எழுத்தின் வளைவுகள் நெளிவுகள் மையப்புள்ளியாய் தொனியில் அழுத்தத்தில் மழுப்பலில் சொற்கள் சொற்றொடர்கள் கூர் முனையில் நீளத்தில் பயன்பாட்டில் வேறுபடும் கருவிகளாகும் ஆயுதங்களுமாகும் மண் வாசனை வர்ணாசிரம சுருதி அதிகார அடுக்கின் அழுத்தங்கள் ஏழ்மையின் இயலாமைகள் இவற்றுள் ஒன்று தொனிக்காத சொற்களுண்டா? வர்க்கங்களின் காப்புரிமை உடைய சொற்களுண்டு விற்பவர் மட்டுமல்ல வலை விரிப்பவர் மட்டுமல்ல தூண்டில் வீசுவோர் சொற்களின் இடையே ஒர் ஆயுதக் கிடங்கை மாயமாய் மறைக்க வல்லார் அரசியலின் […]
மனித இயங்குதலில் முதுகெலும்பு விரைவுகளில் வாகனங்கள் இவை மையமாய்க் கொள்ளும் சங்கிலி மூன்று ராட்சதக் கண்ணிகளில் காலத் தொடர்ச்சி நினைவு அடுக்குகளில் மூன்றாம் பிறையாய் சில பசுமை விரியும் காடுகள் மண்ணுள் விரையும் வேர்கள் எதன் கண்ணிகளும் ஆகா அவை உயிர்ப்பின் சுதந்திர வடிவங்கள் பிணைத்து நெருக்கி வழி நடத்தும் உறவு பணியிடச் சங்கிலிகள் அதிர்ச்சிப் புதிராய் அவ்வப்போது விலக மின்னி மறையும் விரியும் நீள் பெருவழி பாதுகாப்பு தளை […]
புதர்களும் செடிகளும் மரங்களும் போய் அழகிய பெரிய பூங்கா அளவாக வெட்டிய வரிசையாய் பூச்செடிகள் விரிந்து பரவாத வகை மரங்கள் ஒழுங்கு செய்யப்பட்ட பசும்புல் விரிப்பு கொடிகள் தோரணமாய் வளைவுகள் மெல்லிய செங்கற் சதுரங்கள் மேவிய நடைபாதை ஓரங்களில் இருக்கைகள் சிறிய தூண்களில் ஒளிரும் மின்விளக்குகள் பெரியவர் குழந்தைகள் இளைஞர் ஜோடியாய் தனியாய் வண்ண வண்ண ஆடைகளில் எத்தனை எத்தனை பேர் […]
தன் வண்டியைப் பல தளங்கள் தாண்டி நிறுத்தத் தெரியாது விலைப் பட்டையைப் பார்க்காமல் தேர்வு செய்ய மாட்டார் விற்கும் உணவுகளில் எதுவும் அவரால் ஜீரணிக்க முடியாது தான் செல்ல வேண்டிய தளத்துக்கான வழியைக் கேட்டு இளவயதினரின் இனிய பொழுதைக் கெடுப்பார் எழுதாத விதியாக ராட்சத வணிக வளாகத்தில் இல்லை ஒரு முதியவருக்கு இடம் பெரு நகரின் வழி முறைகளில் பொருந்தாத மற்றொரு தொந்தரவு மழை நகரம் கோரும் […]
அன்னா ஹஸாரே 30 ஆண்டுகளுக்கும் முன்பாக ரானேஜி காவ் சிந்தி என்னும் தனது கிராமத்தை மேம்படுத்துவதில் இயற்கை விவசாயம், சிறு நீர்த்தேக்கங்கள் எனத் தம் பொது வாழ்க்கையைத் துவங்கினார். மகாராஷ்டிர அரசில் ஊழலைக் களைய பல போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். அகில இந்திய அளவில் ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அவர் ஏற்படுத்திய மக்கள் விழிப்புணர்வு மற்றும் அதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த இந்தியரிடையேயும் கிடைத்த வரவேற்பு […]
சத்யானந்தன் பிற பட்டங்களின் நூலை அறுத்தெறிந்த காலம் முடிந்தது மரத்தின் நெருங்கிய கிளைகளில் அடைக்கலமானது இந்தப் பட்டம் நூலின் காற்றின் இயக்குதலிலிருந்து பெற்ற விடுதலை இன்னொரு சிறை எல்லாம் ஒன்றே என்னும் ஞானம் சித்தித்தது அதற்கு கவனிப்புடன் சேர்ந்து தானும் காலாவதியாகும் நாட்காட்டியின் இதழ்களில் ஒன்றாய் இருப்பதிலும் இது மேல் என்பதையும் அது அறியும் 365 சிறகை வெவ்வேறு திசையில் வெவ்வேறு வீச்சில் அசைக்கும் சுதந்திரம் காலத்துக்கு மட்டுந்தான் […]
புத்தாண்டு இரவு மணி இரண்டு விரையும் வாகனங்கள் அதிரும் பட்டாசுகள் உற்சாகக் கூக்குரல்கள் எதையும் கண்டு களிக்காது கருமமே கண்ணாய் குளிரிலும் வியர்வை வழிய மூன்றடிச் சிறுவன் மற்றும் அரும்பு மீசை ஒருவன் மாநகர நடைபாதை ஓரமெல்லாம் காலிப் போத்தல்கள் கணக்கில்லா பிளாஸ்டிக் பைகள் போத்தல்களின் மூடிகள் பிளாஸ்டிக் கோப்பைகள் அட்டை டப்பாக்கள் எலும்புத் துண்டு கறித்துண்டுகள் மீந்த பிரியாணிப் பொட்டலக் குப்பைகள் தன் உயர […]
அதிர்ச்சிக்கும் அதிர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். ஒற்றைக் குரல் எதிர்ப்பாக இல்லாமல் சமுதாயம் முழுதும் விரவும் எதிர்வாக ஒருக்கப்பட்ட அனைவரின் ஒன்று பட்ட எழுச்சியே இந்த நாவலின் மையக் கரு. நாவலின் செய்தி மிகவும் நேரடியானதும் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டதும் ஆகும். 293ம் பக்கத்தில் வரும் இந்தப் பதிவே நாவலின் சாராம்சம்: “தாய் மொழியை ஆலயத்திலிருந்து ஓரம் கட்டியது. தலித் சமுதாயத்தை சமுதாயக் கட்டமைப்பிலிருந்து ஓரம் கட்டியது. தங்கை தமக்கை தாய்மார்களை கல்விக் […]
கலையின், பெண் கல்வியின், மத நல்லிணக்கத்தின் எதிரிகள் நூறு மலர்களை வேட்டையாடினர் மதங்கள் மனிதம் வாழ கொலை வெறிக்கு அடிப்படை ஆக அல்ல மத குருமார் மதத் தலைவர் இன்னும் பொறுத்தால் ஓர் நாள் அவரும் வேட்டையாடப் படுவர் புத்தரின் புராதன சிலைகள் சிதிலமான போதே மனித குலமே தாக்கப் படும் சமிக்ஞை வந்து விட்டது கொலையே இல்லா உலகம் காணும் கனவே பண்பாடு கொலைகாரர்களைக் கண்டிக்க உலகே ஒன்று படாவிட்டால் உலகே கொலைக்களம் ஆகிவிடும் நூற்றுக்கும் […]
ஊழலை ஒழிக்க விழைகிறவர் எப்போதும் அதிகாரத்தில் இல்லாதோர் பெண்ணுரிமை பேசுவோர் அனேகமாய் ஆண்கள் கல்விச் சீர்திருத்தம் யார் வேண்டுமானாலும் பேசுவர் மாணவர் தவிர நதிநீர் பங்கு கேட்டுப் போராடும் யாரும் கேட்பதில்லை நதிநீர்த் தூய்மை அணு மின்சார அனல் மின்சார எதிர்ப்பாளர் வீட்டில் இல்லை சூரிய மின்சாரம் வாசிப்புக் குறைந்தது கவலை தருகிறது எழுத்தாளருக்கு மட்டும் ஒரே கூரையின் கீழ் செய்தி பரிமாறுவர் ஒருவருக்கொருவர் உலகின் மூலையிலுள்ள […]