவர் செய்யாததால் காலப் போக்கில் அவர் மனம் சமனப் படும் வரை காத்திருப்பதே சிறந்தது. அவர் மன அழுத்தத்துக்கான காரணமும் பிடிபடவில்லை. இது ஆரம்ப நிலையே. மீட்க முடியாத நிலைக்கு ராஜேந்திரன் போகவில்லை. எனவே நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. டாக்டர் சங்கீதா ‘ஈமெயிலை’ லதாவுக்கு அனுப்பிய பிறகு […]

பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’

This entry is part 4 of 33 in the series 27 மே 2012

  மெல்லியதாய் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் அக்கினிக்கு எதிரே நானும் கோமளாவும் மணமக்களாய் அமர்ந்திருந்திருக்கிறோம். கழுத்தை அழுத்தும் மலர் மாலையுடன் பொன்னும் பூவும் அழகு சேர்க்க சிவப்பு சரிகை ஒளிரும் பொன்நிற சேலையில் கோமளா இளஞ்சிவப்புப் பூவாய்  நாணத்தில்…! இன்னும் சற்று நேரத்தில் மஞ்சள் கயிறு மார்பில் படர, என் மனைவியாகப் போகிறாள். கோமளா என்ற பெண் இனி திருமதி விசுவநாதனாக…! கொழுந்துவிடும் அக்கினியில் இரண்டொரு முறை மரக்கழியால் நெய் வார்க்கிறார் ஐயர். அக்கினி நாக்குகள் மேலேழுந்து […]

ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்

This entry is part 26 of 29 in the series 20 மே 2012

ராகவன் தம்பி ஒரு பணிவான (அதே நேரத்தில் கொஞ்சம் நீளமான) குறிப்பு இங்கு முகநூல் என்று தூய தமிழில் குறிப்பிடாமல் ஃபேஸ்புக் என்று எழுதியிருப்பதை வை த்து சுத்தத் தமிழ்ப் பற்றாளர்கள் தயவு செய்து கோபம் கொள்ளக் கூடாது. அதே போல, டிப்பணி என்கிற சொல்லும் துய தமிழ்ச் சொல் அல்ல. சொல்லப் போனால் தமிழ்ச் சொல்லே அல்ல. குறிப்புரை எழுதுவதை டிப்பணி எழுதுவது என்று ஒருகாலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் என்ன, இப்போதும் அதேதான். எனவே, […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்

This entry is part 24 of 29 in the series 20 மே 2012

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை நீலகண்டன் வாசல் திண்ணையில் மேற்கு வடமேற்கில் ஆரோகணித்திருந்தான். முதுகில் உதய கால வெய்யில் இதமாகப் படர்ந்திருந்தது. கற்பகம் பின்னால் இருந்து ஆலிங்கனம் செய்த மாதிரி சுகம். அதெல்லாம் இப்போ அதிகமாகக் கிடைக்கிறதில்லை. தூரம் நின்னு போச்சு. இச்சை எல்லாம் கட்டுக்குள்ளே அடக்கிக்குங்கோ இல்லே தச்சனைக் கூப்பிட்டு பலகை அடிச்சு அரைக் கட்டுலே அடைச்சு மூடுங்கோ. போற வழிக்குப் புண்ணியம் தேடிண்டு கோவிலுக்கு நிதம் போறது தான் இந்த […]

மலைப்பேச்சு -செஞ்சி சொல்லும் கதை-26

This entry is part 19 of 29 in the series 20 மே 2012

29. – காலமேயிருந்து ஒருவாய் நீர் கூட அருந்தாமலிருந்தால் எப்படி. அரன்மணைக்குப்போகும் உத்தேசமில்லையா? – இல்லை. நந்தகோபால் பிள்ளை இல்லம். பிள்ளை கூடத்திலிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். ஊஞ்சல் அசைவுக்கு இடம்விட்டு வாசலையொட்டி தூணில் சாய்ந்திருந்தாள் கோவிந்தம்மாள்- அவர் பாரியாள். அதிகாலை வெயில் வீட்டில் பாதி வாசலை விழுங்கியிருந்தது. அண்டாவிலிருந்த தண்ணீரில் நீலவானத்தின் துண்டொன்று கிடந்தது. வாசலில் ஈரம் உலராத தரையில் நாற்றுபாவியதுபோல மரகதப்பச்சையில் பாசி. கூரையிலிருந்து ஊசலாடிய நூலாம்படையில் சிலந்தியொன்று ஊசலாடியது. அரசாங்கத்தின் பிரதானியென்றாலும் அவர்கள் இடையர்குலமென்பதால் […]

பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்

This entry is part 18 of 29 in the series 20 மே 2012

ஒரு ஊரில் மித்ரசர்மா என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் விடாமுயற்சியோடு அக்கினிஹோத்திரங்களைச் செய்துகொண்டு இருந்துவந்தான். தை மாதத்தில் ஒரு நாள். இளங்காற்று வீசியது. வானத்தை மேகங்கள் மறைத்தன. மழை சிறு தூறலாகப் பெய்தது. அந்த வேளையில் பசுதானம் கேட்பதற்காக அந்தப் பிராம்மணன் வேறொரு கிராமத்துக்குச் சென்றான். அங்கே வேறு ஒரு பிராம்மணனிடம், ‘’பிராம்மணா! வரும் அமாவாசையன்றைக்கு நான் யாகம் செய்யப் போகிறேன். அதற்கு ஒரு பசுவை எனக்குக் கொடு!’’ என்றான். சாஸ்திரம் சொல்லியபடி அவன் மித்ரசர்மாவுக்கு ஒரு […]

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்

This entry is part 15 of 29 in the series 20 மே 2012

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது. – வ.ந.கி -] அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் ‘தோர்ன்கிளிவ் பார்க்’… ‘டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில் அமைந்திருந்த பகுதி. ‘ஷாப்பிங் மால்’ , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், ‘டொராண்டோ டவுண் டவு’னிற்கும் அருகில் அமைந்திருந்த […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்

This entry is part 12 of 29 in the series 20 மே 2012

  (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத […]

முள்வெளி அத்தியாயம் -9

This entry is part 4 of 29 in the series 20 மே 2012

“சங்கீத் .. நீ ஒரு ‘பெக்’ எடுத்துக்கறியா?” என்றாள் லதா. “நோ.. லதா.. நான் ஒரு ட்ராப் கூட எடுத்துக்கறதில்லே. ஷேப் போயிடும். லாங்கர் ரன்ல அடிக்ஷனை அவாய்டே பண்ண முடியாது. ” “கமான். ஹியர் யூ ஆர் மை ப்ரெண்ட். நாட் மை கைனி. ஒகே?” “லுக் லதா. ஆஸ் அ டாக்டர் மட்டும் நான் இதைச் சொல்லலே. டூ யூ வாட்ச் யுவர் பிகர் இன் த மிர்ரர்?” லதா சில நொடிகளுக்குப் பிறகு […]