author

பயணப்பை

This entry is part 21 of 23 in the series 30 நவம்பர் 2014

திருவான்மியூரில் ‘சிக்னலைக்” கடந்து செல்வது என்பது பெரிய சவால். சாலைச் சந்திப்பை நெருங்கும் போதே நம்மை மனச் சோர்வு ஆட்கொள்ளும். மழை தூரிக் கொண்டே இருந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த கதிரேசனும் நானும் ‘ரெயின் கோட்’ அணிந்திருந்தோம். வாகனங்களின் இரைச்சலும் புகையும் தம் கடமையை நன்றாகத் தான் செய்து கொண்டிருந்தன. கதிரேசன் புதிதாக வாங்கி இருந்த இரண்டாம் மாடியில் உள்ள ‘ஃபிளாட்டு” க்கு கிரகப் பிரவேசம் என்று அவன் அழைப்பு வைத்த போதே நான் போயிருக்க […]

தடங்கள்  

This entry is part 14 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

  சத்யானந்தன்   நகரின் தடங்கள் அனேகமாய் பராமரிப்பில் மேம்பாட்டில் ஒன்று அடைபட ஒன்று திறக்கும்   காத்திருப்பின் கடுமைக்கு வழிமறிப்பே குப்பையின் எதிர்வினை சுதந்திர வேட்கை அடிக்கடி சாக்கடைக்குள் பீறிட்டெழும்   மண் வாசனை நெல் மணம் மாங்குயிலின் கூவல் தும்பி தேன்சிட்டு என்னுடன் கோலத்தில் புள்ளிகளாய் இருந்த காலத்தின் தடம் மங்கலாய் மிளிர்ந்து மறையும்   நகரம் நீங்கிச் செல்லக் காணிக்கை தந்தாலே நெடுஞ்சாலை அனுமதிக்கும்   ஆளுயரச் சக்கரங்கள் விரையும் வாகன வீச்சிலும் […]

சுத்தம் செய்வது

This entry is part 4 of 19 in the series 6 ஜூலை 2014

  உணவகத்தின் சுய சேவையிலும் நேரந்தான் ஆகிறது களை எடுப்பதும் சுத்தம் செய்வதும் கத்தியின்றி ரத்தமின்றி சாத்தியமில்லை என்றான் அதற்கு மட்டுமே ஆனதென்றாலும் தோசைக்கல் மேல் துடைப்பம் எப்போது பார்த்தாலும் நெருடுகிறது சொல்வதை கவனி வள்ளல்களையும் செங்கோல்களையும் உலகம் நிறையவே பார்த்தாகி விட்டது இன்னும் ஏன் பத்தில் ஒன்பது பரிதவிக்கிறார்கள் இடம் பொருள் ஏவலால் மௌனம் நகருமளவு இடம் பிடித்துத் தரும் முன்னொரு நாள் இறுக்கக் கட்டாத துடைப்பத்தில் இருந்து சிறு குச்சிகள் உதிர்ந்து மேலும் குப்பையானது

சுமை துணை

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

தொப்பி தண்ணீர் போத்தல் சிறிய கைப்பை துணிப்பை மொபைல் சார்ஜர் அடங்கிய தோள் சுமை வசவுக்கு ஏதுவாகும் நகரப் பேருந்தில் இரவுக்கு சுமையை முடிவு செய்யும் உரிமை உண்டு தாறுமாறாகக் கனவுகளைக் கிழித்து வீசும் பயணங்களினுள் எந்தக் கண்ணி தனது என்று இனம் காண எந்தப் பயணிக்கும் ஒழியவில்லை துணை சுமை இடம் மாறும் போது எழுத்து இலக்கியமாகும் அவள் முதுகுச்சுமை காட்டும் வண்ணங்கள் எனக்கு அன்னியமானவை உள்ளிருப்பவையும் தான்

தண்ணீர்கள்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

    சத்யானந்தன்   குழாயில் ஒன்று கிணற்றில் வேறு அருந்தும் கோப்பையில் பிரிதொன்று தண்ணீர்கள் தானே?   மறுதலித்தார் பின் மௌனமானார் என்னுடன்   மூன்று கைத் தோழனாய் மின்விசிறியையே வெறித்திருந்தார் இறுதி நாட்களில்   துண்டுப் பிரசுரங்களாய் அவர் பதித்த பாடல்கள் எங்கே மறைந்தன?   சுருதி மாறாத மின் விசிறிச் சொல்லாடலை அவதானிக்கும் பொழுதுகளில் அவர் நிழலாடுகிறார்   இதன் தோழமை அவரின் இலக்கணமில்லை

திண்ணையின் இலக்கியத் தடம்-39

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

சத்யானந்தன் ஜனவரி 6 2006 இதழ்: புத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல் -வெங்கட் ரமணன் தொல்குடியினரான நரிக்குறவர்கள் வேளாண் கலாச்சாரத்திற்கு முந்துபட்ட வேட்டைக் கலாச்சாரத்தை அடியொற்றி வாழ்பவர்கள். இணைப்பு பிறவழிப்பாதைகள் – குலக்கல்வியா ? தொழிற்கல்வியா ? -கோபால் ராஜாராம்- செருப்புத் தைத்தலும், தோட்டியின் தொழிலும் நிச்சயம் குலக்கல்விதான். ஆனால் பாட்டா செருப்புத் தொழிற்சாலையில் வேலைபார்ப்பதும், மோட்டார் வாகனத்தில் ஏறி தூய்மையான உபகரணங்களுடன் தெருச் சுத்தம் செய்தலும் தான் தொழிற்கல்வி. இணைப்பு ‘ வியாக்கியான இலக்கியம் […]

நீள் வழியில்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

சத்யானந்தன் தேடிச் சென்றவன் விருப்ப விடை உரிமையை நிலை நாட்ட இயலும் மடிக்கணினி கைபேசி இங்கித விதிவிலக்குப் பெற்றவை வரவேற்பு அறை பாதுகாப்பின் இறுதிக் கோடு தலையசைப்புடன் எழுந்தேன் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாள் சமாதானமாய் நின்ற இடம் திகைத்த புள்ளி நீள்வழியில் தொலைந்து போகும் இனி தன் அறைக்குள் அவள் புகலாகலாம் பெருக்கு வறட்சி இரண்டும் தண்ணீர்க் குழாயின் வீச்சுக்கு வெளியே

இயக்கி

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

சத்யானந்தன் அசையாது மேசையில் ஆசிரியர் பிரம்பில் அது இருந்தது அரை நொடியில் தொட்டுச் செல்லும் அவள் மான் நோக்கில் விடுப்பு விண்ணப்பம் கிடப்பில் இருக்கும் மேலதிகாரி மேசை இழுப்பறையில் அழைப்பைப் புறந்தள்ளும் கைபேசிகளில் இந்த அறையின் குளிர்சாதன தொலைவியக்கியில் இருக்கத் தான் செய்கிறது உயிர்துடிப்பு இல்லாமல்

திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

நவம்பர் 4 2005 இதழ்: சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- III & IV பி.கே.சிவகுமார் க்ரியேஷனுக்கும் ரெஃலக்ஷனுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. இணைப்பு வனத்தின் அழைப்பு- அஸ்வகோஸ்- ‘மகனும் ஈ கலைத்தலும்’- சிறு குறிப்பு- ப.வி.ஸ்ரீரங்கன் எத்தனையோ இரவுகளில் புலர்ந்து கிடந்த மண்ணினது மைந்தர்கள் சாய்ந்து போன உடல்களாய் சவப்பெட்டிகளில் ஈயுடன் போராடி இணைப்பு நவம்பர் 11 2005 இதழ்: ராஜ் கவுதமன் எழுதிய ‘க.அயோத்தியாதாசர் ஆய்வுகள்- ஒரு திறனாய்வு- மலர் மன்னன் ஆக தலித் என்றால் […]

பிடிமானம்

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

கதவுப்பிடிகளின் மீது வேகம் போலி நாசூக்கு தராதரம் சிலர் மட்டும் காட்டும் உரிமை அதிகார மைய அறைகளில் செயலாகப் பசையாக புழங்கும் வீட்டு வாசற் கைப்பிடியும் அவ்வாறே. அது அடிக்கடி அசையும் அமையும் சத்தம் அதிகமென்னும் அலட்டல் பாசாங்கே கைப்பிடிகளைத் தேடாதவன் வெறுங்கை வீசி வேகமாய் நடக்கிறான் வேற்றுக் கிரகம் நோக்கி இரவும் பகலும் சில சமயம் குழம்பியதாய் அசை போடும் நினைவும் நிகழும் மயங்குவதாய் எப்போதோ அசையும் கைப்பிடியில் தனக்கேதுமில்லை என்னும் தெளிவான புரிதலில் மௌனித்திருப்பார் […]