நாவல்  தினை              அத்தியாயம் இருபத்துமூன்று

This entry is part 6 of 7 in the series 16 ஜூலை 2023

    இரண்டாம் நாள் மாநாடு.   ராத்திரி எட்டு மணிக்கு பட்டப்பாவின் கிருஷ்ணலீலா நாடகம். நாடகத்துக்கு முன் அரைமணி நேரம் போல் பூரணி கச்சேரி என்று ஊர் எல்லாம் தமுக்கு அடித்து விளம்பரம்.  பூரணியைத் தெரியாதவர்கள் கூட யாரது என்று ஆர்வத்தோடு விசாரிக்கிற அளவு பிரபலம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டு போவதை கர்ப்பூரமய்யன் கவனிக்கத் தவறவில்லை.  வெள்ளிக்கிழமை ஒரு பிரார்த்தனைப் பாட்டு. ரெண்டு பாரதியார் பாட்டு. ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மணி நேரக் கச்சேரி என்று பெரிய […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்திரண்டு

This entry is part 6 of 6 in the series 9 ஜூலை 2023

    மதுரைப் பட்டணம் களைகட்டியிருந்தது. வழக்கமாகவே இருபத்து மணி நேரமும் கோவிலுக்கு தரிசனம் செய்யத் தேசம் முழுவதிலிருந்தும் வந்திருக்கும் யாத்ரீகர்கள் ராத்திரி ரெண்டு மணிக்கு மதுரை மண்ணில் கால் பதித்தாலும், அடுத்த பத்தாவது நிமிடம் கோவிலுக்குப் போகவும் அப்புறம் பலகாரம் பண்ணவும் ஏகப்பட்ட ஆர்வம் காட்டுவார்கள்.  ராத்திரி ஒரு மணிக்கு இட்டலி அவித்து விற்கிற தெருக்கடைகளை வேறு எங்கும் பார்க்கமுடியாது. அப்படியான இட்டலிக்கடையில் ஓரமாக மரமுக்காலி போட்டு ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள். சுடச்சுட இட்டலியும் கூடக் கருவாட்டுக் […]

ஓ நந்தலாலா

This entry is part 5 of 6 in the series 9 ஜூலை 2023

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                                        செல்வி   கல்லூரி செல்லும் பேருந்து பிடிக்க விரைந்தாள், ஆனாலும்  அது புறப்பட்டு விட்டது. ஓட்டமும் நடையுமாக வந்தவள் நின்றாள். இனி என்ன செய்வது ?   நிலையத்தைக் கடக்கும் முன் நின்றது பேருந்து, இல்லை இல்லை நிறுத்தப்பட்டது . ஆமாம் மூன்று கல்லூரி மாணவர்கள் நிறுத்தியிருந்தார்கள். நடத்துநர் இறங்கி இவளைப் பார்த்து ,சீக்கிரம்  வந்து ஏறுமா , உனக்காகதான் நிறுத்தினாங்க’ என்றார். இவள் அவர்களைப் பார்த்து நன்றிங்க என்றாள். அதில் ஒருவன் […]

விலை 

This entry is part 3 of 6 in the series 9 ஜூலை 2023

ஸிந்துஜா  ‘பதினோரு மணி ஆகி விட்டதே, இன்னும் இந்தப் பெண் வந்து சேரவில்லையே’ என்று ஜானகிராமன் பாதிக் கவலையுடனும் பாதிக் கோபத்துடனும் பால்கனி அருகே வந்த போது கீழே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியே வந்தாள் சாயா. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளருகே இருவர் வந்து நின்றனர்.  சாயா தங்கள் வீட்டை அவர்களிடம் காண்பிப்பதும் அவர்கள் அவளிடம் ஏதோ கூறி விட்டுச் சென்றதும் அவர் கவனத்தில் விழுந்தது. யார் அவர்கள்? எதற்காக இந்த நேரத்தில் வந்து சாயாவைப் பார்த்து விட்டுப் […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தொன்று

This entry is part 13 of 13 in the series 2 ஜூலை 2023

   நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தொன்று காலப்படகு காலத்தில் முன்னும் பின்னும் பத்து நாள் போகுமளவு பழுது திருத்தியிருந்தது. முழுக்க முன்னே, பின்னே நூற்றாண்டுகள் போய்வர இன்னும் நிறையச் செய்ய வேண்டியது உண்டு. வேறு கால ஓடத்தை அனுப்பி வைத்து நம்மை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து மீட்டுப் போனால் என்ன? வானம்பாடி குயிலியைக் கேட்டாள். செய்யலாம் தான். ஆனால் வருஷம் – மாதம் – வாரம் –நாள் –மணி-நிமிடம் […]

பசித்த போது 

This entry is part 2 of 13 in the series 2 ஜூலை 2023

ஸிந்துஜா  மஞ்சுவும் ரகோவும் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில்  வெவ்வேறு   செக்ஷன்களில் படித்தாலும் ஒரே தெருவில் குடியிருந்ததால் பள்ளிக்கு வந்து போக இருவரின் பெற்றோரும் சேர்ந்து ஒரே ஆட்டோவை அமர்த்தியிருந் தார்கள். ஸ்கூல் விடுவதற்கு ஐந்து நிமிஷம் முன் அல்லது பின் ஆட்டோக்காரர் சையது வந்து விடுவார். இன்று ஸ்கூல் விட்டுக் கால்மணிக்கும் மேல் ஆகப் போகிறது. இன்னும் அவர் வரவில்லை. மஞ்சுவுக்குப் பசியில் உயிர் போவது போலிருந்தது. இன்று மத்தி யானத்துக்கு சப்பாத்தி சப்ஜி பண்ணி டிபன் பாக்சில் அவன் […]

வேதனை

This entry is part 4 of 13 in the series 2 ஜூலை 2023

உஷாதீபன் ushaadeepan@gmail.com        சார்…சார்…விட்ருங்க…. – சத்தமாகவே சொன்னார் அவர். பதறிப் போய் ஓடி அந்தப் பையனைத் தூக்கப் போனதைத்தான் அப்படித் தடுத்தார். அதற்குள் அந்தப் பையனாகவே எழுந்து, வண்டியையும் தூக்கி நிறுத்தி, சட்டென்று கையிலும், காலிலும் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு,  திரும்பவும்  வண்டியை உயிர்ப்பித்து, டுர்ர்ர்….என்று சீறிக்கொண்டு கிளம்பி விட்டான். அப்போதும் இடது கையில் அவனது கைபேசி இருந்தது. இப்பயும் என்ன வேகம்?  எப்படிக் க்ளட்ச்சைப் பிடிப்பான் எப்படிப் பாதுகாப்பாய் ஓட்டுவான் என்று […]

பாடம்

This entry is part 11 of 19 in the series 25 ஜூன் 2023

ஸிந்துஜா  சோணமுத்து நடைப்பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு வாசல் கதவைத் திறந்தான். அவன் அணிந்திருக்கும் உல்லன் உடைகள் தன்னைத் தாக்குப் பிடிக்குமா என்று கேட்பதை போலச் சில்லென்று மார்கழிக் குளிர்க் காற்று உடலில் பாய்ந்து பரவியது. அவன் நிலைப்படியருகே நின்று தெருவின் இரு முனைகளின் மீதும் பார்வையைச் செலுத்தினான். குளிருக்குப் பயந்து தெருவே கல்லென்றிருந்தது. தெருவிளக்குத் தூண் களிலிருந்து கொட்டிய மஞ்சள் வெளிச்சம் தரையைக் கூடத் தூங்கப் பண்ணி விட்டது போல அவ்வளவு ஆழ்ந்த நிசப்தம். இந்த ஊரே எட்டு மணிக்கு எழுந்திருக்கும் ஊர். அதிகாலையில் […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபது             பொ.யு 1900

This entry is part 7 of 19 in the series 25 ஜூன் 2023

  கபிதாள்.  கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி உச்சரிப்பில் கொபிதா என அழைக்க ஆசை அவனுக்கு. கொபிதாளே! பௌர்ணமி, அமாவாசை ராத்திரிகளில் எல்லாம் சேர்ந்து வந்தால் இரண்டு பேரும் ராத்திரி தந்த சுத்தி செய்து, குளித்து வாசனை திரவியங்களை தாராளமாக உடம்பில் வாரியெடுத்துப் பூசி மெல்லிய கருத்த ஆடை தரித்து கதவடைத்துக் கட்டிலுக்கு பரஸ்பர அணைப்பில் விரைவார்கள்.  அது இரண்டு வருஷத்துக்கு முன். […]

நட்புக்காக

This entry is part 3 of 19 in the series 25 ஜூன் 2023

உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று ராகினிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் கேள்விப்படுவதென்னவோ முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. யாரை எப்பொழுது எப்படி மடக்குவாள் என்று யாராலுமே கூற முடியாது. மடக்குகிறாளா, மடங்குகிறார்களா தெரியவில்லைதான். இத்தனை நாள் இவளைப் பற்றியே நினைக்க வைத்துவிட்டாள்.  எந்த நேரமும் தன் நினைவில் இருந்திருக்கிறாள். படுக்கையில் […]